மனிதனை திருத்த-கதை

ஞானி ஒருவர் :ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன்_ஒருவன் வந்தான் ” சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்? என்று கேட்டான். ஞானி_அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான்… Continue reading மனிதனை திருத்த-கதை

நடக்காததை நடத்திக் காட்டும் நரசிம்ம மந்திரம்!

வாழ்க்கையில் எல்லோருமே நினைப்பது நடக்க வேண்டும், எல்லாமே நல்லதாகவே நடக்க வேண்டும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால், நாம் நினைப்பதெலலம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பதற்கேற்ப சோதனைகள் வருவதுண்டு. நினைப்பதும் நடப்பதில்லை.மாறாக எதிர்பாராத ஒன்று தான் நடக்கும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாம் நினைப்பதையும், நடக்காது என்று நினைத்தவற்றை நடத்திக் காட்டவும் நரம்மரின் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்…நடக்காதது, நினைக்காதது என்று அனைத்தும் நமக்கு நல்லபடியாக நடந்து முடியும். நரசிம்ம… Continue reading நடக்காததை நடத்திக் காட்டும் நரசிம்ம மந்திரம்!

தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.

இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.உதாரணமாக,“தேர் ஓடுவது எதனால்?தெருவை மெழுகுவது எதனால்?” என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,“அச்சாணியால்” என்பது.தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவதுஅச் – சாணியால்என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.“நீ வசிக்கும் ஊர் எது?உன் காலில் காயம் வந்தது எப்படி?”என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் “செங்கல்பட்டு” என்பது.“சாம்பார் மணப்பதேன்?உடல் நலிவதேன்?” என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் “பெருங்காயத்தால்!” என்பது.இன்று ஆங்கில வழிக்… Continue reading தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.

நீதிக்கதை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள்… Continue reading நீதிக்கதை

கர்ணன் கற்றது வித்தை அல்ல ,வேதம் !..

————————————————————————————————————————– தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன்…..பிறப்பால் சத்ரியன். “வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?” துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன்.மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.அர்ஜுனன் “ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு” தேரேறிப் போய்விட்டான். இப்போது,கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்……மிகச் சிறந்த… Continue reading கர்ணன் கற்றது வித்தை அல்ல ,வேதம் !..

சரணாகதி தத்துவம்

பற்றிய சிறு தகவல்களை விளக்கும் பதிவுபராசர பட்டர் என்பவர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.ஒன்றுமே இல்லை. நான் ஒரு… Continue reading சரணாகதி தத்துவம்

சுவாமி_விவேகானந்தர்

ஒரு துறவியிடம்நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா்பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.#நிருபர் : ஐயா! உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் “தொடர்பு” மற்றும் “இணைப்பு” என்பது பற்றிப் பேசினீர்கள்! அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது.சற்று விளக்கிச் சொல்ல முடியுமா? என்றார்.துறவிபுன்முறுவலோடுநிருபர் கேட்ட கேள்வியிலிருந்துவிஷயத்தைத் திசை திருப்புகின்ற விதமாக,அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்.நீங்கள் நியூயார்க்கில்தான் வசிக்கிறீர்களா?#நிருபர் :ஆம்.#துறவி :வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?இந்தத் துறவிஎன் சொந்த வாழ்வைப் பற்றியும்,தேவையற்ற கேள்விகளையும் கேட்டுதன்னுடைய கேள்விக்குப் பதில் தருவதைத்தவிர்க்க முயற்சிக்கிறார் என்று நிருபர் நினைத்தார்.இருந்தாலும் துறவியின் கேள்விக்கு“என்… Continue reading சுவாமி_விவேகானந்தர்

சங்கின் நன்மைகள்

வீட்டு வாசலில் சங்கை கட்டி தொங்கவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என அறிவோம்சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு… Continue reading சங்கின் நன்மைகள்

உறவுகள்-01

சோதனைகள்மனிதனின்மன வளத்தை அதிகரிக்கும்.. வெற்றிகள்அவனதுதலைகனத்தை அதிகரிக்கும்.. தோல்விகள்அவனைஅடையாளம் காட்டும்.. சிந்தனைகள்மட்டுமேஅவனுக்குநல்வழி காட்டும்..! தாயம்விழுந்தால்தான்ஆடவேஆரம்பிக்க முடியும்..! காயம்பட்டால்தான்வாழவேஆரம்பிக்க முடியும்.. கண்ணீர் துளி விலைமதிப்பற்றது.. அதைபொய்யானஉறவுக்காக வீணடிக்காதே.. எல்லாஉயிர்களிடத்தும்அன்பாய் இரு.. ஆனால் மனிதர்களிடம்மட்டும்விழிப்பாய் இரு..

அனுமனின் வாலில் ஒரு மணி

*ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம……!!* நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம். *அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா?* தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி…. ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.சீதாப்பிராட்டியை… Continue reading அனுமனின் வாலில் ஒரு மணி