இது மீள்பதிவே
இருப்பினும்
எனக்குப் பிடித்த திருக்கோயில்,
அர்ச்சகர் என்பதால் மறுமுறை …
? ? ?
தோழமைக்கு #வணக்கம்..
செய்யும் தொழிலேதெய்வம் என்பர் – அந்த
தொழிலே தெய்வத்தின் சன்னதியில்
என்றால், அதுவே பாக்கியமல்லவோ ?
அந்தப் பேற்றினை
சிரத்தையாகவே சிரமேற்கொண்டிருக்கும்
சிவாச்சார்யார் ஒருவரை
கண்டும், பணிந்தும் வந்தேன்.
ஸ்தலம் :-
16 ஆம் நூற்றாண்டில்
கட்டப்பட்ட – அற்புதமான
சிற்ப வேலைகளுடன் கூடிய
சிவாலயம் ..
பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில்
கிருஷ்ணாபுரம் அடுத்து #வெங்கனூர்.
இறைவன் ;-
#விருத்தகிரீஸ்வரஸ்வாமி,
( பழமலைநாதர்)
இறைவியர் ;-
#பாலாம்பிகை , #விருத்தாம்பிகை
சரி , கோயில் பற்றி நமது அடுத்த
பதிவில் அலசுவோம்
இங்கே நாம் பேசுவது அத்திருக்கோயில் அர்ச்சகரையே..
ஆன்லைனில் விண்ணப்பித்துஆலயம் செல்லும் காலத்தில் – ஒரு
வெள்ளிக்கிழமை மாலையிலும் கூட
விடுமுறைநாள் பள்ளிக்கூடம் போல
வெறிச்சோடிக்கிடந்த
விருத்தகிரீஸ்வர ஆலயம் அது.
அற்புதமான முன்மண்டபத்து
சிற்பங்கள் , தூண்களெல்லாம்
தரிசித்துக்கொண்டே –
மூலவரை வணங்கிவிட்டு
பிரகாரமும் சுற்றிவந்தால்
ஒருவரையும் காணோம்.
அடியேனின் இஷ்டதெய்வமான
தக்ஷிணாமூர்த்தி முன்பாக
கண்கள் மூடி நின்றால்,
கருவறை பின்னே அமையப்பெற்ற
பாலாம்பிகை சன்னதியிலிருந்து
மந்திரங்களை சொல்லி அர்ச்சகர் பூஜிப்பது கேட்டது.
அழகான பாலாம்பிகை அம்பாள்
அவள் முன்னே மகாமேரு –
அதை கண்கள் மூடிக்கொண்டு
அர்ச்சிக்கும் சிவாச்சார்யார்
எதிரே சற்றுத் தள்ளி சுப்ரமண்யர்
வாசலில் நான் நிற்பது கூட அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சில நிமிடங்களில் மந்திர சப்தம் நின்று
” அம்மா – பாலாம்பிகே
உன்கிட்ட வந்து வேண்டிக்கிறவாளுக்கு
கேட்டதை கொடு
எந்த குறையும் வைக்காதே
உட்கார்ந்துட்டேனா – திரும்பி
எழுந்திருக்கிறதுதான் சிரமமே
இந்த மூட்டுவலிதான் போ
சரி – நான் மூத்தாள் சன்னதிக்கு
போறேன் “
( விருத்தாம்பிகை சன்னதி )..
என்னவோ பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு அம்மாவிடம் வீட்டில் பேசுவதுபோல
பேச்சுவழக்கு தமிழில் சரளமாக
பேசிக்கொண்டிருந்தார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
வெளியே வந்துதான் என்னைக் கவனித்தார். அடியேனை அறிமுகப்படுத்திக் கொண்டு
ஸ்தல புராணம் வினவினேன்.
” அப்படியே சுத்தி வந்துடுப்பா ” என்று
சொன்னவர்,
பெரிய அம்பாள் சன்னதியிலும்
மகாமேருவினை பூஜித்து
கற்பூர ஆரத்தியும் காண்பித்து
கோவிலின் பெருமை சொல்லி
தரிசனம் செய்துவைத்தார்.
தட்டில் காணிக்கை செலுத்திவிட்டு
பின்பு ஸ்வாமியும் நடராஜரும்
தரிசனம்.
இங்கேயும் தட்டில் காணிக்கை
செலுத்த விழைந்த என்னை தடுத்தார்.
“அதான் அம்பாள் சன்னிதியிலேயே
போட்டுட்டியே -போதுமே எனக்கு “
இல்ல மாமா, இது என்னோட
திருப்திக்காக..
கூட்டமே வராத இவ்ளோ பெரிய கோயிலிலே உங்க சிரத்தைக்கும்
ஆத்மார்த்தமான உங்க வேலைக்கும்
எவ்ளோ கொடுத்தாலும் தப்பில்ல ,
கூடிய சீக்கிரமே நான் ஒருநாள் குடும்பத்தோடு வந்து
ஸ்வாமி/ அம்பாளுக்கு அபிஷேகம்
பண்ணி வைக்க அனுமதி தரனும்
வர்றேன் மாமா,
” சந்தோஷம் பா,
நல்லா இரு , நல்லபடியா செய்யலாம்-
நேவேத்யம் ஆயிடு்ம் இப்ப,
சக்கரை பொங்கல் சாப்பிட்டு
போங்களேன் “
” இல்ல மாமா , பெரம்பலூர்ல முக்கியமா
வேலை இருக்கு , ஒருநாள் ஆற அமர
வந்து தரிசிக்கிறேன் “
————– —– —-
குறிப்பிடத்தகுந்தவை ;
- யாருமே இல்லாத சிவாலயம்
அவர் விடுவெடுவென விளக்கேற்றி
நேவேத்யம் சமர்ப்பித்துவிட்டு
வாசலில் வந்து உட்கார்ந்துக்
கொண்டால் கூட – அவரை யார் கேட்பது ? - நியமத்துடன் செய்கிறேன்
யாரிடமும் பேச மாட்டேன் என
நிறைய மேதமையுடன் இல்லாமல்
அம்பாளிடமே – அவர் வீட்டு தாய்குலங்கள் போல சரளமாக பேசியது - இரண்டாவது முறை காணிக்கை
இடும் போது –
அதான் அம்பாள் சன்னதியில்
கொடுத்தாச்சு – இது போதுமே
என்ற மனசு.
4. இதுபோல நிறைய….
என் #கருத்து ;-
இவர் போன்ற
அர்ச்சகர்கள் ஸ்வாமி/ அம்பாளுக்கு
மட்டும் நீர் ஊற்றவில்லை
ஆலமரமாம் இந்த
ஸனாதன தர்மத்தின்
வேர்களுக்கும்
நீர் வார்த்துக்கொண்டிருக்கின்றனர்
என்பதே உண்மை
( இத்திருத்தலத்தை தரிசிக்கத் தூண்டிய
முகநூல் நண்பர்கள்
திருவாளர்கள் ..
Ayyappa Sivam
ஆறகழூர் வெங்கடேசன் பொன்
Mahathma Selvapandiyan
Ponnambalam Chidambaram
அனைவருக்கும் எனது நன்றியும்
நமஸ்காரங்களும் )
திருச்சிற்றம்பலம்
M. #Raja_Mahalingam
திருக்கோடிக்காவல்
Leave a Comment
You must be logged in to post a comment.