Tamil Language

தமிழ் எண்

ஆறாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு பெண் குழந்தையின்
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அச்சிறுமியிடம் கேட்டேன்.
உடனே அவள்.,
“1 2 3 4 5 6 7 8 9 0
என்ற எண்ணுக்கு
முறையே,
க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′
என்றாள்
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.
அந்த வாக்கியம்..,

“க’ டுகு, 1

“உ’ ளுந்து, 2

“ங’ னைச்சு,. 3

“ச’ மைச்சு, 4

“ரு’ சிச்சு, 5

“சா’ ப்பிட்டேன்,. 6

“எ’ ன, “. 7

அ’ வன், 8

“கூ’ றினான்; 9

“ய’ என்றேன் 0

மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்?

தமிழை வளர்ப்போம்…

About the author

Thamizh Nadu .com

Leave a Comment