மஹோன்னதர்களின் வாக்கும்
சித்த புருஷர்களின் வார்த்தைகளும்
நடைமுறையில்
மெய்ப்பிக்கப்படும்போதுதான்
அதன் தாக்கம் – இந்த
சராசரி மனித வாழ்க்கையில்
நமக்கும் புரிகிறது.
மஹாகவிசுப்ரமண்யபாரதி
கொட்டிய ஜெயபேரிகை இது.,
” காக்கை,குருவி எங்கள் ஜாதி- நீள்
கடலும், மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களியாட்டம்”
ஆம்,
இந்த பாடலை சிரமேற்று
தினந்தோறும் காக்கைகளுக்கு
உணவிடும்
ஒரு மலைநாட்டு மனிதரையே
இன்று பார்க்கப் போகிறோம்.
? ? ? ? ?.
போடிநாயக்கனூர்
மேற்கு தொடர்ச்சி மலைகளால்
மூன்று பக்கமும் சூழ்ந்து
எட்டு திக்குகளிலிருந்தும்
ஏலக்காய் வாசனையை
காற்று சுமந்து வர,
நடுவிலே ஊரும்
நாயக்கர் காலத்து பாளையம்
எனும் பெருமையும் கொண்ட
நகரம் – போடிநாயக்கனூர்.
அங்கே
தமது வாழ்நாளை
வித்தியாசமானதாய் மாற்றிவரும்
மனிதர் – அண்ணன்
திருவாளர் வாசுதேவன்
இவர்,
ஐயன்_பாலகுமாரன் அவர்களுடன்
நெருங்கிய நட்பு கொண்டவர்,
திருவண்ணாமலை மஹான்
யோகிராம்சுரத்குமார்-ன்
பரமபக்தர்.
போடிநாயக்கனூரில்
மரச்செக்கு எண்ணெய் ஆலை,
கடலை கடை,
ஓட்டல் என்று
பல்வேறு தொழில்களை
நடத்தி வரும்
ஒரு பாரம்பர்ய தொழிலதிபர்.
நிற்க,
கடந்த ஆறு ஆண்டுகளாக
தொடர்ந்து கூட்டம் கூட்டமாக
காகங்கள்
இவர் வீடு தேடி
அதிகாலையில்
உணவுக்காக கூடும் காட்சி
உணர்வுபூர்வமானது.
அதை விவரிக்கும் முன்பாக
காக்கைகள் உணவு உண்ணும்
காட்சியை தன்னுடைய
ஒரு நாவலில்
எழுத்துச்சித்தர்_பாலகுமாரன்
விவரிக்கும் அழகை பார்த்து
வருவோமா ?
(நாவல் –
“எங்கள் காதல் ஒரு தினுசு”)
———— —— —– —
#காக்கைகள்;- உண்பதில்
மிக ஆவலுடையவை, அவைகள் காத்திருக்கும் அழகும்,
சோறு போட்டவுடன் தின்கின்ற வேகமும் பார்க்கவே பரவசமாக
இருக்கும்.
அவை
#குருவிகள் போல
ஆட்கள் நகரும் வரை காத்திருக்காது,
#பருந்துகள் போல
பிடுங்கிக் கொண்டும் ஓடாது,
#புறாக்கள் போல
வெறுமே இடதும் வலதுமாய்
அலைந்து அலட்சியம் காட்டாது .
காக்கைகள் அமைதியாய் சோறுபோடுபவர் கையிலிருக்கும்
உணவையே பார்த்துக்
கொண்டிருக்கும்.
உணவு போட்டதும் லபக்கென்று
பாய்ந்து அவசரமாக அதை கவ்விக்கொள்ளும், கீழ்த்தாடையில்
அதக்கிக் கொள்ளும்.
இதுபோல காத்திருக்கும் காக்கைகளுக்கு
சோறு போடுவது என்பது ஒரு
சந்தோஷமான விஷயமே..
ஆவலாக சாப்பிடுகிற
யாவருக்கும் சோறு போட ,
பரிமாறுபவர்களுக்கு
ரொம்ப பிடிக்கும்.
நிற்க,
இவரது வீட்டில் நடக்கும்
இந்த தினசரி காட்சியை
அவரிடம் கேட்டோம்.
அந்த டெலிபோன் உரையாடல்
இங்கே முகநூல் பதிவாக…
? ? ? ? ?.
அண்ணே,
உங்க வீடியோ எல்லாம்
பார்த்தேன், ரொம்ப சந்தோஷம் –
ஒரு நூறு காக்கைகள் இருக்குமாண்ணே ?
ஆங், ஒரு முன்னூறுலேர்ந்து
நானூறு காகம் வரைக்கும்
வரும் ராஜா !
ஏயப்பா, இங்கே
நம்ம ஊரில் எல்லாம்
அமாவாசை அன்னிக்கு
நாங்க தான் கரையுறோம்
காகான்னு, ஒன்னே ஒன்னு கூட
காணும்ணே ? ? !
இங்கே நம்ம வீடுதாங்க தம்பி
அதுங்க காலையில்
Assemble ஆகிற இடம்.
அண்ணே , சுமார் எத்தனை மணிக்கு
வருங்கண்ணே ?
சரியா 6 மணிக்கு நான்
வந்து கதவை திறக்கலேன்னா
அதுங்க போடுற கூச்சலிலே
கத்துற கரைச்சலிலே
நாம எழுந்து ஓடிவரனும் தம்பி !
என்ன ஆகாரம் அண்ணே
அதுங்களுக்கு !
முன்னாடி எல்லாம் ஓமப்பொடி
போடுவேன் தம்பி,
இப்பெல்லாம் காராபூந்தி தான்.
நம்ம கடலைக்கடைக்கு
தயார் பண்ணும்போதே
ஒரு டின்னு தனியா எடுத்து
வச்சுருவாங்க.
நம்மல பாத்து கலைஞ்சு
போகாதா எல்லாம் ?
இல்லை தம்பி, கொஞ்சம் கொஞ்சமாய்
அது கூட்டம் சேர்க்கும்
ஒரே ஒரு காராபூந்தி கூட
வீணாப் போகாது.
சுத்தமா சாப்பிட்டு போனபிறகுதான்
நான் உள்ளே வருவேன்.
அண்ணே, நீங்க
வெளியூர் போற மாதிரி
ஏதாவது சந்தர்ப்பம் வந்தால் ?
தம்பி , என் பொண்ணு
தவறாம இந்த வேலையை
செஞ்சிட்டு – எனக்கு
வாட்ஸ் அப்பில் போட்டோ
அனுப்பிடும் .
ஆஹா , புண்ணியம் அண்ணே
புண்ணியம் இது.
பொதுவாக காகங்களுக்கு
உணவிடுவதை – பித்ருக்களுக்கு –
அதாவது நம்ம முன்னோர்களுக்கு
உணவு தருவதாக
நம்ம இந்து மதம் சொல்லுது,
- அண்ணே –
நான் நினைக்கிறேன் !
உங்க பல தலைமுறை
முன்னோர்கள் எல்லாம்
தினமும் கூடிநின்னு
உங்க கையாலே
உணவு எடுத்துக்கிட்டு போறாங்களோ
என்னவோ !!
தம்பி , என் முன்னோர்கள்
மட்டுமில்லை ,
நம்ம உறவினர்கள், நண்பர்கள்,
பாலகுமாரன் வாசகர்கள்
இப்படி எல்லாரின் முன்னோர்களுக்கும்
எனது கையாலேயே உணவிடுறதா
நினைக்கிறேன் ராஜா !
” ஆஹா ஆஹா
சந்தோஷம் அண்ணே “
நன்றி
வணக்கம் தம்பி
என்று விடைபெற்று
மொபைல்போனை வைத்தபின்பும்
அந்த ஆச்சர்யம்
தாங்காது நின்ற எனக்கு,
C.S ஜெயராமனின்
பராசக்தி – பாடல்தான்
வாயசைவில்…
//அந்த அனுபவப் பொருள் விளங்க
காக்கை அண்ணாவே – நீங்கள்
அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க
காக்கை அண்ணாவே – நீங்கள்
அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க
கா கா வென ஒண்ணாக
கூடுவீங்க
வாங்க கா… கா… கா… //
கரைந்த நினைவுகளுடன்
M. #Raja_Mahalingam
திருக்கோடிக்காவல்.
Leave a Comment
You must be logged in to post a comment.