Personal Blogging Unknown Author

நாகரீகப் போா்வை

25 வருடங்களுக்கு முன்
.

  1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
    கொண்டோம்..!
  2. காதலித்து திருமணம் செய்தாலும்
    கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி
    அழைப்பாள்..!
  3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
    தைத்து உடுத்தி கொண்டோம்..!
  4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
    சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்
    பருகினோம்..!
  5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு
    பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
  6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
    எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
  7. பெரும்பாலும் பேருந்தில் தான்
    போனோம்..!
  8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
    இருந்தனர்..!
  9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
  10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
  11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும்
    கடிதங்கள் எழுதினோம்..!
  12. ரஜினி கமல் ‘பொங்கல்’ ‘தீபாவளி’ க்ரீடிங்க்ஸ்
    கிடைத்தது..!
  13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
    பார்த்தோம்..!
  14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை
    பார்த்தோம்..!
  15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
  16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
    வந்தார்..!
  17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
    பயந்தோம்..!
  18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள்
    முன்னரே வந்தனர்..!
  19. எல்லாவற்றையும் விட காலை
    பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
    சுவாசிக்கவும் யோசிக்கவும்.

    முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை
    தொலைத்தோம்..!
    நாகரீகப் போா்வை” போா்த்தி நாசமாய் போனோம்..!
    அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
    இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!
    இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்
    தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்
    மீட்க முடியாது…!

படித்ததில் பிடித்தது.

About the author

Srinivas Parthasarathy

Leave a Comment