தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு !

மூதறிஞர் இளங்குமரனார்( சனவரி 30, 1930 – சூலை 25, 2021 ) தமது கனிந்த முதுமையில் மறைந்தார் . முதுபெரும் தமிழ்க்கடல் ,நடமாடும் தமிழியக்கம் ,முதுமுனைவர் என்று பல்கலைக்கழகங்கள் பட்டப்பேறும் வழங்கினர் .அறிஞர் உலகம் உச்சி மேற்கொண்டு மெச்சினர் . தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக்கொண்ட அவர், தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளைத் தொகுத்தவர். திருக்குறள் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட 4621 க்கும்… Continue reading தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு !

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-11

தமிழில் கடந்த திசைச் சொற்கள்..! திசைச்சொற்கள் ஏறத்தாழ வடமொழிக்கு முந்தைய வடிவம் கொண்ட ஆரியச்சொல் வடதிசையினின்றும் வந்து தமிழில் புகுந்ததைப் போலவே, ஏனைய திசைகளிலிருந்தும் சில சொற்கள் வந்து புகுந்துகொண்டன. அவற்றைத் திசைச்சொல் என்று குறித்தனர். நட்புறவு, வணிகம், கல்வி முதலிய தொடர்புகளினாலும், வேற்றவர் ஆட்சியினாலும், திசைமொழிகள் மக்கள் பேசும் மொழிகளில் கலப்பது இயற்கையாகும். அச்சொற்களை வரம்பு கடந்து செல்ல விடாமல் மட்டுப்படுத்துவதும், அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்களை படைத்து வழங்குவதும், தமிழுக்கு மரபாயிற்று.  ஆரியச் சொற்களை… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-11

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9

நெஞ்சை வெல்லும் நேர்மைசீர் திருத்த மனமும் – சிந்தனை வளமும் கொண்ட அறிஞர் தம் எண்ணங்களையும் புதுமை அவாவும் போக்கினையும் தம் பேச்சிலும் எழுத்திலும் இடைவிடாது வலியுறுத்துவார்கள் .திரு வி க தம் வாழ்நாளில் நலிந்த நிறைநாளிலும் தம் கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லச் சொல்லி எழுத வைத்தாராம் .நம் கலைஞர் பெருந்தகையும் எதைப் படித்தாலும் – எந்தக் கலையைக் கண்டாலும் தன் மனப்போக்கில் புதுமையையும் – செழுமையையும் சேர்த்துப் புது வடிவமாக்குவார் .இதிகாசங்களைப் படித்தபோதும் பரதாயணம் ,புலவர்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5

மிச்சிகன் பல்கலைக்கழகத்து மொழியியல் பேராசிரியர்களாயிருந்த ஏ.எல்.பெக்கர் கீத் டெய்லர் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேரறிஞர் ஏ.கே. இராமனுஜனுடன் நிகழ்த்திய கலந்துரையாடலில் வரும் தொல்காப்பியரைப் பற்றிய முடிவுகள் நாம் வியந்து போற்ற வேண்டியவை அறிஞர் பெக்கர்,அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களில் எல்லாம் தொல்காப்பியரின் சிலையை நிறுவவேண்டும்; ஏனெனில் மேலை உலகின் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றாரோடு அவர் ஒப்பிடற்குரிய தகுதி பெற்றவர் ; தொல்காப்பியரின்  சிந்தனையாற்றல், கற்பனைத்திறன், மொழியின்பால் காட்டிய ஆர்வம் வழியாகத் தொல்காப்பியர் தமிழின் அறிவுலகைத் திறந்துள்ளார் ; மொழி பற்றிய… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4

ஒரு நாட்டின் மரபு ,பண்பாடு ,மொழித்திறம் ,பழக்க வழக்கம் ,நம்பிக்கை , எப்படியோ வந்து சேர்ந்த வழிபாட்டுச் சடங்கு முதலிய நிலைகளோடு தொல்லாய்வில் கிட்டும் கலன்கள் – கற்கள் போலத் தொல்லிலக்கியங்களில் இடம் பெறும் குறிப்புக்களை இலக்கிய ஆய்வோடு மானிடவியல் , மாந்தர் மரபியல் சேர்த்து அறிவியற் கருவி ,ஆடிகளுடன் சேர்த்து உலகியல் அனைத்து நிலைகளிலும் ஆய்வுகள் நடந்துள்ளன . வீரமும் காதலுமே வாழ்வின் அகம் புறமாகத் தமிழர்கள் வாழ்வின் உறுதிப் பொருளாகக் கருதினர் போர்வீரர்களின் புகழும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3

யாதும் ஊரே; யாவரும் கேளிர் ! கலைஞரின் பிறந்த பொன்னாள் நமக்கெல்லாம் நலிவு தீர்த்த நன்னாள் . சிகரத்தை இழந்து சிந்தை நிலைகுலைந்து வாடினாலும் பிறந்தநாள் வலம் வருகிறது . வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தோடி வந்து நான் காப்பேன் என்ற புதிய விடியலோடு நம் முதலமைச்சர் நமக்கு ஆறுதல் வழங்க அரியணையில் அமர்ந்துள்ளார் . கொடுந்தொற்றின் அடாத கொடுமையை நீக்க நாளும் அரசு கண் துஞ்சாது பணியாற்றுகின்றது . கலைஞரின் நினைவு நாள் என்றும் நமக்கு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2

அமெரிக்க ஆய்வறிஞரின் புகழாரம் ! உலகப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளில் தெற்காசிய மொழிகளை ஆராயும் துறைகளை உருவாக்கியிருந்தனர் . அமெரிக்க நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை இன்றும் விளங்குகிறது. இத்துறைகளில் வடமொழியே முதன்மை பெற்றாலும் தமிழ் மொழியும் துளிர்த்துண்டு. பெர்க்லி மாநகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள் ஆய்வுத்துறை நிறுவிய பத்தாம் ஆண்டு நினைவைப் பாராட்டும் வகையில் கலைஞர் களஞ்சியம் என்னும் பெயரில் ஏறத்தாழ 1300 பக்கங்களைக் கொண்ட அருங்கலைப் பேழையாகக் கலைஞர் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1

மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது. இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே  சில மாதங்கள் இருந்தேன். மருத்துவமனை யிலிருந்து  திரும்பும் போது இருவராகச் சென்று – நான் மட்டும் திரும்பினேன்.எனக்கு நேர்ந்த மனக்கலக்கத்தை மாற்ற பெரிய முயற்சியை என் மகன் அருளும் – செயலாளர் பொன்னேரி பிரதாப்பும் மேற்கொண்டனர்.அரைகுறையாக நான் குறித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அரிய குறிப்புக்களை எல்லாம் நெறிமுறையாகத் தொகுத்து என் சோர்வைச் சிறிது நிமிர்த்தனர் . அவ்வப்போது தினச்செய்தி நாளிதழின் ஆசிரியரும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1

SUBTLE TWIST TO SILAPATHIKARAM

Remembering Kalaignar on his 98th Birthday Dr. Muthuvel Karunanidhi, a political genius and former Chief Minister of Tamil Nadu, was a rare gem not only for the people of the state, but across modern India. He was an intellectual giant and a cultural phenomenon, who strode the modern world majestically with dazzling dynamism that at… Continue reading SUBTLE TWIST TO SILAPATHIKARAM