Personal Blogging Spiritual

கோயில் அர்ச்சகர்

Written by Raja Mahalingam

கடந்த இரு தினங்களில்
பல திருக்கோயில் அர்ச்சகர்களின்
பரம்பரையான வேலை
பறிக்கப்பட்டு , அவர்கள் மனமுடைந்து புலம்பும் செய்திகள் – சமூக ஊடகங்களில் வந்தவண்ணம்
இருக்கின்றன.
மரபுகளிலும், சம்பிரதாயங்களிலும்
அத்துமீறுவது எவ்வகையில்
நல்லது ?
இது எவ்விதத்தில் சமயசார்பின்மை ?
நடுநிலைமை ?
சரி , காலங்காலமாக
கடைபிடித்துவந்த சம்பிரதாயங்களை
மீறி ஒருவரின் வேலையைப்
பறித்து இன்னொருவருக்கு
கொடுத்து தான்
இந்த மாநிலத்தில்
சமூகநீதியினை
நிலைநாட்ட முடியும்
என்ற முடிவுக்கு
ஆட்சியாளர்களும்
ஊடகங்களும் வந்ததே
மிகப்பெரும் துரதிருஷ்டம்.

  1. வெளிநாட்டிலோ
    தலைநகரிலோ கணிசமான
    வருமானம் ஈட்டி வந்த
    இன்றைய தலைமுறை
    அர்ச்சகர்கள் –
    அவர்களின் சொந்த கிராமத்தில்
    தந்தையின் மறைவுக்குப் பிறகு
    திருக்கோயில் –
    பூஜை இல்லாமல் நிற்கக் கூடாது
    என்று
    தனது பாரம்பர்ய முறை இருக்கும்
    அதுவும் சிறிதும் பொருளாதாரமே
    இல்லாத கிராமத்து சிறுகோயில்களின்
    சாவியை கையில் எடுத்த
    அர்ச்சகர்களைப் பற்றி
    யாருக்குத் தெரியும் ?
  2. இன்றைக்கு தானே
    மோட்டார் பம்புகளும்
    தொட்டிகளும், குழாய் நீரும்…
    ஆண்டாண்டுகளாக
    குடம்குடமாக நீரினை
    தலையில் சுமந்து வந்து
    பூஜை செய்தவர்களையே
    இன்று அந்த கோயிலுக்கு
    சம்மந்தமில்லாத நிலைக்கு
    தள்ளியிருக்கிறோம்.
  3. இரண்டு கழகங்களும்
    மாறி மாறி ஆட்சிசெய்த
    ஐம்பது ஆண்டுகளில்
    எத்தனையோ
    ஜாதிக் கலவரங்கள்,
    வன்முறைகள் நடந்தனவே –
    அதற்கு காரணமான
    அந்தந்த பிரதேசத்து
    ஆட்களிடம் நடவடிக்கை எடுத்திருந்தாலே
    சமூகநீதியை நிலைநாட்டி இருக்கலாமே –
    அதையெல்லாம் விட்டுவிட்டு
    ‘ஊருக்கு இளைத்தவன்’
    என்று திருக்கோயில்
    சம்பிரதாயங்களில் வந்துதானே
    நாம் சமூகநீதியை
    நிலைநாட்டுவோம்.
  4. சில நூற்றாண்டுகளுக்கு
    முன்பாக , அந்நியரின்
    படையெடுப்பினாலும்
    முற்றுகையினாலும்
    ஆலயங்களும் இறைமூர்த்தங்களும்
    சின்னாபின்னமாகியபோது
    ஊர் பொதுமக்களுடன்
    அதை எதிர்த்து
    போதிய உடல்வலுவில்லாத
    அர்ச்சகர்களும் சேர்ந்தே
    போராடி உயிர்துறந்தனர்.
    இன்றைய நாளில்
    அந்த வாரிசு , இந்த வாரிசு
    என்றெல்லாம் ஆண்டுதோறும்
    கௌரவிக்கிறோமே ?
    நமது பண்டைய ஆலயங்களைக்
    காப்பாற்ற போராடிய
    அந்த குடும்பத்தின் வாரிசுகள்
    என்று இன்றைய தலைமுறைக்கு
    யாரைத் தெரியும் ?
  5. சரி , ஏற்கனவே இதர பிரிவினரும்
    அர்ச்சகர்களாக இருக்கும்
    நிலை இருந்ததே எத்தனையோ
    ஆலயங்களில்…
    அது ஊடகங்கள் அறியுமா ?
    கும்பகோணம் – நன்னிலம்
    சாலையில் அமைந்த
    பிரசித்தி பெற்ற
    சித்தாடி காத்தாயி அம்மன்
    பெரம்பலூர் அருகே
    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
    கும்பகோணம் மடத்துத் தெரு
    படவேடுமாரியம்மன்
    வலங்கைமான் மாரியம்மன்
    நாச்சியார்கோயில்
    ஆகாச மாரியம்மன்
    இன்னும் அதுபோன்ற
    எத்தனையோ இறைசக்திகளே,
    பிராமண சமுதாய மக்கள்
    ஆயிரக்கணக்கான பேருக்கு

குலதெய்வமே.

அங்கே அந்தந்த கோயில்
மரபு வழிவந்த பிரிவினரே
பூஜிக்கின்றனர்.
அங்கே குலதெய்வ வழிபாட்டுக்கு
வரும் பிராமணர்களும்
இந்த சம்பிரதாய வழியையே
சிரமேற்று வருகின்றனர்
ஆண்டுதோறும்.

  1. சரி , இந்த சமூகநீதி
    என்பது நமது சமுதாயத்தில்
    மட்டும்தானா நிறைவேற்றனும் ?
    அத்தனை மார்க்கத்து
    அத்தனை மதத்து
    ஆலயங்களிலும்
    ஆட்சியாளர்கள் புகுந்து அதன்
    வழிபாட்டு சம்பிரதாயங்களை
    மாற்றி , புரட்சி செய்யலாமே ?
    வேண்டாம், நாம் அதை
    எதிர்பார்க்கவில்லை.
    இது அவர்களின் சம்பிரதாயம்.
    அவரவர் உரிமைகளிலும்
    அவரவர் முறைகளிலும்
    நாம் தலையிடுவது, கருத்திடுவது
    எல்லாம் முறையில்லை, அழகுமில்லை.
  2. எது எதற்கோ குறைந்தபட்ச
    வேலை நேரம் , ஊதியம்
    கேட்டு போராட்டம் எல்லாம்
    உண்டு இவ்விடத்திலே.
    ஆனால் ரூபாய் 600, 900, 1000
    2,000 என்ற மாதச்சம்பளம்தான்
    பெரும்பாலான ஆலய
    அர்ச்சகர்களுக்கு –
    இதெல்லாம் பங்கிட
    யார் முன்வருவார்கள் ?
  3. இதைவிட பெரிய அபத்தம்
    ஒன்று நேற்று கண்டோம்.
    “முதல் பெண் ஓதுவார்” என்று
    ஊடக விளம்பரங்கள்.
    எத்தனையோ கோயில்களில்
    இங்கே வருமானமேயில்லாது
    சிவபக்திக்காகவே
    தலைமுறை தலைமுறையாக
    “ஓதுவார்கள்”
    திருமுறை இசைத்து வருகின்றனர்.
    மடங்களும் ஆதீனங்களுமே
    அந்த ஓதுவார்களை
    ஆண்டுதோறும் கௌரவித்து
    வருகின்றன.
    அந்த பழம்பெரும் ஓதுவார்
    தலைமுறைக்கே
    அதில் பக்தியில் திளைத்த
    பெரியவர்களுக்கே
    கிடைக்காத
    அங்கீகாரம் – திடீரென்று
    ஒரேநாளில் இந்த பெண்மணிக்கு
    கிடைக்கின்றது.
  4. பெண்களுக்கு , பக்தைகளுக்கு
    முக்கியத்துவம் கொடுக்காத
    சமயமா இது ?
    ராகுகால வழிபாடு
    குத்துவிளக்கு பூஜை
    சுமங்கலி பூஜை
    ஆடி மாதத்து வழிபாடுகள்
    என்று பெண்களை முன்னிலைப்படுத்தி
    அவர்களை கீர்த்தனைகளும்
    தமிழிசையும் பாடச்செய்து
    முறைமை செய்த
    தேசம்தானே இது !

இதுஎன்னஒருநாள்_கூத்து ?

இறுதியாக ஒன்று !
விஜயகாந்த் நடித்த
மிகப்பெரும் வெற்றிப்படமான
“சின்னக்கவுண்டர் ” எனும்
திரைப்படத்தில்
முதற்காட்சியே –
ஒரு பஞ்சாயத்து காட்சிதான்.
கோயில் நிலம் என்னுடையது
என்று வில்லன் தரப்பு
கோயிலை பூட்டி வைத்திருக்கும்.
அதில் விஜயகாந்த் தீர்ப்பு சொல்வார்.
அந்த பஞ்சாயத்து காட்சி
நிறைவிலே ஒரு வசனம் வரும்.
// சாமி எல்லா இடத்திலும்
இருந்தாலும் , அத கும்பிடறதுக்குனு
ஒரு இடம் வேணும்
அதுக்கு பேருதான் கோயில்.
அத தூக்கி வச்சு விளையாட
மனுஷனுக்கு சக்தி கிடையாது
அதுல போயி நாம தகராறும்
பண்ணக் கூடாது //

About the author

Raja Mahalingam

Leave a Comment