Personal Blogging Spiritual

தண்டந்தோட்டம் #சிவாலயம்

Written by Raja Mahalingam

தோழமைக்கு வணக்கங்கள்,
தினசரி நித்யபடி பூஜையிலேயே
அழகான அலங்காரத்துடன்
சிவலிங்கத்தினை தரிசிக்கத் தூண்டுபவர்,
சிவாச்சார்யார்
திரு. Natarajagurukkal Raju அவர்கள்.
இறைவனுக்கு உகந்த
#ஆருத்ரா தரிசனம்
என்றால்,
அதுவும் இறைவனின் திருநாமம்

நடனபுரீஸ்வரஸ்வாமி

எனுப்போது,
என்னவெல்லாம் செய்திருப்பார் ?
எப்படியெல்லாம்
அலங்கரித்திருப்பார் ?
வாருங்களேன் நாமும்
தரிசிக்கலாம்.
கும்பகோணம் –
திருநாகேஸ்வரம் –
அருகே அமைந்துள்ள

தடைகளை #நீக்கும் #தண்டந்தோட்டம்

எனும் பெயர் பெற்ற சிவாலயம்.

பொதுவாகவே நமது ஆலய வழிபாட்டில்
இறைவனின் திருமேனி அலங்காரத்தினைப் பொறுத்தவரையில்
பக்தர்கள் அனைவருமே –
சிவன் – அபிஷேகப் பிரியர்
பெருமாள் – அலங்காரப் பிரியர் என்பர்.
அதென்னவோ
பெருமாள், அம்பாள் , சுப்ரமணியர்
திருமேனிகளுக்கு அலங்காரத்தினை எவ்வளவு
சிரத்தையாக , நேர்த்தியாக செய்ய முடியுமோ அத்தனை அழகாக செய்யும்
அர்ச்சகப் பெருமக்களைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் சிவலிங்கத் திருமேனிக்கு
என்னமோ , நிறைய திரவியங்களுடன்
அபிஷேகங்கள் உண்டு.
வஸ்திரம், ருத்ராக்ஷ மாலை,

சந்தனம், குங்குமம் , புஷ்பம், வில்வம் தாண்டி வேறு எதுவும் பெரிதாக அலங்காரம் இருக்காது

தண்டந்தோட்டம்

நடனபுரீஸ்வர ஸ்வாமிக்குத்தான்
இப்படி மெனக்கெட்டு சிரத்தையாக
ஒவ்வொன்றாக மெருகேற்றி
அலங்காரம் செய்கிறார் தினமும்
சிவாச்சாரியார் திரு. #ராஜூ #அண்ணா.
அம்பாளை விட இங்கே
இறைவனையே அதிகம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத்
தோன்றும்.
நித்யபடி பூஜையிலேயே கூட
வில்வ மாலை, நிறைய புஷ்பங்கள்,
ருத்ராக்ஷ மாலை என
அமர்க்களமாக இருப்பார்
அம்பலத்தாடும் இறைவன்.
( இப்போது நீங்கள் பார்ப்பது –
கடந்த ஞாயிறன்று

ஆருத்ரா #தரிசனக் #காட்சியளிக்கும்

நடனபுரீஸ்வரஸ்வாமி )

இடது பதம் தூக்கி
ஆடும் நடராஜர்
இம்மையில்
நம்மையும் அருளிச் செய்கவே !!
திருச்சிற்றம்பலம்..
M. Raja Mahalingam
திருக்கோடிக்காவல்

About the author

Raja Mahalingam

Leave a Comment