இது நரேந்திரர் ஆளும் தேசம்ஜெய்ஹிந்த்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்…சரியாகப் பார்க்க முடியாமல் கண்ணீர் மறைத்துவிட்டது…
1988 சியோல் ஒலிம்பிக்கிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறேன்… எத்தனையோ ஏமாற்றங்கள்…சில லியாண்டர் பயஸ் , கர்ணம் மல்லேஸ்வரி , அபினவ் பிந்த்ரா , ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் , சாய்னா நெஹ்வால் , பி.வி.சிந்து மொமெண்ட்கள்….
அதிகம் நம்பிய ரவிகுமார் தாஹியா , தீபக் புனியா , வினேஷ் போகத் போன்றோர் கொடுத்த ஏமாற்றங்களால் , அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளவில்லை…
பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றதைக் கொண்டாடி முடிப்பதற்குள் ஈட்டி எறிதல் ஆரம்பமாகிவிட்டது…எடுத்த எடுப்பில் நீரஜ் 87 ஐத் தாண்ட கொஞ்சம் நம்பிக்கை வந்தது..( உலக சாதனை 98 ..) அடுத்தடுத்த சுற்றுக்களை 80ஐத்தாண்டவே ஆளாளுக்கு முக்க , அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனியின் வெட்டர் பாதியில் வெளியேற , சற்று நம்பிக்கை வந்தது…செக் நாட்டு வீரர் சற்று நெருக்கமாக வர பயம் வயிற்றைக் கவ்வியது…மூன்றாவது , நான்காவது சுற்றுக்களில் நீரஜும் சொதப்ப ” மறுபடியும் மொதல்லேர்ந்தா ? ” என்ற அதிதி அஷோக் டெஜாவூ ஜூரம் ஆரம்பித்துவிட்டது…
நல்லவேளை…நீரஜ்ஜின் இரண்டாவது வீச்சை கடைசிவரை எவராலும் ( நீரஜ் உட்பட ) எட்டமுடியவில்லை…தங்கம் உறுதியானது…தேசம் ஒரு தங்கம் , இரண்டு வெள்ளி , ஐந்து வெண்கலத்துடன் இதுவரையிலான ஒலிம்பிக் பங்களிப்பில் புதிய உயரத்தை எட்டியது..
வாழ்த்துகள் வீரர்களே…! ஜெய் ஹிந்த்!
Leave a Comment
You must be logged in to post a comment.