தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்

இன்றிலிருந்து தினமும் ஒரு பாசுரம் படித்துவிட்டு, அதற்கு பூர்வர்க்ளின் உரையை நிதானமாக படித்து அனுபவித்துவிட்டு அதைக்கொண்டு பாசுரத்துக்கு எளிய தமிழில் எழுத முற்பட்டுள்ளேன்.இது தொடர்வதற்கு ஆசாரியன், ஆழ்வார்கள், தாயார், நம்பெருமாள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். பாசுரம் 1: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு ,பலகோடி நூறாயிரம் ,மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்விய திருகாப்பு ! Pasuram -1Pallandu Pallandu Pallayirathandu,Palakodi noorayiram ,Mallanda thinthol manivanna ,Vun sevadi sevee thirukappu! சுஜாதா… Continue reading தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 30

அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை’ இளம் பிள்ளைகளாக நாங்கள் இருந்த பொழுதே நாங்கள் அணிந்த சட்டைகளும் பேண்டுகளும் வித்தியாசமாக அமைந்ததற்குக் காரணம் இராயப்பேட்டை கவுடியா மடத்திலுள்ள ‘ஜூவல் டெய்லர்ஸ்’தான். அதேபோல அருகிலுள்ள பைலட் திரையரங்கத்தில் நாங்கள் பல திரைப்படங்களைப் பார்த்துள்ளோம். குறிப்பாக, ‘காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தை அங்கு தான் நாங்கள் பார்த்தோம்.அண்ணாநகரில் எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே, பெரிய விளம்பர நிறுவனத்தை நடத்திய திரு.இ.பி.ஜி. நம்பியார், சென்னையின் ஆட்சியராக இருந்த திரு.எம்.ஏ. ஷெரீப் இ.ஆ.ப., தலைசிறந்த குழந்தை நல… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 29

அயற் மொழிச் சொற்களின் அணிவகுப்பு இராயப்பேட்டையிலுள்ள பெசன்ட் ரோடு இல்லத்தில் இருந்தபொழுது எங்களுடைய வீட்டில் எந்தையாரின் நண்பர்கள் பலர் வந்து செல்வதுண்டு. அதில் மிகக் குறிப்பாக பெருமிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ‘நயவுரை நம்பி’ ஜெகத்ரட்சகன், மேலவை உறுப்பினர் டாக்டர். இரா. ஜனார்த்தனம், பேராசிரியர்கள் சி. பாலசுப்பிரமணியம், சஞ்சீவி, ‘அருட்பா அரசு’ கிரிதாரி பிரசாத், ‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்ரமணியம், திரு. அருள் சங்கர், திரு. வீரமணி, திரு. சுகிசிவம், வழக்கறிஞர் இரவி, ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான், ‘கவிக்கோ’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 29

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28

அருந்தமிழில் கலந்துள்ள வடமொழி / ஆங்கிலச் சொற்கள் என் அம்மாவின் ஆருயிர் தந்தையார் திரு.மாசிலாமணி பிள்ளையவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி, என்அப்பா எழுதிய நினைவுக் குறிப்பை என் தாயாரிடம் படித்துக் காண்பித்தேன். அப்போது உடனே என் அம்மா கேட்டார்கள், ‘உனக்கு என் அப்பாவை நினைவிருக்கிறதா?’ என்று. எனக்குத் தாத்தாவை மிக நன்றாக நினைவிருக்கிறது என்று நான் கூறினேன். அவர் எனக்குப் பால் கலந்து தந்த காட்சிகளெல்லாம் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது என்றேன்.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 27

நாளொரு சொல்லும் புதிய பயன்பாடும் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான ஏழு திங்கள் கழித்து இராயப்பேட்டையிலுள்ள சரோஜினி தனியார் மருத்துவமனையில் பிறந்ததிலிருந்து 1973 வரை இராயப்பேட்டையிலேயே, 10, பெசன்ட் சாலையில் வளர்ந்து வந்தேன். பெசன்ட் சாலையின் சிறப்பு என்னவென்றால், நாங்கள் மாடி வீட்டில் இருந்தோம். கீழ்தளத்தில் பொதுப்பணித்துறையின் பொறியாளர் பழனிசாமி, அவரின் துணைவியார் கமலா, அருமைப் பிள்ளைகள் மோகன், குமார், திருமதி கமலாவின் தங்கை சிவகாமி, மற்றும் திரு. பழனிசாமியின் தம்பி வழக்கறிஞர் நல்லியண்ணன் துணைவியார் திருமதி மல்லிகா,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 27

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 26

செய்யுளில் வரும் இயற்சொற்கள் இளவரசர்களின் எழிற்சோலை (Princes of Presidency) என்ற பெருமிதப் பெயர் நானிலம் புகழும் மாநிலக் கல்லூரிக்கு வழக்கிலிருந்த நிலையில், அரண்மனைக்குள் நுழைவதைப்போல் தனிப்புகழ் வாய்ந்த தமிழ்த்துறையில் இளங்கலை தமிழிலக்கியத்தில் 1985-இல் இணைந்தேன். தமிழ்த்துறையில் பணியாற்றிய பதினேழு பேராசிரியப் பெருமக்களை (‘Major’ P. பாண்டுரங்கன், (தமிழ்த்துறைத் தலைவர்), ‘சிந்தனைத் திலகம்’ இ. மறைமலை, ‘அன்பின் அன்னை’ இராசலட்சுமி, ‘கவிவேந்தர்’ மு. மேத்தா, ‘கவிதைப் பேரொலி’ பொன் செல்வகணபதி, ‘இலக்கணச்சுடர்’ இரா. சண்முகம், ‘இலக்கண ஒலி’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 26

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 14

அன்றே துளிர்த்திருந்த அறிவியல் சிந்தனைதொல்காப்பியத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பல்வேறு இயல்புகள், பழங்கால வாழ்க்கை முறைமைகள், இன்றும் போற்றிப் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு, ஒரு சில, புது உலகத்திற்கும் வழக்கங்களுக்கும் இன்றைய முடிவுகளுக்கும் ஒத்து வர இயலாத நிலையுடையதாயினும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த பழந்தமிழர் வரலாற்றுப் பெட்டகம் என்பதை நினைவூட்டும் கருவூலம் என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்ளும்போது, அவற்றுக்கெல்லாம் சிகரமாக மரபியலில் பின்வரும் நூற்பா அமைந்துள்ளதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே – 1இரண்டறி… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 14

அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15

சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார்.இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணிசூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக செய்து… Continue reading அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 25

இந்துத்தானியம், இந்தி மொழிச் சொற்கள் தமிழில்பங்குகொண்ட வரலாறு பெருமக்களே! கடந்த 24 வாரங்களாக நான் எழுதிவரும் மொழியியல் கட்டுரை பெரும் வரவேற்புப் பெற்று பலர் பல வினாக்களை எனக்கு மின்னஞ்சலிலும், கருத்துகளை தொலைபேசியிலும் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். ஐந்தாம் வகுப்பு பயிலும்போதே என்னுடைய கணக்காசிரியர் திருமதி இராஜலட்சுமி அம்மையார், நான் சரியாகக் கணக்குப் பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை என்பதை என்னிடம் சுட்டிக்காட்டினாலும், அதே… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 25

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-24

பாரசீகம் மற்றும் பிறநாட்டு மொழிச்சொற்கள் தமிழில் கலந்த வரலாறு என் அருமைத்தம்பி தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரான பரதனும், என்னுடைய மைத்துனர் புகழ்வாய்ந்த மென்பொறியாளர் தங்கவேலு இராமலிங்கம் என்கிற சக்தி ஆகிய இருவரும் அடிக்கடி என்னிடம் சொல்லுவது, எந்தத் தகவலையோ, தரவையோ, கணக்கையோ, மருத்துவ, பணிக் கோப்புகளையோ ஐந்து நிமிடத்திற்குள் கணினியிலிருந்து மீள எடுப்பதில் தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டுமென்று. அங்ஙனம் இல்லையென்றால், கணினிப் பயன்பாட்டில் நீங்கள் வளரவேயில்லை என்பது பொருளாகும் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். இன்றைய இளைஞர் உலக… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-24