” சற்றே விலகி இரும் பிள்ளாய்
(சன்னிதானம் – இல்லை)
#சுவாமிமலை_மறைக்குதாம் “
மயிலாடுதுறை மாவட்டம்
திருப்புன்கூர் தலத்து உறைந்த இறைவன் – சிவலோகநாதஸ்வாமி
தனது அடியார் –
திருநாளைப்போவார் – தன்னை
தரிசிக்க வேண்டுமென்பதற்காக
//சற்றே விலகியிரும் பிள்ளாய்
சந்நிதானம் மறைக்குதாம் //
என்று
நந்தியெம்பெருமானை விலகி
நிற்கச் சொன்னவுடனே
நந்தியும் சற்று விலகி அமர்ந்ததாக
ஸ்தலபுராணம் சொல்லும் கதை
உண்டு.
—
ஆனால் இது கொஞ்சம்
வித்தியாசமான களம்,
இந்த நந்தி
அமர்ந்த இடமோ வேறு.
திருவையாறு – சுவாமிமலை
செல்லும் சாலையில்
கணபதி_அக்ரஹாரம் எனும்
புராதனமான காவிரி கிராமத்தின்
மேற்கு எல்லையில் அமைந்துள்ளார்.
அதுவோ,
காவிரியின் வடகரையை
ஒட்டி செல்லும் சாலை.
அந்த சாலை அருகே
ஒரு வாய்க்காலின் மீது அமைந்த
சிறு பாலமும், மதகும்
அதன் மீது மேற்கு நோக்கி
திருவையாறினை பார்ப்பது
போல அமர்ந்துள்ளார்
இந்த #சுயம்பிரகாசை_மணாளர்.
அந்த வாய்க்கால் பெயர் கூட
நந்தி வாய்க்கால் என்றே
எழுதப்பட்டிருந்தது.
—–
எனக்குத்தோன்றியகற்பனை
இந்த இடத்திலிருந்து
மேற்கே 8 கிலோமீட்டர்
தொலைவில்தான்,
மூர்த்தி,தலம்,தீர்த்தம் என
மூன்றாலுமே கீர்த்தி வாய்ந்த
திருவையாறுஎனும்புனிதஸ்தலம்.
அத்தலத்து இறைவனோ
ஐயாறப்பர்,
அந்த பஞ்சநதீஸ்வர ஸ்வாமிதான்
தனது பிள்ளையான
தகப்பன் ஸ்வாமியான
சுவாமிமலை_குமரன்
மேற்கு நோக்கி தன்னை
காணும் வழியில்
இந்த நந்தி இருப்பதனால்,
இந்த சாலையோரத்து
நந்தியெம்பெருமானை
சற்றே விலகி
வாய்க்கால் மதகு மேலே
அமரச் சொன்னார் போல( ? ?)…
” சற்றே விலகி இரும் பிள்ளாய்
சுவாமிமலை மறைக்குதாம் “
வணங்கியே மகிழ்ந்து
M. #Raja_Mahalingam
திருக்கோடிக்காவல்.
Leave a Comment
You must be logged in to post a comment.