சனிக்கிழமை வழிபாடு செய்வது என்பது நாம் கேட்காமலேயே முக்கியமாக நமக்கு கிடைக்க வேண்டிய 3 வரங்களை நமக்கு கிடைக்க செய்யும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது என்னென்ன வரங்கள்? என்பதையும், சனிக்கிழமைகளில் வரும் திருவோண விரதத்தை எப்படி வீட்டிலேயே எளிமையாக அனுஷ்டிப்பது?
ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக இருந்து வருகிறது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் தோன்றிய ஒரு அவதாரமாக கருதப்படுகிறது. பெருமாளுடைய அருளைப் பெற திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்து வரலாம். ஒரு மனிதனுக்கு தேவையான முக்கிய மூன்று விஷயங்களில் ஒன்று செல்வம், இரண்டாவது நல்ல உடல் ஆரோக்கியம், மூன்றாவது ஆயுள்.
இந்த மூன்றும் ஒன்றாக கிடப்பவர்களுக்கு வாழ்வில் இம்மையிலும், மறுமையிலும் நிம்மதி இருக்கும். வாழும் பொழுதே சொர்கத்தை அனுபவிக்க இந்த மூன்று விஷயங்களும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கின்றன. செல்வம் இருந்து ஆரோக்கியம் இல்லையெனில் அதுவும் கஷ்டம் தான். ஆரோக்கியம் இருந்து ஆயுள் இல்லை என்றால் அதுவும் கஷ்டம் தான். ஆயுள் நிறைந்த செல்வம் இல்லையென்றாலும் கஷ்டம் தான். இப்படி இவற்றில் ஒன்று இல்லை என்றாலும், ஒரு மனிதனுக்கு கஷ்ட காலம் தான்.
இந்த மூன்றையும் ஒன்றாக கிடைக்க செய்யக் கூடிய ஒரு அற்புதமான விரதம் தான் சனிக்கிழமை விரதம். சனிக் கிழமைகளில் விரதம் இருப்பவர்களுக்கு செல்வம், ஆரோக்கியம் மற்றும் ஆயுள் இந்த மூன்றும் ஒருசேர கிடைப்பதாக ஐதீகம் உண்டு. பெருமாளுக்கு உரிய சனிக்கிழமைகளில் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமானதாக கருதப்பட்டு வருகின்றது. ஆனால் ஒவ்வொரு மாதமும் வரும் 4, 5 சனிக் கிழமைகளில் தவறாமல் விரதமிருந்து வழிபட்டு வந்தால் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் எண்ணிலடங்காதவையாக இருக்கும்.
சனிக்கிழமை விரதம் இருப்பது என்பது மிகவும் எளிமையானது தான். காலை முதல் உபவாசம் இருந்து பால் மற்றும் திரவ ஆகாரங்களை மட்டும் உட்கொண்டு இறை நாமங்களை ஜெபிக்க வேண்டும். பெருமாள் படத்தின் முன்பு அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் வாசிப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும். வாசிக்கத் தெரியாதவர்கள் அதனை ஒலி வடிவமாக வீட்டில் ஒலிக்க விடுங்கள்.
சாதாரணமாக சர்க்கரை பொங்கல் அல்லது சர்க்கரை கூட நைவேத்தியம் வையுங்கள். கண்டிப்பாக துளசி தீர்த்தம் அருகில் வையுங்கள். அதில் பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான், நாம் பெரிதாக ஒன்றும் இதற்கென மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் உச்சரியுங்கள்.
மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு தீபம் ஏற்றி, மனதார வழிபட்டு கொள்ளுங்கள். அங்கு கொடுக்கும் துளசி இலைகளை வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நமக்கு கேட்காமலேயே அந்த மூன்று வரங்கள் கிடைக்கும். மேலும் இன்று திருவோண நட்சத்திரம் என்பதால் உப்பு சேர்க்காமல் எளிய உணவு எடுத்துக் கொண்டு விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
Leave a Comment
You must be logged in to post a comment.