“ ஸ்ரீரங்கம் ரங்கமன்னார்” தன் குழந்தைகளை அரவணைத்து எங்கோ ஒரு உச்சாணிக் கொம்பில் ஏற்றி உட்கார வைத்து விடுவார்.
இது ரங்கனின் பரிபூரண அருட் கடாட்சம்…..!
ஸ்ரீரங்கம் மண்ணின் மகத்துவம் …!!
எழுத்தாளர் திரு. கோகுல்சேஷாத்ரி அவர்கள் வரலாற்றில் எம்.ஏ.,எம்.பில் படிப்பு முடித்து சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் ( டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்
வித்தியாசமான கதைக் களங்களில் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளுடன் இவர் படைக்கும் புதினங்கள் வாசகர்களை இயல்பாகக் கடந்த காலத்திற்குக் கடத்திச் செல்கின்றன.
சென்னை… அண்ணாசாலையிலிருந்து LIC தாண்டி Greems Road, Appolo Hospital போகாமல் நேராக US எம்பஸி தாண்டி அண்ணா மேம்பாலம் வழியாக சைதாப்பேட்டையைக் கடந்து பின்னர் வலது பக்கம் திரும்பி தி.நகர் வெங்கட்ரமணா சாலையில் நுழைந்து விரைவில் திருமலா திருப்பதி கோவிலை அடைந்து தரிசனம் செய்தது போல…….
அன்றைய தஞ்சாவூரின் அமைப்பை அவர் சொல்லியிருக்கும் அழகைப் பாருங்கள்.
“உள்ளாலைக்குள் அவர்கள் செல்லவேண்டிய இடமான ஆட்கொண்ட வில்லியாரின் திருமாளிகை நகரின் மையத்தில் வட தெற்காக ஓடிய மும்முடிச் சோழன் வீதியிலிருந்து கிழக்கே பிரிந்த விச்சாதாரப் பெருவீதியும் உள்ளாலை சாலியத் தெருவும் சந்திக்கும் முனையில் அமைந்திருந்தது.
வண்டிக்காரன் விசாரித்துக் கொண்டே பராந்தகன் பெருவீதிக்குள் நுழைந்து தெற்கே இராஜகம்பீரன் திருவீதியில் திரும்பி விரைவில் விச்சாதாரப் பெருவீதியை அடைந்து விட்டான்…!!
ஒரே ஒரு சிறிய பத்தியில் எத்தனை இடங்கள், தெருக்கள், திசைகள் அனாயாசமாக வந்து போகின்றன என்பதைக் கவனித்தீர்களா..?
அமரர் கல்கி அவர்களின் பாணியில் எழுத்தாளருக்கு ஒரு ” பேஷ் ” போடலாமே…
ஆபத்துதவிகளின் பிரதிக்ஞை…
நூற்றுவர் குடும்பத்தில் பிறந்து ஆபத்துதவிப் படையில் இணையவிருக்கும் அத்தனை ஆண்பிள்ளைகளும் முள்ளூர் மாறனின் நடுகல்லுக்கு முன்னால் மச்ச முத்திரை வாங்கித் தலைப்பலி கொடுத்து வழுதிகுலப் பிரதிக்ஞையை ஏற்றாக வேண்டும்.
அதாவது பழங்காலத்தில் முள்ளூரில் போர் வீரர்கள் குடும்பத்தில் ஆண் குழந்தைகள் பிறந்தால் சிறு பிராயத்திலேயே அவர்களுக்குப் பதிலாக ஒரு வாழைக்கன்றை எடுத்து காளியின் முன்னால் வைத்து இதுதான் குழந்தை…என்று கூறிவிட்டு அதன் தலையைச் சீவி விடுவார்களாம்…!!குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அதனைச் செய்துவிட்டால் அதன் பிறகு காளிக்கும் அவளைச் சார்ந்த பேய்களுக்கும் அந்தக் குழந்தை தலையில்லா முண்டமாகவே தெரியுமாம்…!அதனால் போரக்களங்களில் அவர்களைப் பலி கொள்ள மாட்டார்களாம்..!
அதற்குத் தலைப்பலிச் சடங்கென்று பெயராம்.
கதையில் உருக்கமான இடம்,
மேலும் உணர்ச்சிகரமான இடம் இது!!
” தலைப்பலிச் சடங்கு நன்றாக முடிந்ததா? வாழைக்குலையின் தலையை வெட்டிவிட்டீர்களா?? இனி அவனும் ஆபத்துதவி ஆகிவிட்டானா “
” ஐயோ ..பாவி! உன்னை நம்பி என் பிள்ளையை ஒப்படைத்தேனே? தலைப்பலி…..சடங்கு என்று என் பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு போய்க் கடைசியில் அவன் தலையையே பலி கொடுத்து விட்டாயே? உன் இராஜ விசுவாசத்துக்கு ஒரு அளவேயில்லையா ? நமது பிள்ளையின் உயிரைக் கொடுத்துத்தான் நீ இளவரசனைக் காப்பாற்றியாக வேண்டுமா? அப்படி என்ன அந்தப் பிள்ளையின் உயிர் உசத்தி? என் பிள்ளையின் உயிர் மட்டம் ?
நேரமும், நிமித்தங்களும் சரியில்லை….என்று பலமுறை படித்துப் படித்துக் கூறினேனே?
வேண்டாம்……. வேண்டாம் என்று
காலைப்பிடித்துக் கெஞ்சிக் கதறினேனே…….கேட்டாயா?
இப்போது என்ன நடந்தது ? என் பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு நீ மட்டும் நன்றாக இருந்து விடுவாயா?
உனது நிழல் கூட இனி என் பெண் மீது படுவதற்கு அனுமதிக்கமாட்டேன்.
இனி நீ எங்கு வேண்டுமானாலும் செல்!! பாண்டிய அரச குலத்திற்கு உனது கடமையைத் தொடர்ந்து செய். அதற்கு…..அவர்கள் கொடுக்கும் பொற்கிழிகளையும் பரிவட்ட மரியாதைகளையும் வாங்கித் தலையில் சூட்டி மகிழ்ந்து கொள்..ஆனால் ஒன்று சொல்கிறேன். உனது தலைமுறை உன்னோடு முடிந்தது. இனி எத்தனை பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலும் உனக்கு ஆண் வாரிசு உருவாகாது
உனக்குப் பிறகு உன் குடும்பத்தில் எந்த ஆண்பிள்ளையும் ஆபத்துதவி ஆக மாட்டார்கள்…..நீதான் கடைசி….!!
அதனை நினைத்து நினத்து வருந்தித்தான் இறுதியில் சாவாய்.
பத்து மாதம் சுமந்து பிள்ளையைப் பெற்ற ஒருத்தியின் சாபம்…..இது!!
தெய்வம் என்று ஒன்று இருக்குமானால்……சத்தியம் என்று ஒன்று இருககுமானால்….என் சாபம் பலிக்கட்டும்!…என் சாபம்பலிக்கட்டும்!
திடீரென்று ஒருநாள் தஞ்சை முழுவதும் பெரியதொரு செய்தி அடிபட்டது…….!!
பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனும், பார்த்திவேந்திர வர்மனும் யாரும் எதிர்பாராத வகையில் சேனையுடன் பாண்டிய நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று வீரபாண்டியரைத் துரத்திச் சென்று பிடித்து கண்ட இடத்திலேயே அவரது தலையைக் கொய்து ” வீர பாண்டியன் தலைகொண்ட “என்ற பட்டத்தை இருவருமே சூட்டிக் கொண்டதாகவும், வெட்டிய தலையுடன் சோழசைனியம் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் செய்தி…!
வீரபாண்டியர்…தமது அண்ணனைச் சோழர்கள் வென்றுவிட்டார்கள் என்கிற கோபத்தில் ‘ உத்தமசீலியை வெட்டிக் கொன்றார்….! ‘சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்’ என்ற அருவருக்கத்தக்க பட்டத்தையும் பூண்டார்.
அதற்காக..!பலகீனமான படையுடன் பாதுகாவலின்றி அங்குமிங்கும் ஓடித்திரிந்து ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த அவரைச் சோழர்கள் வெட்டிக் கொல்வதா? வெட்டி ஈமச் சடங்குகள் கூடச் செய்ய இயலாத வகையில் அவரது சிரசை சோழ நாட்டிற்குள் பகிரங்கமாக எடுத்து வருவதா? ……
தென்னவன் ஆபத்துதவிகள் இதனை ஒருக்காலும் இப்படியே விட்டுவிட மாட்டார்கள்…தலையில்லா முண்டத்தின் மீது அத்தனை பேரும் பழிக்குப்பழி வாங்குவதாக ஓங்கியறைந்து சத்தியம் செய்திருப்பார்கள் ஒருநாள் இல்லை ஒருநாள் ஆதித்தனைப் பழி வாங்காமல் ஓயமாட்டார்கள்.
இந்தப் பழிவாங்கும் படலம் மாறி மாறித் தொடர்ந்து……..கொண்டே…….
இருக்குமோ ………!!
ஆதித்தகரிகாலர் கொலை ஒரு மில்லியன் டாலர் கேள்வி…..!!
அதைக் கண்டவர்…….விண்டிலர் …!!!
விண்டவர்…………………கண்டிலர்…..!!!
அதைப் போலத்தான் வீர பாண்டியரின் மரணமும்…..!!
இங்கே எழுத்தாளர் புரிந்துள்ள கற்பனை எழுத்தின் உச்சம்…
பார்ப்போம் வாருங்கள் ..
நான்கு ஆபத்துதவிகளுடன் வீரபாண்டியர் கண்மாய்க்
கரையோரமாக ஓடியுள்ளார். நாணற்புதர்களும் சேறும் மண்டிய இடத்தில் ஓடுவது அத்தனை எளிதாக இல்லை…!
சிறிது தூரத்தில் புரவிகளும் கால்நடையாக வீரர்களும் துரத்தி வருவது தெரிந்துள்ளது.
முதல் புரவியில் ஆதித்தனும் இன்னொரு புரவியில் பார்த்திவேந்தி
ரனும் வந்துள்ளார்கள். பாண்டியர் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு
விட்டார்…! ஆபத்துதவிகளின் காதுகளில் ஏதோ சொல்லிவிட்டு தனது உடைவாளைக் கழற்றி அவர்களிடம் கொடுத்துவிட்டார். அடுத்த சில நமிடங்களில் சோழர் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்துவிட்டார்கள்.
தலை குனியாமல் கண்ணிமையாமல் நேருக்கு நேராக ஆதித்தனைக் கணநேரம் நோக்கியுள்ளார்…!!
” வா ! ஆதித்தா ! அருகில் வா……
என் சிரம் தானே வேண்டும் ? வா! வந்து தாராளமாக வெட்டிக்கொள்…
வந்து என் சிரத்தை அறுத்துப் பகை முடித்துக் கொள்.
பார்த்திவேந்திரா! ….நீயும்….வா..
ஆதித்தனின் வீரச் செயலில் உனக்கும் பங்கிருக்க வேண்டுமல்லவா? வா…! வெறும் நான்கு பேருடன் நிற்கும் நிற்கும் இந்த வீரபாண்டியனின் தலையை ஒன்றுக்கு இரண்டு பேராக வந்து வெட்டிக் கொள்ளுங்கள்!………என்று
இரண்டு கரங்களையும் நீட்டியவாறு அவறியுள்ளார்.
இதைக் கேட்டதும் ஆதித்தருக்கும் கோபம் தலைக்கேறிவிட்டது .
” பாண்டியா, ஒவ்வொரு முறை நாங்கள் படையெடுத்து லரும்போதும் நீ ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாய். உனக்காகக் காத்திருந்து காத்திருந்து அலுத்துப் போய்விட்டது.
இதோ..! இந்த ஏரிக்கரையில் சேற்றுச் சகதியின் நடுவில் தான் உன்கதை முடிய வேண்டும் என்பது உன் தலைவிதி…!. ம்! ஆகட்டும் என்று கரத்தை உயர்த்திக் காட்டியபடி கையில் வாளுடன் பாண்டியரை நெருங்க முற்பட்டிருக்கிறான்.சுற்றிலு
மிருந்த முப்பது, முப்பத்தைந்து சோழ வீரர்களும் தத்தம் விற்களில் அம்புகளைப் பூட்டி ஆயத்தமாக நின்றுள்ளனர்…!!
மங்கிய தீபங்களின் வெளிச்சத்தில்
பாண்டியரின் திருமுகம் வீரக்களையுடன் பொலிந்தது.
“ஆதித்தா..!கடைசியாக ஒன்று சொல்கிறேன் கேள். இன்று எனக்குக் கிடைக்கப்போகும் வீர மரணம் உனக்கு ஒரு போதும் கிடைக்காது.
இந்த மண்ணையா சேற்று சகதி என்று சொல்கிறாய்!? என் பாட்டனும் பூட்டனும் தலைமுறை தலைமுறையாகத் தங்களின் செங்குருதி சிந்தி வளர்த்த மண்ணடா இது……!இதில் மடிவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமடா என் உடல் இந்த மண்ணோடு மண்ணாகத்தான் போகும்……இந்த மண்ணிலிருந்துதான் நான் மீண்டும் மீண்டும் பிறந்து எழுந்து வருவேன்….இதோ வருகிறேன்…”
ஏதோ நடக்கப் போகிறதென்று ஆதித்தர் சுதாரிப்பதற்குள் அருகிலிருந்த ஆபத்துதவியின் கையில் மறைந்திருந்த உடைவாளைச் கட்டென்று உருவிக் கையிலெடுத்துத் தனது கழுத்தை ஒரே வீச்சில்அறுத்தெறிந்துவிட்டார் பாண்டியர்..!!!.
அதனைச் சற்றும் எதிர்பாராத ஆதித்தர், திகைத்துப்போய் கல்லாய் சமைந்து நின்றுவிட்டார்.
ஏறக்குறைய அதே நேரத்தில்…. பாண்டியர் ஏதோ ஆதித்தரைத் தாக்க முற்படுகிறார் என்று தவறாகப் புரிந்து கொண்ட சோழ வீரர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வீச்சம்புகளைப் பொழிந்துள்ளனர் .
இந்த அம்புகள் அனைத்தையும் ஆபத்துதவிகள் நிமிர்ந்து நின்று மார்பிலும், தோள்களிலும் தாங்கிப் பாண்டியர் தமது வீரமரணத்தை நிகழ்த்த உறுதுணை புரிந்துள்ளார்கள். ஏறக்குறைய ஒரு அம்பு கூடப் பாண்டியரைத் தீண்ட அவர்கள் அனுமதிக்கவில்லை!!
அவரது சிரம் மண்ணில் கீழே விழுந்து உருண்ட பிறகுதான் ஆபத்துதவிகள் நால்வரின் உடல்களும் மண்ணில் சரிந்துள்ளன!
தன்னுடைய வாள் வீச்சுக்கு இடங்கொடாமல் பாண்டியர் மறைத்து வைக்கப்பட்டிருந்த உடைவாளால் தமது சிரத்தைத் தானே அறுத்துக் கொண்டு விட்டார் என்பதை உணர்ந்த ஆதித்தர் கடுங்கோபத்தில் பாண்…..டி….யா…ஆ…! என்று அலறியிருக்கிறார்.
அதன் பிறகு நடந்த பயங்கரத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை.தலை வெட்டப்பட்ட பாண்டியரின் உடல் சேறும் சகதியும் நிறைந்த மேற்குப் பகுதியை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கியுள்ளது…….!!
.சூழ்ந்து நின்ற சோழ வீரர்கள் அதனைக்கண்டு ஆடிப் போய்விட்டார்
கள் ….!! மெல்ல மெல்ல மேலும் நான்கைந்து அடிகள் முன்னேறி ஆப்படியே சேற்றில் அமிழத் தொடங்கியது..! அதன்பிறகு தான் அவரது முழங்கால் பகுதியை அனைவரும் கவனிக்க…….
அது ஒரு புதைசேற்றுக் குழி..!!!
தடாலென்று அவரது உடவ் கீழே விழுந்து
மெல்ல சேற்றுக்குள் அமிழத் தொடங்கியது.
தாம் இறந்து பட்டாலும் தமது உடல் ஒரு போதும் சோழர்களின் கையில் சிக்கக் கூடாது. பாண்டிய நாட்டின் மண்ணோடு மண்ணாகத்தான் போகவேண்டும்…….!!
உதிரத்தில் தோய்ந்த தலையை மட்டும் ஒரு துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு சோழ வீரர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
( இது சாத்தியமா என்று நேயர்கள் சந்தேகப்பட வேண்டாம். ஏறக்குறைய இதே போன்றதொரு நிகழ்வு ஐரொப்பாவில் நிகழ்ந்துள்ளது. அதனை நேரில் பார்த்த சாட்சிகள் ஆவணப் படுத்தியுள்ளனர்..ஆசிரியர்)
அற்புதமாக வடிவமைத்துக் கொடுத்த வரலாற்றுக் காதலர் திரு. சுந்தர் கிருஷ்ணன் சார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
மிகச் சிறப்பாகப் படைத்திட்ட எழுத்தாளர் திரு.கோகுல் சேஷாத்ரி அவர்களுக்குப் பாராட்டுக்கள் .
வெளியீடு செய்த பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாருக்குப் பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள்.
Leave a Comment
You must be logged in to post a comment.