Personal Blogging

வேழத்தின்_காட்சி

Written by Raja Mahalingam

யாருக்குத்தான் பிடிக்காது
பிரம்மாண்டம் ?
“அலைவீசும் கடல்
ஆர்ப்பரிக்கும் அருவி
அண்ணாந்து பார்க்கும் கோபுரம்
விண் தொடும் மலை முகடு
விரிந்து கிடக்கும் சமுத்திரம் “
இப்படி
உயர்ந்தவை, விரிந்தவை, பரந்தவை
ஆகிய
எல்லா பிரம்மாண்டங்களும்
அந்நியன் – ஷங்கர் முதல்
அக்கட தேசத்து ராஜமௌலி வரை
எல்லாரின் படைப்புகளும்…
ரசிக்கத்தக்கவையே
பிரமிக்கத்தக்கவையே.,
அவ்வரிசையில்
// களிறு,
புகர்முகம்,
கயவாய்,
பிடி,
வேழம்,
கைம்மா(ன்),
கோட்டுமா,
கயந்தலை,
கயமா,
பொங்கடி,
பிணிமுகம்,
மதமா,
வாரணம்,
குஞ்சரம்,
கரி //
இப்படி பல பெயர்களில்
தமிழ் இலக்கியம் கொண்டாடும்
யானை தான்,
காலையில் பிரமிக்க வைத்தது
என்னைத் தான் !

எத்தனை வயதானாலும் நமக்கு,
ஒரு யானை
ஒய்யாரமாக
சாலையில் நடந்துப் போகையில்
வண்டியை நிறுத்தி விட்டு
ரசிக்கவும்
தும்பிக்கையில் காசு வைத்து
வணங்கிடவும் தான்
தோன்றுகிறது…
அதிகாலை_சுபவேளை


M. #Raja_Mahalingam
திருக்கோடிக்காவல்.

About the author

Raja Mahalingam

Leave a Comment