அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15

சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார்.இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணிசூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக செய்து… Continue reading அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 15

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 13

காலமும் கருத்தும்தொடர்ச்சி … இங்கே எடுத்துக் காட்டிய “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் !” என்று பாரதியார் பாடியது முன்னாலா ?அல்லது பிற்காலத்திலா என்றால், பிற்காலத்திலே தான் என்று நாமும் எண்ண வேண்டி வரும்.ஏனென்றால், பல தெய்வங்களை, காளியை, மாரியை, கண்ணனை, பிரமனை, சிவனை, சக்தியை இப்படித் தெய்வங்களைப் பலவாறாகப் பிரித்துப் பாடியுள்ளார்.இவையெல்லாம் முதல் தொகுப்பில் இடம்பெற்றுப் பின்னர் எழுதப்பட்ட கவிதைகளெல்லாம் முதலிலே வைக்கப்பட்டு, முதலிலே எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் பிற் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டு,… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 13

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 14

பெருமக்களே…கலைமாமணி சூரிய பிரகாஷ் குயில் பாட்டை மிக இனிமையாகப் பாடி கடந்த பதினைந்து வாரங்களாக, பல்வேறு நிலைகளில் அந்தப் பாடல்களைப் பாடியும், அதற்கேற்ற சில உரை விளக்கங்களையும் அங்கிங்கெனாதபடி சொல்லி நான் மகிழ்ந்து வருகிறேன்.பெருமக்களே!குயிலினுடைய கோலத்தை நாம் ஒவ்வொரு படலமாகப் பார்த்து மகிழ்ந்தோம்.சென்ற வாரம் குயிலும் காளையும் எப்படியெல்லாம் அவர்கள் காதல் வயப்பட்டனர் என்று சொல்லிக் காட்டி, இந்தக் காளை பெறுகின்ற மகிழ்ச்சியும் இன்பமும் கவிஞராகிய நான் கூடப் பெறவில்லையே என்று பாரதி ஏங்குவதையும் கண்டு நான்… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 14

மஹாகவி

” ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம் .. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்… “ #மஹாகவியை #மனதாரப்_போற்றுவோம்.

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-10

பெருமக்களே…பாரதியின் குயில்பாட்டை மிக வனப்புற, அழகாக பெருமிதமாக, எல்லோரும் இப்படியெல்லாம் பாடிக் காட்ட முடியுமா குயில் பாட்டை…எங்கள் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிக் காட்டும் விதத்தை நாங்கள் கண்டு எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம் என்று அனைவரும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.பெருமக்களேபாரதியினுடைய மாபெரும் காப்பியமான குயில் பாட்டை படலம் படலமாக, மது சுரக்கும் வரிகளை மிக அழகாக, தன்னுடைய வசீகரமான குரலில் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடுவது நமக்கெல்லாம் பெருமை.எனக்கென்ன பெரிய பெருமையென்றால்,சூரியபிரகாஷ் அனைத்துப் பணிகளையும் செய்து விடுவார். நான் அங்கிங்கு… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-10

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 12

காலமும் கருத்தும் சிந்தனையாளர்கள் பிறந்த நாளிலிருந்து வளர வளரத் தமது போக்கிலும் – நோக்கிலும் மாறுபாடு காண்பார்கள் .அரசியல் வாணர்கள் தாம் கட்சி மாறுவதாலும் தமக்கு அமையும் தலைமையைப் பொறுத்து தமது கோட்பாடுகளை வேறு வகையில் அமைத்துக் கொள்வதும் இயப்பு .இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் வாழ்வு முழுவதும் எழுதிய கதை ,கட்டுரைத் தொகுதிகள் தொகையாக வெளியிடப்பெறுகின்றன .தொடக்கத்திலிருந்து பார்த்தால் ஆசிரியர் ஆசிரியர் தம் மனங்களை எவ்வெக் காலங்களில் மாற்றிக் கொண்டனர் என்பதைக் காணலாம் .இதனால் தான் முந்தைய… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 12

அருளின் குரல் வரிகள்-04

மாங்குயிலுக்கு தீங்குரல் தந்த மாமணி! இசை வாணர் சூர்ய பிரகாஷின் இசை மழை மிக உன்னதமான மாமழையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக பாரதியாரி..ன் உயிர்ப் பாட்டான குயில் பாட்டை ஊன் உருக அவர் இசைத்துக் காட்டியிருக்கிறார். அலைபுரளக் கரை புரள இராகங்கள் அவர் குரலில், வழிந்தன. இது குறித்து, உலகிலிருந்து பல்வேறு பெருமக்கள் எல்லாம் என்னை அழைத்து குயில் பாட்டை இப்படி உருக்கமாக பாடுகிறாரே, கலைமாமணி சூர்ய பிரகாஷ், அவரை என்னென்று புகழ்வது? என்னென்று… Continue reading அருளின் குரல் வரிகள்-04

அருளின் குரல் வரிகள்-03

பாரதியின் குயில் பாட்டு ========================== பெருமக்களே, குயில்பாட்டின் இரண்டாம் இயல்  தொடங்கியது. மிக அற்புதமாக நம்முடைய கலைமாமணி சூர்யபிரகாஷ்  தொடக்கத்திலிருந்து இதை மிக அழகாக “காதல், காதல், காதல் அது போயின் சாதல், சாதல், சாதல்” என்று அந்த வரிகள்தான் இப்போது இந்தப் பாடலினுடைய உயிராக அமைகிறது.  இந்த வரிகள் வைர வரிகள்; சாதனை வரிகள்; கல்வெட்டு வரிகள்.  சாசன வரிகள், இளையோரின்  இதய கீதம். உலகெங்கும் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த தேன் வரிகள். இந்த வரிகளைப்… Continue reading அருளின் குரல் வரிகள்-03

அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு-01

சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார். இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணிசூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக… Continue reading அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு-01

பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி

இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவி யென்று பலராலும் ஏசப்பட்டேன் ” என்று நேர்பட உள்ளத்துணிவோடு திருமதி. செல்லம்மா பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் வாசித்தேன். இப்போது பார் புகழும் பாரதியார் அப்பொழுது வாழ்ந்த நிஜக் கதை. பல இடங்களில் வாசிக்கும் எனக்கு கண்ணீர் வந்தது. உணர்ச்சிப் பிழம்பாக இருந்த பாரதியார் தான் எழுதியபடியே வாழ்ந்திருக்கிறார்; வாழ்ந்ததை எழுதியிருக்கிறார் என்பது திருமதி. செல்லம்மாவின் வார்த்தைகளில் தெரிகிறது. பாரதியாருக்கு என்னைப் போலவே தோசையும் காப்பியும்… Continue reading பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி