Personal Blogging

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எப்படி படையல் வைக்க வேண்டும்?
ஆடி அமாவாசை அன்று ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.முன்னோர்களு உணவு படைத்து, பின்னர் காகத்திற்கு வைப்பது அவசியம். முன்னோர்களுக்காகப் படைத்த உணவை, வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும்
ஆடி அமாவாசை எப்போது?
2021ம் ஆண்டு ஆடி அமாவாசை 23ம் தேதி (ஆகஸ்ட் ? ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.
ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு அமாவாசை தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை நீடிக்கிறது. அதனால் ஆகஸ்ட் 8 அன்று சூரிய உதயத்திற்கு பின் எப்போது வேண்டுமென்றாலும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கலாம்.
அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும்.
ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே துவங்கி விட வேண்டும். அன்றைய தினம் ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.
ஆடி அமாவாசை விரதம் :
அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் (Amavasya Vratam) இருக்கக்கூடாது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது.
முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து பூ வைத்து அதன் முன் ஒரு இலையில் சமைத்த உணவுகளைப் படைக்க வேண்டும்.
பின்னர் படங்களுக்கு தீபாராதனை செய்த பின்னர், அவசியம் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்.
அதன் பின்னர் இலையில் முன்னோர்களுக்காகப் படைத்த உணவை, வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் மற்றவர்களும் சாப்பிடலாம். இதனால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.
ஆடி அமாவாசை 2021 எப்போது? – தர்ப்பணம் எங்கெல்லாம் கொடுக்கலாம்
அமாவாசையின் முக்கியத்துவத்தை உணர்த்து கதை :
மகாபாரத குருஷேத்ர போருக்கு முன் அதில் வெற்றி பெற எந்த நாளில் கள பலி கொடுக்க வேண்டும் என, மிகச்சிறந்த ஜோதிடரும், பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் துரியோதனன் கேட்டான். போரில் தங்களைக் கொல்லத்துடிக்கும் எதிரி துரியோதனன் என அறிந்தும் அவருக்கு பூரண அமாவாசை அன்று களப்பலி கொடுத்தால் உங்களுக்கு தான் வெற்றி என நாள் குறித்து கொடுத்தான்.
சகாதேவன் பொய் சொல்லமாட்டான் என்பதால், துரியோதனன் அமாவாசை அன்று களபலி கொடுக்கத் தயாரானான்.
அப்போது ஒரு தந்திரம் செய்த கிருஷ்ணர், அமாவாசைக்கு முதல் நாளே ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும், ஒன்றாக பூலோகம் வந்து, கிருஷ்ண பரமாத்மாவே, நாங்கள் இருவரும் ஒன்றாக சேரக்கூடிய நாள் தானே அமாவாசை. ஆனால் நீங்கள் இன்றே தர்ப்பணம் கொடுக்கிறீர்களே, இது சரியானதா என கேட்டனர்.
அதற்கு கிருஷ்ண பகவானோ, சரிதான் நீங்கள் இருவரும் ஒன்றாக சேரும் போது தான் அமாவாசை . இன்று நீங்கள் இருவரும் சேர்ந்து வந்துள்ளீர்களே அப்போது அமாவாசை தானே என சமயோசிதமாகப் பதிலளித்தார்.
சகாதேவன் குறித்துக் கொடுத்தபடி களபலி கொடுத்தான் துரியோதனன். ஆனால் அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அமாவாசை தர்ப்பணம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாருங்கள்…

About the author

Palakarai Sakthivel

Leave a Comment