தினம் ஒரு பாசுரம் 6-திருப்பாணாழ்வார்

பாசுரம் 6: எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கிவந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனைபந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. Paasuram 6: Yendai thandai thandai thandaithum moothappan yezhpadikaal thodangi,Vandhu vazhi vazhiyat seiginrom thiruvona thiruvizhavil,Andhium podhil Harivuruvagi hariyai pazhithavanai ,Panthanai theera Pallandu pallayirathu aandu yendru paduthume.

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 34

‘ஆய்வுக்கும் கலைக்கும் ஓய்வில்லை’ ஆங்கில அரசு உருவானதும் பல்வேறு பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளிகளையும் மேனிலைப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்க நினைத்தார்கள். அந்த வகையிலேதான் பல்கலைக்கழகமாக கல்கத்தா பல்கலைக்கழகம், பம்பாய்ப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மூன்றும் முதலில் உருப்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து உருப்பெற்று ஓங்கியதுதான் தில்லிப் பல்கலைக்கழகம். தில்லிப் பல்கலைக்கழகம் பரந்து விரிந்த இடத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பல்கலைக்கழகமாகும். தில்லிப் பல்கலைக்கழகத்தில் பழமை பெரிதும் போற்றப்படுகிறது என்பது போன்ற கருத்தால் பிறகுதான் புதுமை உணர்வை வளர்க்க சவகர்லால் நேரு… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 34

தினம் ஒரு பாசுரம் 5-திருப்பாணாழ்வார்

பாசுரம் 5 அண்டக் குலத்துக்கு அதிபதியாகி* அசுரர் இராக்கதரை*இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த* இருடீகேசன் தனக்கு*தொண்டைக் குலத்தில் உள்ளீர்* வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி* பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே Paasuram 5 Anda kulathiku adhipadhiyagi asurar irakkatharai,Indai kulathu Yeduthu kalaindhu irudikesan thanakku,Thondai kulathil ulleer!vandhu adithozhudu aayiram namam solli,Pandai kulathai thavirthu pallandu pallayirathaandu yenmino

தினம் ஒரு பாசுரம் 4-திருப்பாணாழ்வார்

பாசுரம் 4: ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே Paasuram 4: Yedunillathil iduvathan munnam vandhu yengal kuzhaam pugundu,               Koodu manamudaieergal vaampozhi vanthollai koodumino,               Naadu nagaramum nangariya Namo Narayana yendru ,               Paadum manamudai patharooleer! Vandhu Pallandu koorumeeno!

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்) நாக்கு… Continue reading தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

தினம் ஒரு பாசுரம் 3-திருப்பாணாழ்வார்

பாசுரம் 3: வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொண்மின், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம், ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள், இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. Paasuram 3:   Vazhapattu ninreerul yeere’l vandhu mannum mannamum konnmin ,          Koozhatpattu ninneergalai yengal khuzhuvinil pughudal vottom,          Yezhaat kalum pazhippilom nangal irrakathar vaazh illangai ,         … Continue reading தினம் ஒரு பாசுரம் 3-திருப்பாணாழ்வார்

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 33

‘கலப்புச்சொற்களைத் தவிர்ப்பதில்லை’ முதுகலைமுடித்து முதுநிலை ஆய்வு (M.Phil.) வகுப்பில் இணைந்தேன். அவ்வகுப்பில் 16 பேர் இணைந்து படித்தோம். பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும், பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் பேராசிரியர் சித்ரா மற்றும் மல்லிகா, செந்தாமரை, மூர்த்தி, மகாதேவராவ் போன்றோர் என்னுடன் பயின்றனர்.எனக்கு இளம் பிராயத்தில் எதைப் படித்தாலும் அப்பாடத்தை ஒட்டிய இடங்களைப் பார்க்க வேண்டும், படித்த நாடகக் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் என் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும். ஆறாம் வகுப்பில் செஞ்சிக்கோட்டை… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 33

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 32

‘ வழக்குச் சொற்கள் முடிவதில்லை ’ சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றபோது,முனைவர் சி. பாலசுப்பிரமணியம் – சங்க இலக்கியத்தையும், முனைவர் வ. ஜயதேவன் – அகராதியியலையும், முனைவர் மா. செல்வராசன் – இக்காலம் (ம) இடைக்காலம் மற்றும் படைப்பிலக்கியத்தையும், முனைவர் இ. சுந்தரமூர்த்தி – தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தையும், முனைவர் அ. அ. மணவாளன் – இலக்கியத்திறனாய்வு ஒப்பிலக்கியத்தையும், முனைவர் ந. தெய்வசுந்தரம் – பொது மொழியியலையும், முனைவர் இன்னாசி, முனைவர் பொன்னுசாமி மற்றும் ஆய்வு மாணவர்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 32

தினம் ஒரு பாசுரம் 2-திருப்பாணாழ்வார்

பாசுரம் 2: அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ,வடிவாய் உன் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ,வடிவார் சோதி வலதுறையும் சுடராழியும் பல்லாண்டுபடைபோர்க்குக்  முழங்கும் அப்பஞ்சசனியமும் பல்லாண்டே ! Pasuram 2:                Adiyomodum ninodum privindri aayiram pallandu,                Vadivai nin valarmarbhinil vazhkindra mangaiyum pallandu,                Vadivaar jothivalathuraiyum soodarazhiyum pallandu,                Padai porikku muzhangum  app panjya sanniyamum pallande!

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 31

‘வழக்குச் சொற்கள் முடிவதில்லை’ சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முழுநேர வகுப்பில் இணைந்து, பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் அறிவுரைக்கிணங்க போராசிரியர் வ.ஜெயதேவனிடம் முதுநிலை ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் வ. ஜெயதேவன் உயர்ந்த சிந்தனையாளர்; அடுத்தவரை ஊக்குவிக்கும் மனமாட்சியும், மதிநுட்பமும் வாய்ந்தவர். பல்வேறு செய்திகளைத் தேர்ந்து தெளிந்து முடிவுகளைக் கூறுபவர். பேராசிரியர் ஜெயதேவன் போன்றவர்கள் தொடக்கத்திலேயே அயல்நாடுகளுக்குச் சென்றிருந்தால், அவருடைய அறிவுப் பெருமிதம் உலகெல்லாம் பரவியிருக்கும். போதுமென்ற மனமே அவருடைய புலமைக்கு அமைதி மனத்தைத் தந்துவிட்டது. கவியரசர் ஈரோடு தமிழன்பன் எழுத்தெண்ணி… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 31