“பார்த்திபன் கனவும் துணிவும்” உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசி முடித்து அமர்ந்திருந்தபொழுது, புதுமுகமான நல்லிளைஞர் ஒருவர் என் தோளைத் தட்டி ‘வாருங்கள், ஸ்டெல்லா மாரீசு மகளிர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழாப் போட்டிக்குச் செல்லலாம்’ என்று தன்னுடைய நண்பரின் சீருந்தில் அழைத்துச் சென்றார்.அறிமுகமே இல்லாத திருமுகம் அவர். நேர்த்தியான உடலமைப்பு, பம்பரம் போல் சுழலும் விழிகள், கற்பூரம் போல் பற்றிக் கொள்ளும் நட்புக் கேண்மை. சிரித்துக் கொண்டே என் பெயர் பார்த்திபன் என்றார்.நான் உடனே பேராசிரியர்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 49
Tag: arunthamizh
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 45
“எண்ணிப் பார்த்து ஏற்றம் பெறுக” என் வலது காலின் தசைப்பகுதியில் காயம்பட்ட ஒரு வடு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளது.அவ்வடுவைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒரு நிகழ்வு நெஞ்சை நெருடும்.நான் நான்காம் வகுப்புப் (1976) பயிலும்பொழுது, மாலைவேளைகளில், கிரிக்கெட் மட்டையும் ஓட்டமுமாக இருப்பது வழக்கம்.விளையாட்டுத் திடலிலிருந்து அண்ணாநகர் இல்லத்திற்கு வேகமாக வந்து எங்கள் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டுவதுபோலப் பாய்ந்து தாவிக் குதிக்கும் முன், பாதி சுவருடன் நானும் தரையில் விழுந்தேன்.விழுந்த வேகத்தில், எழமுடியாமல் தத்தளித்தேன். அப்பொழுது உதவிக் கரம் நீட்டி… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 45
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43
“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!” சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வு நெருங்கி வந்த அந்த நேரத்தில் எங்கள் அண்ணாநகர் இல்லம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாகவே எங்கள் வீடு பொதுவரங்கம் நடப்பது போலத்தான் இயங்கும்.அப்போது என் தந்தையார் தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மூதறிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் எனப் பல நிலையினரைக் கண்டு அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மேலும் அன்றைய… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 42
” சான்றோர் சான்றோர் பால ராப ” ! நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வகுப்பாசிரியர்களுடைய பயிற்சியை விடக் கூடுதலாகத் தனியாசிரியர்களை அமர்த்தி எங்கள் பெற்றோர்கள் கண்காணித்ததை எண்ணிப் பெருமையடைகிறேன்.தொடக்க காலத்திலேயே அதாவது முதல் வகுப்புப் பயிலும்போதே இராயப்பேட்டை பெசன்டு சாலை இல்லத்தில், ஆங்கிலோ – இந்திய மாதரசியான திருமதி ஒகோனா ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிக்கும் ஒலிப்பு முறையைக் கற்றுத் தந்தது இன்றும் என்னுடைய ஆங்கிலச் செழுமைக்கு அடிப்படையாகும் .கணக்குப் பாடத்திற்காக என்னுடைய மாமா தலைமைச் செயலகத்தில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 42
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40
“ வாழ்வியல் காட்டிய வளம் ! ” சென்னையில் வளமனைகளின் வாயில் முகப்பில் நாய்கள் ஜாக்கிரதை ( Beware of Dogs ) என்ற பெயர்ப்பலகை வாடிக்கையாகக் காணலாம். அவ்வண்ணமே எங்கள் அண்ணா நகர் இல்லத்தில் எந்தையார் புதிய தொடராக ‘ விழிப்போடு வருக ’ என்ற பெயர்ப்பலகையை வைத்திருந்தார். இப்பெயர்ப்பலகை அந்நாளில் பல வார இதழ்களில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.1974 முதல் 1998 வரையில் எங்கள் இல்லத்தின் அசைக்க முடியாத அருந்துணையாக நான்கு கால் நண்பராக,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 33
‘கலப்புச்சொற்களைத் தவிர்ப்பதில்லை’ முதுகலைமுடித்து முதுநிலை ஆய்வு (M.Phil.) வகுப்பில் இணைந்தேன். அவ்வகுப்பில் 16 பேர் இணைந்து படித்தோம். பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும், பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் பேராசிரியர் சித்ரா மற்றும் மல்லிகா, செந்தாமரை, மூர்த்தி, மகாதேவராவ் போன்றோர் என்னுடன் பயின்றனர்.எனக்கு இளம் பிராயத்தில் எதைப் படித்தாலும் அப்பாடத்தை ஒட்டிய இடங்களைப் பார்க்க வேண்டும், படித்த நாடகக் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் என் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும். ஆறாம் வகுப்பில் செஞ்சிக்கோட்டை… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 33