விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !
விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் !
- அருகம்புல் – சகல பாக்யங்களும் பெற
- வில்வம் – இன்பம் அடைய
- அரசு – உயர் பதவி கௌரவம் அடைய
- மாவிலை – அறம், நீதி காக்க
- துளசி – கூர்மையான அறிவினை பெற
- மாதுளை – பெரும் புகழ் அடைய
- அரளி – எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற
- நாயுருவி – வசீகரம் உண்டாக
- கண்டங்கத்திரி – வீரம் உண்டாக
- தவனம் – திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட
- மரிக்கொழுந்து – இல்லற சுகம் பெற
- ஜாதி மல்லி – சொந்த வீடு பூமி பாக்கியம் பெற
- நெல்லி – செல்வ செழிப்பு உண்டாக
- இலந்தை – கல்வி ஞானம் பெற
- ஊமத்தை – பெருந்தன்மை உயர
- தேவதாரு – எதையும் தாங்கும் வலிமை பெற
- கரிசலாங்கன்னி – வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க
- எருக்கு – வம்ச விருத்தி அடைய
- மருதம் – குழந்தை பேறு அடைய
- அகத்திக்கீரை – கடன் தொல்லையில் இருந்து விடுபட
- வன்னி – இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய
விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் அர்ச்சனைக்கு துளசி பயன்படுத்தலாம். மற்ற நாட்களில் விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தக் கூடாது.
கஜமுக பாத நமஸ்தே !
Leave a Comment
You must be logged in to post a comment.