Personal Blogging

ராஜ ராஜ சோழனின் வாரிசு

இவர்கள் யார் என்று பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் தற்போதைய பத்திரிக்கைகள் பணத்திற்காகவும் , அதிகார அடிமைகளாகவும் செயல்படுவதால்…

இவர்கள்கெளரவிக்கப்படவேண்டியவர்கள்…

பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள் சிதம்பரத்தில் (தில்லை) குடமொழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும் சிறப்பு மரியாதையை பெற வந்த பொழுது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில்.
கோடி கோடியாய் சொத்திருந்தாலும் யாருக்கும் கிடைக்காத இந்த சிறப்பு மரியாதை இவர்களுக்கு மட்டுமே தில்லையில் அளிக்கப்படும்.
இன்று ஏழ்மையாக இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் தெற்காசியாவைக் கட்டி ஆட்சி செய்த சோழனின் வாரிசுகள்.
இன்னும் சிலகாலங்களில் ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார் அவர்களுக்கு தில்லையில் பஞ்சாட்சரப் படியில் அமரவைத்து தீட்சிதர்களால் சோழ அரசராக முடிசூட்டப்பட இருக்கின்றது.
இதுபோன்ற சம்பிரதாயங்கள் இல்லையென்றால் வரலாற்றையே மாற்றி எழுதி விடுவார்கள் நயவஞ்சகர்கள்.
வரலாற்றைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது.

About the author

Palakarai Sakthivel

Leave a Comment