Personal Blogging

வளரும்_தலைமுறை

Written by Raja Mahalingam

வாழ்ந்த_ஐயன்

வாழும்_எழுத்து

வளரும்_தலைமுறை ;-

தோழமைக்கு வணக்கம்,
என் சிற்றறிவின் அபிப்ராயத்தில்
நினைத்திருந்த ஓர் விஷயத்தினை

பகிர்கிறேன் இங்கே.

ஞானிகளோ,
மகான்களோ,
சித்த புருஷர்களோ ,
தேசியவாதிகளோ,
கவிஞர்களோ இல்லை
படைப்பாளிகளோ ..
அது எவராயினும் அவர்கள் வாழ்ந்த
காலத்தினை விட – வாழ்ந்து
மறைந்த பின்பே, இன்னும் அடுத்த
தலைமுறையாலேயே அதிகம்
கொண்டாடவும்
வணங்கவும்
துதிக்கவும் பெறுகின்றனர்.
உதாரணமாக..

காஞ்சி #மஹாப்பெரியவாள்

விவேகானந்தர்
பாரதியார்
காமராஜர்
இப்படியாக பல மகான்கள்,
சான்றோர்கள் எல்லாம் அவர்களது
வாழ்நாளை விட
இப்போதுதான் அதிகம்

நினைக்கப்படுகின்றனர்.

சரி

இங்கே நமது பதிவிற்கு வருகிறேன்.

எனது அக்காவின் மூத்த பிள்ளை

அர்ஜூன்_ரிஷி ,

தன்னுடைய பதின்பருவத்தில்
இப்போது பலஆண்டுகளாக
வேதபாடசாலையில் படிக்கும்
ஓர் மாணவன்.
நானும் எனது அக்காவும்
ஐயன் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களைப் பற்றியே நிறைய பேசிக் கொண்டிருந்த வேளையில்

  • அவரது புத்தகங்கள் பற்றி நிறைய
    ஆர்வமாக விசாரித்துக்
    கொண்டிருப்பான்.
    ஐயன் – உடல்நலம் குன்றி மருத்துவமனையில்
    அனுமதிக்கப்பெற்றபோது
    ஐயனுக்காக பிரார்த்தனை
    பலவகையில் நடந்தபோது.,
    விடுமுறையொட்டி வீட்டுக்கு வந்திருந்த
    அவனும் – ஐயாவிற்காக
    இறைதுதித்திட
    ” ம்ருத்யுஞ்செய -ஜபம் “
    செய்தவாறு இருந்தான்.
    நான் அவனுக்கு முதலில் படிக்கச்
    சொன்னது ஐயன் எழுதிய
    சதாசிவப் பிரம்மேந்திராள் சரிதமான

தோழன்.

அதைப் படித்து முடித்தவுடன்
அழ ஆரம்பித்து விட்டான்.
எப்படி எழுதியிருக்கார் இந்த
கதையை ?
பிரம்மேந்திராள் கூடவே
நானும் நடந்து போற மாதிரி
எனக்குத் தோணுதே,
நான் மட்டும்
ஐயனை நேர்ல
பார்த்திருந்தேன்னா பேசியிருக்க கூட
மாட்டேனே –
பட்டுனு காலில் விழுந்து
கதறிடுவேன் போல இருக்கே !
ஏன் ராஜா மாமா
நீ ஏன் ஒரு தடவை கூட என்ன
அழைச்சிக்கிட்டு
பாலகுமாரன் ஐயாகிட்ட போய்
ஆசிர்வாதம் வாங்கல
இப்படியாக விசும்ப ஆரம்பித்து

விட்டான் அந்த 18 வயது மாணவன்.

அதைத் தொடர்ந்து முறையே

தோழன்

பிருந்தாவனம்

ஆலமரம்

என் #கண்மணித்தாமரை

துளசி

என ஐயனின் ஆன்மீகப் படைப்புகளை
சிரத்தையாக வாசிக்கத் தொடங்கிவிட்டான் விடுமுறை காலத்தில்.
இதிலே அடுத்த சுவாரசியம்
என்னவெனில்..
அவனுடன் பயிலும்
கர்நாடக மாநிலத்து பிள்ளைகள்
இங்கே வந்து தமிழ் பேச , எழுத
கற்றுக் கொண்ட இரு மாணவர்கள் –
இவனுடன் சேர்ந்து
அவர்களும் பாலகுமாரன் ஐயாவின்
வாசகர்களாகி
தோழன்
துளசி
கடவுள் வீடு
இந்த புதினத்தின் பிடித்த வரிகளை
எல்லாம் மனப்பாடமாக என்னிடம்
மேற்கோள் காட்டி

பேச ஆரம்பித்துவிட்டனர்.

சமீபத்தில் எனது அக்கா – குழந்தைகளை
பார்க்கச் சென்றிருந்த சமயம்
” ஆவணி அவிட்டம் – அன்னிக்கு சாயந்திரம் – உங்களைப் பார்க்க
ராஜா வருவான் –
உங்களுக்கு என்ன கொடுத்து
அனுப்பனும் “
அப்படின்னு கேட்டிருக்கார்
” ராஜா மாமா வந்தாலே போதும்
அவர் செல்போன் அரை மணி நேரம்
கொடுத்தால் போதும் “

எனச்சொல்லியிருக்கிறான்.

நான் வியாழக்கிழமை – விடுமுறையன்று
மாலை அங்குச்சென்றவுடனேயே
இந்த மாணவர்கள் என்னை சூழ்ந்து
பேசிக் கொண்டிருந்தனர்.
அர்ஜூன்ரிஷி – எனது செல்போனை
வாங்கி –
ஐயனின் பேச்சுக்கள் அடங்கிய
” #எப்போவருவாரா ” எனும் வீடியோ
க்ளிப்பிங்க்ஸை பார்த்தவன்
அடுத்து ஐயன் பாலகுமாரன்
ஓர் #பெருமாள்கோயிலில் பாடும்

பாசுரம் ஒன்றினை

பார்த்தும் , கேட்டும்
பொலபொலவென்று
கண்ணீர் உகுத்து,

மாமா,
எப்பேர்பட்ட மனுஷன் இவர் !
என்ன மாதிரியான
தெய்வீகம் !
அவர் கூட
நீ நிறைய இருந்துருக்கியே மாமா,
எனக்கு ஒரேயொரு தடவை
பார்க்கக் கூட
கொடுத்து வைக்கலியே “
அப்படின்னு

கரைய ஆரம்பித்துவிட்டான்.

#குருவே_சகலமும்..

ஐயன் பாலகுமாரன்
அவர் மறைந்தபோது
அவரது வயது 72.
ஆனால்
அவரது எழுத்துக்கு
யார் காலத்தை நிர்ணயிப்பது ?
ஆமாம்,
பாலகுமாரன் எனும்

நந்தாவிளக்கு

அடுத்த தலைமுறையின் அறிவுக்கும்
சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்துக்கொண்டே இருக்கிறது.
நெகிழ்வுடன்
M. #Raja_Mahalingam
திருக்கோடிக்காவல்

About the author

Raja Mahalingam

Leave a Comment