பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாக போற்றப்படுகிறது.. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் – ’ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம்உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பது தான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3… Continue reading கண்ணன் கதைகள் – 8
Tag: kannankadhaigal
கண்ணன் கதைகள் – 7
’வியாக்கியான சக்ரவர்த்தி’ ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்று நகைச்சுவையான பதத்தை உபயோகித்துள்ளார்.இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம்.பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று முடிந்துவிட்டது என்று உள்ளே சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால்… Continue reading கண்ணன் கதைகள் – 7
கண்ணன் கதைகள் – 6
புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். ’மிஷன் இம்பாசிபிள்’ படம் எல்லாம் பிச்சை… Continue reading கண்ணன் கதைகள் – 6
கண்ணன் கதைகள் – 5
துவாரகை முழுவதும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். காரணம் எல்லோர் இடத்திலும் இருக்கும் கிருஷ்ணப் பக்தி.தொலைப்பேசி வந்தால் ஹலோ என்று சொல்லாமல் “ஜெய் துவாரகாதீஷ்” என்கிறார்கள்.கோயிலில் இருக்கும் காவல்துறையினர் எல்லோரும் பக்தியுடன் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். எங்களுடன் வந்த ஒருவர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார் அதை ஒரு காவல்துறை அதிகாரி சுட்டிக்காட்டினார். கண்ணனுக்கு மரியாதை!எல்லோருக்கும் ஒரே க்யூ தான். ஆதிஷேசன் மாதிரி வளைந்து நெளிந்து போகிறது. . 250, 100, 50 என்ற சிறப்புப் பக்தி இங்கே இல்லை.… Continue reading கண்ணன் கதைகள் – 5
கண்ணன் கதைகள் – 4
யமுனையில் குளிக்க படகில் சென்ற போது பள்ளி சீருடையில் இந்தச் சிறுமி என் கவனத்தை ஈர்த்தாள்.பத்து ரூபாய்க்கு மீன்களுக்குச் சின்ன சின்ன உருண்டை வங்கிக்கோ என்றாள்.“தஸ் ரூப்பா”“வேண்டாம்”வாங்கிக்கோ என்றாள். அவளின் சிரிப்பில் மயங்கி பத்து ரூபாய் கொடுத்தவுடன் வாய் எல்லாம் பல் – பேச்சுக் கொடுத்தேன்“என்ன கிளாஸ்?”“ஃபர்ஸ்ட்”“ஸ்கூல் யூனிஃபார்ம்”“சுட்டி, சண்டே”படகில் இறங்கும் போது ”உன் பேர் என்ன?” என்றேன்“ராஜகுமாரி” சுஜாதா தேசிகன்31-08-2021ஸ்ரீஜெயந்தி
கண்ணன் கதைகள் – 3
ஆயர்பாடி மதுராவிற்கு யாத்திரையாக சென்றிருந்தேன்.கண்ணன் பிறந்த இடமான மதுராவுக்கு ஒரு காலை சென்றேன். கண்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையில்“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை ” மற்றும் பல்லாண்டு இரண்டையும் போலீஸ் வந்து விரட்டும் வரை பல முறை சேவித்துக்கொண்டு இருந்தேன்.பிறகு ஆயர்பாடிக்கு சென்றேன்.ஆயர்பாடியில் நந்தகோபருக்கு நிறையப் பசுக்கள் இருந்தன. கண்ணன் இங்கே தான் மேய்த்தார், விளையாடினார் எல்லாம் செய்தார்.சுருக்கமாக கிருஷ்ணர் காலடி பட்ட இடம். எங்கும் ஆட்டோ, ரிக்ஷாவிற்கு ‘ராதே ராதே’ தான் ஹார்ன். கடைகளிலும் வணக்கத்துக்குப்… Continue reading கண்ணன் கதைகள் – 3
கண்ணன் கதைகள் – 2
ஈட்டில் “மிளகாழ்வான் வார்த்தை” என்று வருகின்றது. அரசன் ஊர்மக்களுக்கு நிலங்களை தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப் படுகின்றார். அவரும் தானம் பெறச் செல்லுகின்றார்.அவரைப் பார்த்த அரசன் “உமக்கு தானம் கொடுப்பதில்லை’ என்று அரசன் சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், “பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்” என்கிறார்.இதற்கு அரசன் ”உமக்கு அந்த யோக்கியதைகள் இல்லை என்று நான்… Continue reading கண்ணன் கதைகள் – 2
கண்ணன் கதைகள் – 1
இன்று ஸ்ரீஜெயந்தி. கண்ணன் வசிக்கும் இடங்களில் எனக்குக் கிடைத்த சில கதைகள் இவை.தொட்டமளூர்ஒரு நாள் திடீர் என்று தொட்டமளூர் கிளம்பினேன்.மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் – குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணெய் உருண்டையுடன் தவழ்ந்து… Continue reading கண்ணன் கதைகள் – 1