அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22

கன்னடம், உருது சொற்கள் வந்த வரலாறு சென்ற வாரம் வெளிவந்த ‘தெலுங்கு மலையாளம் சொற்கள் வந்த வரலாறு’ கட்டுரையை நூற்றுக்கணக்கான அன்பர்கள் படித்து மகிழ்ந்து பலர் என் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கியபோது, நெடிதுயர்ந்த ஆய்வு மாணவியாக சற்குணவதி அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இலக்கியத்துறை மாணவ மாணவிகளுக்குப் பாடம் நடத்திய விதம் பாங்குற உள்ளளது என்று என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-21

தெலுங்கு, மலையாளமொழிச் சொற்களின் வந்த வரலாறு………………………………………..சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி சிவம் அவர்களுடைய “மிக அருமையான, ஆழமான, சிந்திக்கத் தூண்டும் கட்டுரை அருள்.” என்னும் பாராட்டுரை குறிப்பிடத்தக்கது. அவ்வண்ணமே மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடுகின்ற தனியிதழான ‘திசையெட்டும்’ ஆசிரியர் பெருந்தகை திரு. குறிஞ்சிவேலன் அவர்களின் “இத்தனை சொற்களும் பிறமொழிகளிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளோம் அல்லது பயன்படுத்துகிறோம் என்று தமிழறிஞர்கள்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-21

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-10

பெருமக்களே…பாரதியின் குயில்பாட்டை மிக வனப்புற, அழகாக பெருமிதமாக, எல்லோரும் இப்படியெல்லாம் பாடிக் காட்ட முடியுமா குயில் பாட்டை…எங்கள் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிக் காட்டும் விதத்தை நாங்கள் கண்டு எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம் என்று அனைவரும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.பெருமக்களேபாரதியினுடைய மாபெரும் காப்பியமான குயில் பாட்டை படலம் படலமாக, மது சுரக்கும் வரிகளை மிக அழகாக, தன்னுடைய வசீகரமான குரலில் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடுவது நமக்கெல்லாம் பெருமை.எனக்கென்ன பெரிய பெருமையென்றால்,சூரியபிரகாஷ் அனைத்துப் பணிகளையும் செய்து விடுவார். நான் அங்கிங்கு… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-10

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-20

வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு…………………………………………………………..இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-20

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 09

பெருமக்களே…கரைபுரள அலைபுரள நம்முடைய நண்பர் கலைமாமணி சூரிய பிரகாஷ் பாடிக் காட்டுகின்ற குயில் பாட்டு மகோன்னதமான வரவேற்பை உலகெங்கும் பெற்றுவருகிறது.பார்க்கும் நண்பர்களெல்லாம் யூடியூபில் குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புறுவதும் லண்டன் மாநகரத்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், சுவிட்சர்லாந்திலிருந்தும் கனடாவிலிருந்தும் பெரிய ஆர்வலர்கள் கூட்டம் எங்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. குயில்பாட்டு பாரதியாருடைய சிறந்த இலக்கியப் படைப்பாகும். பாரதியாருடைய தலைசிறந்த மூன்று படைப்புகள் எது என்று கேட்டபொழுது சொன்னார்களாம் தேசிய உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது பாஞ்சாலி சபதம் என்றும், தெய்வீக உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 09

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-19

எல்லா நிலைகளிலும் சார்பின்றி வாழ எழுச்சி பெறுவோம் சென்றவாரம் என் கட்டுரையப் படித்தவுடன், என் நெருங்கிய உறவினர் திரு.மதனகோபால் எனக்கு எழுதிய குறிப்புரையை நான் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.இளம் சிறார்களுக்குப் பெற்றோர்களுக்கும்அதாவது மழலையர் பள்ளி உயர்நிலை பள்ளி ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருவது கண்கூடு அதில் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலக்கவும் சிறு எடுத்துக்காட்டாக uniform முதல் rubber வரை ஆங்கிலம் பெருமளவில் தமிழில் எல்லா இடத்திலும் கலந்து உள்ளது ஆங்கிலச் சொற்களோடு இணைத்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-19

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 08

அன்பார்ந்த பெருமக்களே … குயில் கூவிக் கொண்டே இருக்கிறது. குயில் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அங்கிங்கெனாதபடி குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புற்று கலைமாமணி சூரியபிரகாஷை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். பாரதி வரிகளை நாங்கள் எத்தனையோ முறை படித்திருந்தாலும் குயில் பாட்டை இசைப் பாட்டாக அற்புதமாகப் பாடிக் காட்டுகின்ற கலைமாமணி சூரியபிரகாஷை நாங்களெல்லாம் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்கள். நண்பர்களே ! இலண்டன் மாநகரைச் சேர்ந்த கவிஞர் கருணானந்தராஜா குயில் பாட்டில் தத்துவ ரகசியங்கள்… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 08

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-18

கலப்பு மொழி கன்னல் மொழியாகக் காட்சியளிக்கிறதே..! கல்விக்கூடங்களில்…கல்விக்கூடங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வரையறுக்கப்பட்ட கல்வி முறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றன. ஆங்கிலம் பயிற்று மொழியாகவே (Medium of Instruction) எங்கும் எளிதில் உள்ளதென்றால் மிகையாகாது. ஏறத்தாழ இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த நிலைதான். ஆங்கில ஆட்சிக்கு அகப்பட்ட நாடுகள் அனைத்திலும் இந்த அவலம் உண்டு.தமிழ்நாட்டில் ஆங்கிலத்தின் வாயிலாகப் பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புக்குச் செல்வாக்கு மிகுதியாக உள்ளது. ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள வகுப்பிலே பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் இந்நாட்டில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-18

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-07

ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம். அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம். இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும். எங்கே போனதாம்? தெரியவில்லை. எப்படிப் போனதாம்? புரியவில்லை. அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி உலகெல்லாம் உள்ள… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-07

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-17

அரியணை மொழியே அனைவரையும் ஈர்த்தது..! =================================================  ‘ஊர் கூடித் தேர் இழுப்போம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு தனித்தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் பா.இறையரசன் எனக்கு எழுதிய மடல் சிந்திக்கத்தக்கது.    “தமிழறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் எனப்பலரும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுத்தால் உண்டு நன்மை. ஆங்கிலம் தன்னை    வளர்த்துக்  கொள்ள  பிறமொழிச் சொற்களைப் பெற்று- தன்னில் கலப்படம் செய்து வளர்ந்தது பொருந்துமா என்று ஆய வேண்டும்.… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-17