அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

மொழியே இணைப்புப் பாலம்..! மொழிக் கலப்பு   மொழித் திறன் என்பது நாட்டு மக்கள் வளர்த்துக் காக்கும் திறனுடைமையின் பயனாகும். ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் மொழியே மக்களின் அறிவுப் பெருக்கத்தால் செழுமையான மொழியாக மாறும் பல இன, மொழி மக்களின் இயக்கமாக உலகம் உள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முதலில் உணர்வைச் சிறுசிறு சொற்கள் கொண்ட மொழியாகத் தன்னைப் போல் அவற்றை அறிந்தவரிடம் உரையாடுகிறான். தனி ஒரு மனிதனின் தேவை என்ற நிலையிலிருந்து அவன்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6

தகடூரான் தந்த தமிழ்க்கனி ! சோவியத்தின் இலக்கியச் சிகரமான டால்ஸ்டாயின் எழுத்தின் தொகுதி 90 மடலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன . எழுதிய மடல்கள் , அவருக்கு வந்த கடிதங்கள் 32 தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன . இந்தியத் தலைநகரான கொல்கத்தாவில் – முதன்மைத் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த பெருந்தகை கர்சான் தன் கையால் நூறு பக்க அளவில் தன் துணைவியாருக்குக் கடிதம் எழுதினார் . இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாள் தவறாமல் தன் மனைவியாருக்கு இங்கிலாந்துக்குக் கடிதம் எழுதி வந்தாராம்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2

‘‘பிறமொழிக் கலப்பை நீக்கிப் பேசவும் எழுதவும் பழகு!” =================================================================   அகராதியியலாளர்களின் கருத்துப்படி அயல்மொழிச் சொற்கள் அருந்தமிழில் பேச்சு வழக்கில் முதலில் கலந்து பிறகு எழுத்து வழக்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எழுத்து வழக்கில் அயன் மொழிச் சொற்கள் ஏற்கப்படுவதும், அவை பிறகு முறையே பேச்சு வழக்கிலும் இடம்பெற நேர்வது உண்டெனினும், அவற்றின் தொகை குறைவே.  பிறமொழிச் செல்வாக்கால் ஆசாமி, இலாகா, கஜானா, முனிசீப் போன்ற சொற்கள் பேச்சு வழக்கில் நுழைந்தன. எழுத்து வழக்கில் மேற்கூறிய பொருள்களைக் குறித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1

  =================================================================   மக்கள் தமக்குத் தாமே ஆர்வத்தோடு படைத்து வளர்த்துப் பல்லாண்டுகளாகக் காத்து வரும் அரிய திறமே மொழியாகும். மாந்தர்க்கு அமைந்த தனிச்சிறப்புகளில் தலையாயதாக அமையும் புலப்பாட்டு உணர்வே அறிவை மாந்தரிடத்தே வளர்த்து உயர்த்தும் திறனும் ஒரு மொழிக்கே வாய்ப்பதாகும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் மாணவராகவும் ஒருசேர அமைகின்றனர். மொழியை வளர்ப் பவரும் மக்களே மொழியால் வளர்பவரும் மக்களே. இவ்வாறு மக்களின் மனவுணர்வும் வாழ்வு நலங்களும் மொழியின் துணையோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றன.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-1

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5

மிச்சிகன் பல்கலைக்கழகத்து மொழியியல் பேராசிரியர்களாயிருந்த ஏ.எல்.பெக்கர் கீத் டெய்லர் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேரறிஞர் ஏ.கே. இராமனுஜனுடன் நிகழ்த்திய கலந்துரையாடலில் வரும் தொல்காப்பியரைப் பற்றிய முடிவுகள் நாம் வியந்து போற்ற வேண்டியவை அறிஞர் பெக்கர்,அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களில் எல்லாம் தொல்காப்பியரின் சிலையை நிறுவவேண்டும்; ஏனெனில் மேலை உலகின் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றாரோடு அவர் ஒப்பிடற்குரிய தகுதி பெற்றவர் ; தொல்காப்பியரின்  சிந்தனையாற்றல், கற்பனைத்திறன், மொழியின்பால் காட்டிய ஆர்வம் வழியாகத் தொல்காப்பியர் தமிழின் அறிவுலகைத் திறந்துள்ளார் ; மொழி பற்றிய… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5