அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28

அருந்தமிழில் கலந்துள்ள வடமொழி / ஆங்கிலச் சொற்கள் என் அம்மாவின் ஆருயிர் தந்தையார் திரு.மாசிலாமணி பிள்ளையவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி, என்அப்பா எழுதிய நினைவுக் குறிப்பை என் தாயாரிடம் படித்துக் காண்பித்தேன். அப்போது உடனே என் அம்மா கேட்டார்கள், ‘உனக்கு என் அப்பாவை நினைவிருக்கிறதா?’ என்று. எனக்குத் தாத்தாவை மிக நன்றாக நினைவிருக்கிறது என்று நான் கூறினேன். அவர் எனக்குப் பால் கலந்து தந்த காட்சிகளெல்லாம் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது என்றேன்.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-20

வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு…………………………………………………………..இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-20

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13

மணியும் பவளமும் விரவிய மாய மாலை..! ================================================= உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார். 1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது. 2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13