“எம்முளும் உளன் ஒரு பொருநன்” எண்பதுகளின் தொடக்கத்தில் எந்தையார் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் பட்டிமன்றங்களில் நடுவராக உரையாற்றுவதற்கும் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று உரையாற்றி மகிழ்வித்தார்.செஞ்சி என்றால் அப்பன்ராஜ் (திருவாமூர் சமணத் திருமடத்தின் தலைவராக உள்ளார்),திருச்சி என்றால் திரு.குணசேகரன் (கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் (ஓய்வு)),தஞ்சை என்றால் இராஜேந்திரன், மாயவரம் என்றால் அண்ணல் இராஜசேகரன்,சேலம் என்றால் சண்முகம், நெல்லையென்றால் முருகன், செங்கோட்டை என்றால் ஆசிரியர் ஜனார்தனன்,தென்காசி என்றால் டாக்டர் பத்மானந்தன்,நாகர்கோயில் என்றால் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,கிருஷ்ணகிரி என்றால்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 41
Category: Tamil Language
தினம் ஒரு பாசுரம் 10-திருப்பாணாழ்வார்
பாசுரம் 10: எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்டஅந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலையபைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. Paasuram 10: Yennalum peruman undran kadio menrezhudhapatta ,Annalle adiyongkaladi kudil veedu petru undhakaan ‘Sennaal thotri thiru madurai ut silai kunithu inthalai ,Paindhavane unnai Pallandu koovudhume!
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15
காலப்பேழையைத் திறந்த கலைஞர் திறம் !பச்சையப்பர் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த நிறைவாண்டில் 1957-58 இல் நாள் நிகழ்ச்சிக்குறிப்பில் வரலாற்றுப்பண்பாட்டுப் பேரறிஞர் தாயன்பி உரையாற்றுவார் என்றிருந்தது .மயிலையில் சாஸ்திரி அரங்கில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. எண்ணினால் எழுபதுபேர்வந்திருப்பார்கள்.அவ்வளவுபேருமவரலாற்றுத்துறைப்பேராசிரியர்கள் ,அறிஞர்கள் ,இதழாளர்கள் என்று அவை நிரம்பி வழிந்தது . அணிந்தபடி ஒருவர் விரைந்து வந்தார் .அவர் தான் அறிஞர் தெ பொ மீ ,அறிஞர் பெ நா அப்புசாமி எழுந்து நின்று அவருக்கு இடம் தந்து விட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40
“ வாழ்வியல் காட்டிய வளம் ! ” சென்னையில் வளமனைகளின் வாயில் முகப்பில் நாய்கள் ஜாக்கிரதை ( Beware of Dogs ) என்ற பெயர்ப்பலகை வாடிக்கையாகக் காணலாம். அவ்வண்ணமே எங்கள் அண்ணா நகர் இல்லத்தில் எந்தையார் புதிய தொடராக ‘ விழிப்போடு வருக ’ என்ற பெயர்ப்பலகையை வைத்திருந்தார். இப்பெயர்ப்பலகை அந்நாளில் பல வார இதழ்களில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.1974 முதல் 1998 வரையில் எங்கள் இல்லத்தின் அசைக்க முடியாத அருந்துணையாக நான்கு கால் நண்பராக,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40
தினம் ஒரு பாசுரம் 9-திருப்பாணாழ்வார்
பாசுரம் 9: உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டுதொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. Paasuram 9: Uduthu kalaindhu nin peedhagavadai udduthu kalanthundu ,Thodutha thuzhai malar choodi kalaindhana choodumith thondargalom,Viddutha disai karuman thiruthi thiruvona thiruvizhavil ,Padutha painnaganai palli kondanukku korudhume!
அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20
பெருமக்களே!முன்னொரு பிறவியிலேயே நீ ஒரு அழகிய பெண்ணாக வேடர் தலைவன் மகளாக பிறந்து இருந்தாய் அல்லவா!ஒரு நாள் மாலை சின்ன குயிலாகிய நீயும் உன் தோழிகளும் மின்னல் கொடிகளாய் ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டே இருந்தீர்கள்.உன்னையே நினைத்து இயங்கிக் கொண்டிருக்கும் உன் மாமன் மகன் மாடன் உன்னை மணந்து கொள்வோம் என்ற கனவுலகில் தேன்மழை நாட்டு வேடன் மகன் நெட்டைக் குரங்கன் நேராக நின்று தந்தையை மிரட்டி உன் மனம் பற்றி நினையாமல் மனம் நிச்சயித்து சென்றுள்ளான்.இவர்… Continue reading அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு -20
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 38
“தண்ணளி பொழிந்த தாயுள்ளம்!” நான் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது என் அம்மாவிற்குப் பெறர்கரிய வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு அவர்கள் நான்காண்டுகள் அயன் முகமையில் (Deputation) பணியாற்றுவதற்கு வட ஆப்பிரிக்காவிலுள்ள இலிபியா நாட்டிற்குச் செல்வதற்கு ஆணை கிடைக்கப்பெற்றது. சூலைத் திங்கள் 1979-ஆம் ஆண்டில் தன்னந்தனியாகப் புறப்பட்டு, இலிபியா நாட்டின் இரண்டாம் தலைநகரமாகத் திகழ்ந்த பென்காசியில் அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்துணையாகச் சென்னை மருத்துவக் கல்லூரியில் அவரோடு இணைந்து பயின்ற மருத்துவர் கதீஜாவும்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 38
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 37
“வாழ்வுச் சாரலும் வண்டமிழ் தேறலும்!”கவியரசியார் சௌந்திரா கைலாசம் அம்மையார் என்னை அழைத்துத் தன் இல்லத்திலுள்ள நூலகத்தில் பழைய நூல்களையெல்லாம் சீர்பெற அடுக்கவும், கிழிந்த தாள்களில் உள்ள கவிதைகளை மீளச் செம்மையாக எழுதித் தருவதற்கும் நல்ல தமிழார்வமுள்ள ஓர் இளைஞரை எனக்கு அறிமுகம் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னுடைய எம்.ஏ. வகுப்புத் தோழரான மகாதேவ ராவினை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். காரணம், அவருடைய கையெழுத்து முத்து முத்தாக இருப்பதால் அப்பணியை அவர் செவ்வனே செய்வார் என்ற… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 37
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 36
“சங்க இலக்கியச் சாரலிலே” பங்குச் சந்தை வாயிலாகப் பொதுமக்களிடமிருந்து பங்குகளாக நிதி திரட்டுகின்ற நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடுகின்ற சிறப்பு வாய்ந்த நிறுவனமாகக் கிளியா நிறுவனம் திகழ்ந்தது. சென்னையில் முதன்முதலாக 06.05.1992-ஆம் நாளன்று இரு நிறுவனங்களின் (பென்டாபோர் மென்பொருள் நிறுவனம் மற்றும் எஸ்.ஐ. வீடு கட்டும் நிறுவனம்) பங்கு விளம்பரங்களை வெளியிட்டோம். அன்று முதல் 1997 வரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுக் கருப்பு வெள்ளை, வண்ண விளம்பரங்கள், இந்தியா முழுதும் செய்தியாளர் கூட்டங்கள், பங்கு முகவர்கள் கூட்டங்கள்,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 36
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35
“வளர்க வாழைக்கன்று” ஒருமுறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இவ்வாறு எழுதியிருந்தேன். அதாவது, முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய ‘டிஷ் ஆன்டெனா’ சென்னைக்கு வந்தபொழுது, அதை விளம்பரமாக வரைவதற்காகப் பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வந்திருந்தார்கள். யாரோ சொன்னார்கள் என்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரம் வரைவதற்காகத் தீர்மானித்தார்கள். ‘டிஷ் ஆன்டெனா’ மூலமாகத் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சன் டிவி, ஜெயின் டிவி, ஜீ டிவி, சிஎன்என் டிவி, பிபிசி டிவி இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ‘ஆன்டெனா’ உதவுகிறது… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35