அந்த வருடம் பத்தாவது தேர்வு எழுத வேண்டியவர்கள் எங்கள் தெரு மாணவ மாணவிகளுடன், விடுதி மாணவர்களும் சேர்ந்து பதினாறு பேரு நாங்கள். பலர் டியூசன் வகுப்பிற்காக விளந்திடசமூத்திரம் செல்ல,ரங்கநாத வாத்தியாரிடம் என்னை டியூசன் சேர்த்து விட்டார்கள் (இல்லை கோர்த்து விட்டார்கள்)எங்கள் வீட்டில். மெலிந்த தேகம்,அழுக்கு 8 முழ வேட்டி, முண்டா பனியன், சோடாபுட்டி மூக்கு கண்ணாடி, பூணூல் தோளில் இருந்து சறுக்கி கைகளில் விழவிழ எடுத்து போட்டுக் கொண்டே இருப்பார். பள்ளிக்கு வரும்போது பளிச்சென இருப்பார்,நெற்றியில் தீர்க்கமான… Continue reading ரங்கநாதன் சார் – கனித வாத்தியார்
Author: Ayyasami Balasubramanian
paiyachu-mama
இந்த மாதிரி பெயர் வைப்பதற்கே எங்கள் தெருவில் ஐந்துபேர் கொண்டக் குழு உண்டு அவற்றில்சாம்பிள் சில…கோயிலாம்,அர்பன் பேங் கண்ணன்,குடுகுடு ரங்கநாதன், போஸ்டாபீஸ் வீடு,பாம்பேஆம்,டன்சு பாட்டி, மாடியாம்,வக்கீலாம்,ஏழு புள்ளையாம்,அப்பளம்வீடு,சிங்கப்பூர் வீடு,சிமெண்ட் அய்யாங்கார் வீடு,புருடாத் வீடு, சின்னப்பட்டுவாம்,வாழைக்கொல்லை ஆம்,ஆலஞ்சேரி, LIC ஆம். இப்படிதான் அடையாளம் வைத்து அழைத்தோம்) அதில் இந்த பையாச்சு மாமாதான் அந்த ஹாஸ்டலுக்கு வார்டன்.வடக்குப் புறச்சந்தில் ஐந்து வீடுகள் இருக்கும் அதில் இரண்டாவது வீடு. செக்கச்செவேல் நிறம்,கழுத்தில் நவரத்னமாலை,கோல்ட் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, மெலிதான பின்… Continue reading paiyachu-mama
நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – உருத்திர பசுபதி நாயனார்
உருத்ரம் சொல்லி சொல்லி உயர்ந்த அந்தண நாயன்மார்.. உருத்திர பசுபதி நாயனார் பல வளங்கள் செழித்து விளங்கிய பொன்னிநதி பாயும் சோழ வளநாட்டிலே குடிமக்கள்குறைவில்லாமல்நிறையோடு வாழ்கின்ற, பூம்பொழிகள் மிகுந்துள்ள திருத்தலையூர் எனும் அழகிய சிற்றூர் அமைந்திருந்தது. எந்நேரமும் இவ்வூரில் அந்தணர்களின்வேத பாராயணம் வானை எட்டும்படியாக ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் பயனாய் மழையும் தவறாமல் பெய்யும் , அங்கு நிறைந்த சோலைகள் யாவும் நல்ல நறுமனங்கமரும் தேனை தரும். பசுக் கூட்டங்கள் தனது ஐந்தினையும்… Continue reading நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – உருத்திர பசுபதி நாயனார்
“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.
“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில். கதை சுருக்கம்:காலையில் பெரியவர் ஒருவர் நாயுடன் நடைபயிற்சி செய்யும் பொழுது, இருசக்கர வாகன ஓட்டி இடித்து தள்ளி நிற்காமல் ஓடிவிட, மயங்கி சரிகிறார் பெரியவர், அவ்வேளை அங்கு குப்பைப் பொறுக்கி பிழைக்கும் ஏழை இளைஞன் இதைக்கண்டு பதறி, தன் சட்டையைக் கழற்றி ரத்தம் துடைத்து செய்வதறியாது உதவிக்கு அழைக்கிறான். அச்சமயம் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கிறான். வாகன விபத்து என்பதனால் காவல் துறை… Continue reading “மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.
நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – நமிநந்தியடிகள் நாயனார்
நமிநந்தியடிகள் நாயனார் உண்மையான பக்தியுடன் நல் எண்ணம் இருந்தால் போதும் விளக்கு கூட எண்ணெய் இல்லாமல் நீரால் எறியும் என்றும், இறை அடியார்களுள் எவ்வித பேதமுமில்லை என்று உணர்ந்து உலகிற்கு உணர்த்திய உத்தம அந்தண குல நாயனார் வரலாறு நமிநந்தியடிகளார் வரலாறு. “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை சோழவளநாட்டிலே, ஏமாப்பேரூர் எனும் ஊரிலே, அந்தணர் குலத்திலே அவதரித்த பொருமானார், நமி நந்தியடிகளார். மனத்தால் என்றும் விளங்காது சிவபெருமானையே சிந்தித்து பூசித்து மகிழும் ஒழுக்க… Continue reading நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – நமிநந்தியடிகள் நாயனார்
வெகுமதி – சிறுகதை – பா.அய்யாசாமி
தம்பி நில்லு. சின்னராசு மவன்தானே நீ, உன் அப்பனை வரச்சொல்லு என்று அதிகாரமான குரல் வந்த திசை பார்த்த வடிவேலு, அங்கே பண்ணையார் ஏகாம்பரம் நிற்பதைக் கண்டு சரிங்க என தலையை ஆட்டி விட்டு முனுமுனுத்தபடியே நகர்ந்து வீட்டிற்குச் சென்றான். யப்பா, நீ இந்த தொழிலை விடுப்பா, போதும், எத்தனை வருஷம்தான் நீயும் உசிரை பணயம் வச்சு மரம் ஏறுவே ? நம்ம வாழ்க்கை மட்டும் ஏற்றமில்லாமல் அப்படியே இருக்கு என அலுத்துக் கொண்டான் வடிவேலு. நீ… Continue reading வெகுமதி – சிறுகதை – பா.அய்யாசாமி
நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 001
சிந்தையால் விந்தை செய்த அந்தண அடியார் பூசலார் . மனமது சுத்தமானால் மந்திரம் கூட ஜபிக்க வேண்டாம். மனத்தால் இறையை நினைத்தாலே இனங்கி வந்து அருள்புரிந்து ஆட்கொள்வான் என உலகிற்கு உணர்த்திய நாயனார் அவர்களின் வரலாற்றினை சிந்திக்க கிடைத்த அரிய வாய்ப்பிற்கு முதலில் இறைவனை நெஞ்சார துதிக்கின்றேன். மண்ணுலகத்திலே எக்காலத்திலும் நல்ல ஒழுக்கம் விளங்கும் பெருமையுடைய தொண்டை மண்டலத்திலே, நான்கு வேதங்களும் விளங்கும் பழைய ஊரிலே பூசலார் அந்தணர் குலத்திலே அவதரித்து தம் கொண்ட கொள்கையில் நிலையாக நின்ற… Continue reading நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 001