இது நீண்டகாலமாக
திராவிடக் கட்சிகள்
( குறிப்பாக தி.மு.க )
அரசியல் வியாபாரத்திற்கு
பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை..
சரி ,
என்னளவில் தமிழ் வாழ்க
என்ன செய்யவேண்டுமெனத் தெரியவில்லை.
ஆனால் , தமிழ்மொழி அழியாமல்
இருக்க தமிழ்நாட்டில் ஓர்
சட்டம் கொண்டு வந்தால்
நன்றாக இருக்குமெனத் தோன்றியது.
அது என்னவெனில்..
தமிழகம் முழுவதும் இருக்கும்
அனைத்து
டிஜிட்டல் போர்டு, ஃப்ளக்ஸ் போர்ட்,
லித்தோஸ் அச்சடிக்கும்
1. அச்சக உரிமையாளர்கள்
2. அங்கே டைப் செய்து
பணியாற்றும் ஊழியர்கள்
எல்லோருக்கும் தமிழ்நாடு மொத்தமாக
ஒரு பொதுத் தேர்வு
அவர்களை தமிழ் எழுத்துக்கள் அத்துனையும் பிழையின்றி எழுதவுது
எப்படி ? என ஒரு தேர்வு நடத்தி
அதில் நல்ல மதிப்பெண்கள்
பெறுபவரே .
அ, ஆ, இ, ஈ தொடங்கி அத்துனை
தமிழ் எழுத்துக்களையும்
பிழையின்றி டைப் செய்பவரே
ஃப்ளக்ஸ் போர்ட் – கடை நடத்த
லைசென்ஸ் வழங்கலாம் என
அரசுக்கு பரிந்துரைக்கிறோம்.
அதிலும் இந்த பாண்டிச்சேரி
கும்பகோணம் , தஞ்சாவூர்,
மன்னார்குடி , புதுக்கோட்டை,
பட்டுக்கோட்டை பகுதிகள் தான்
முதலில் இந்த தேர்வு எழுத வேண்டும்..
—
அது ” நாடி ” எனும் ஈரெழுத்துச் சொல்.
தமிழில் சிறப்பான
நா – எனும் நெடில் எழுத்தில்
உள்ள
துணைக்கால் –
அது ஒரே எழுத்துதான் என்று கூடத்
தெரியாமல்
( அந்த காலை ஒடித்து
ந – தனியாக
துணைக்கால் தனியாக
டைப் செய்து…
இரண்டெழுத்து சொல்லை
மூன்றெழுத்தாக மாற்றி.
ஐயகோ…..
கீழே காணும் படம் ஓர் சாம்பிள்
மட்டுமே
என்னை அழவைத்த சில ப்ளக்ஸ்
போர்டு வசனங்கள்..
1. நஞ்சையும் புஞ்சையும்
தஞ்சையும் கொஞ்சி விளையாடும்
தஞ்செய் தரணியிலே
( எவ்ளோ கொஞ்சல் ? )
2. நீதிமன்ற நீதிக்கெ நிதி
சொல்பவரே
( நீதிக்கே – என வரவேண்டும் )
( நிதி – சொல்பவரே ? )
3. மாங்காப் புகழ் கொண்ட
காவேரிப் படுகை
லெப்டினென்ட் ஜெனரலே
( மாங்காப் புகழ் – ?
மங்காப் புகழ் தான் அது ! )
4. சட்டமண்றமே
( சட்ட மன்றமே தான் அது )..
—–
வேண்டும் வேண்டும்
தமிழ் – எழுத்து காபி நோட் தேர்வு
வேண்டும்
மத்திய அரசே
மாநில அரசே
மானமிகு திராவிடமே
வேண்டும் வேண்டும்
தேர்வு வேண்டும்..
—
தமிழ் வாழ்க
திருக்கோடிக்காவல்
Leave a Comment
You must be logged in to post a comment.