‘‘பிறமொழிக் கலப்பை நீக்கிப் பேசவும் எழுதவும் பழகு!” ================================================================= அகராதியியலாளர்களின் கருத்துப்படி அயல்மொழிச் சொற்கள் அருந்தமிழில் பேச்சு வழக்கில் முதலில் கலந்து பிறகு எழுத்து வழக்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எழுத்து வழக்கில் அயன் மொழிச் சொற்கள் ஏற்கப்படுவதும், அவை பிறகு முறையே பேச்சு வழக்கிலும் இடம்பெற நேர்வது உண்டெனினும், அவற்றின் தொகை குறைவே. பிறமொழிச் செல்வாக்கால் ஆசாமி, இலாகா, கஜானா, முனிசீப் போன்ற சொற்கள் பேச்சு வழக்கில் நுழைந்தன. எழுத்து வழக்கில் மேற்கூறிய பொருள்களைக் குறித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2
Tag: #AvvaiArul
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1
================================================================= மக்கள் தமக்குத் தாமே ஆர்வத்தோடு படைத்து வளர்த்துப் பல்லாண்டுகளாகக் காத்து வரும் அரிய திறமே மொழியாகும். மாந்தர்க்கு அமைந்த தனிச்சிறப்புகளில் தலையாயதாக அமையும் புலப்பாட்டு உணர்வே அறிவை மாந்தரிடத்தே வளர்த்து உயர்த்தும் திறனும் ஒரு மொழிக்கே வாய்ப்பதாகும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் மாணவராகவும் ஒருசேர அமைகின்றனர். மொழியை வளர்ப் பவரும் மக்களே மொழியால் வளர்பவரும் மக்களே. இவ்வாறு மக்களின் மனவுணர்வும் வாழ்வு நலங்களும் மொழியின் துணையோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றன.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5
மிச்சிகன் பல்கலைக்கழகத்து மொழியியல் பேராசிரியர்களாயிருந்த ஏ.எல்.பெக்கர் கீத் டெய்லர் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேரறிஞர் ஏ.கே. இராமனுஜனுடன் நிகழ்த்திய கலந்துரையாடலில் வரும் தொல்காப்பியரைப் பற்றிய முடிவுகள் நாம் வியந்து போற்ற வேண்டியவை அறிஞர் பெக்கர்,அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களில் எல்லாம் தொல்காப்பியரின் சிலையை நிறுவவேண்டும்; ஏனெனில் மேலை உலகின் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றாரோடு அவர் ஒப்பிடற்குரிய தகுதி பெற்றவர் ; தொல்காப்பியரின் சிந்தனையாற்றல், கற்பனைத்திறன், மொழியின்பால் காட்டிய ஆர்வம் வழியாகத் தொல்காப்பியர் தமிழின் அறிவுலகைத் திறந்துள்ளார் ; மொழி பற்றிய… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2
அமெரிக்க ஆய்வறிஞரின் புகழாரம் ! உலகப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளில் தெற்காசிய மொழிகளை ஆராயும் துறைகளை உருவாக்கியிருந்தனர் . அமெரிக்க நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை இன்றும் விளங்குகிறது. இத்துறைகளில் வடமொழியே முதன்மை பெற்றாலும் தமிழ் மொழியும் துளிர்த்துண்டு. பெர்க்லி மாநகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள் ஆய்வுத்துறை நிறுவிய பத்தாம் ஆண்டு நினைவைப் பாராட்டும் வகையில் கலைஞர் களஞ்சியம் என்னும் பெயரில் ஏறத்தாழ 1300 பக்கங்களைக் கொண்ட அருங்கலைப் பேழையாகக் கலைஞர் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1
மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது. இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே சில மாதங்கள் இருந்தேன். மருத்துவமனை யிலிருந்து திரும்பும் போது இருவராகச் சென்று – நான் மட்டும் திரும்பினேன்.எனக்கு நேர்ந்த மனக்கலக்கத்தை மாற்ற பெரிய முயற்சியை என் மகன் அருளும் – செயலாளர் பொன்னேரி பிரதாப்பும் மேற்கொண்டனர்.அரைகுறையாக நான் குறித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அரிய குறிப்புக்களை எல்லாம் நெறிமுறையாகத் தொகுத்து என் சோர்வைச் சிறிது நிமிர்த்தனர் . அவ்வப்போது தினச்செய்தி நாளிதழின் ஆசிரியரும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1
SUBTLE TWIST TO SILAPATHIKARAM
Remembering Kalaignar on his 98th Birthday Dr. Muthuvel Karunanidhi, a political genius and former Chief Minister of Tamil Nadu, was a rare gem not only for the people of the state, but across modern India. He was an intellectual giant and a cultural phenomenon, who strode the modern world majestically with dazzling dynamism that at… Continue reading SUBTLE TWIST TO SILAPATHIKARAM