அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 45

“எண்ணிப் பார்த்து ஏற்றம் பெறுக” என் வலது காலின் தசைப்பகுதியில் காயம்பட்ட ஒரு வடு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளது.அவ்வடுவைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒரு நிகழ்வு நெஞ்சை நெருடும்.நான் நான்காம் வகுப்புப் (1976) பயிலும்பொழுது, மாலைவேளைகளில், கிரிக்கெட் மட்டையும் ஓட்டமுமாக இருப்பது வழக்கம்.விளையாட்டுத் திடலிலிருந்து அண்ணாநகர் இல்லத்திற்கு வேகமாக வந்து எங்கள் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டுவதுபோலப் பாய்ந்து தாவிக் குதிக்கும் முன், பாதி சுவருடன் நானும் தரையில் விழுந்தேன்.விழுந்த வேகத்தில், எழமுடியாமல் தத்தளித்தேன். அப்பொழுது உதவிக் கரம் நீட்டி… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 45

தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை

தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை விளக்கக் குறிப்பு-மானியக் கோரிக்கை எண்:46தமிழக சட்டப்பேரவை_31.8.2021தங்கம் தென்னரசு.தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு,தொல்லியல் துறை அமைச்சர்முன்னுரைமொழியே மனிதனை இணைத்தது.வேட்டையாடித் திரிந்தவனை வேளாண்மைக்கு அழைத்தது.மொழியால் இதழ்கள் மட்டும் அசையவில்லை. இதயங்களும் – உள்ளங்களும் இசைந்தன.மொழிகள் மனிதனின் உணர்வுகளைப் பாதுகாக்கவும் நிலைப்படுத்தவும் உதவின.வாலில்லாத குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே இருக்கும்மரபுக்கூறு. மாற்றத்தில் 0.1 சதவிகிதம் மட்டுமே மனிதன்.விரிவாகப் பேசுவதற்கும். விளக்கமாக உரைப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்று மானுடவியல் வல்லுநர்கள் முன்மொழிகிறார்கள்.குரல்வளை, தொண்டை நாக்குப்… Continue reading தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை

கண்ணன் கதைகள் – 3

ஆயர்பாடி மதுராவிற்கு யாத்திரையாக சென்றிருந்தேன்.கண்ணன் பிறந்த இடமான மதுராவுக்கு ஒரு காலை சென்றேன். கண்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையில்“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை ” மற்றும் பல்லாண்டு இரண்டையும் போலீஸ் வந்து விரட்டும் வரை பல முறை சேவித்துக்கொண்டு இருந்தேன்.பிறகு ஆயர்பாடிக்கு சென்றேன்.ஆயர்பாடியில் நந்தகோபருக்கு நிறையப் பசுக்கள் இருந்தன. கண்ணன் இங்கே தான் மேய்த்தார், விளையாடினார் எல்லாம் செய்தார்.சுருக்கமாக கிருஷ்ணர் காலடி பட்ட இடம். எங்கும் ஆட்டோ, ரிக்‌ஷாவிற்கு ‘ராதே ராதே’ தான் ஹார்ன். கடைகளிலும் வணக்கத்துக்குப்… Continue reading கண்ணன் கதைகள் – 3

துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும்.பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.ஐம் என்ற சொல் சரஸ்வதியையும்,… Continue reading துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?

சுவாமி விவேகானந்தர் கதைகள்

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!சுவாமி விவேகானந்தர் அமெரிக்க தேசத்திற்குச் சென்று மிகப்பிரபலமடைந்து பெரும் புகழையும் பெற்றார். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவு அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்றது பல்கலைக் கழக மாணவர்களுக்கு சுவாமிஜியை மிகவும் பிடித்துப் போயிற்று. கீழைத் தத்துவத் துறை தலைமைப் பதவியை சுவாமிஜிக்கு அளிக்க இப்பல்கலைக்கழகம் முன் வந்தது இது மிகவும் அபூர்வமான விஷயம்.… Continue reading சுவாமி விவேகானந்தர் கதைகள்