Personal Blogging

சங்கின் நன்மைகள்

வீட்டு வாசலில் சங்கை கட்டி தொங்கவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என அறிவோம்சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.

இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர். வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.

About the author

Palakarai Sakthivel

Leave a Comment