Personal Blogging

திருமுருக கிருபானந்தவாரியார்

திருமுருக கிருபானந்தவாரியார்
வரலாறு சுருக்கம்:
சொல்லால், செயலதனால், சொற்பொழிவால், கீதத்தால்
வல்ல அணிப்பூசை மாண்பதனால் – எல்லார்க்கும்
இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமி
வல்லாண்மை மேலாகு மால் – தவத்திரு சுந்தரசுவாமிகள்

1933 – ஆம் ஆண்டு. வயலூர் கோயிலின் அறங்காவலர், திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவரது கனவில் வயலூர் முருகன் தோன்றி, எட்டணா பெற்றுக் கொண்டாயே! அதனால், திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி முடித்துவிடுவாயா? என்று கேட்டார். செட்டியாருக்கு எதுவும் புரியவில்லை. பயத்தால் உடல் வெலவெலத்தது. பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தார். காலையில் வண்டியைக் கட்டிக் கொண்டு நேராக வயலூர் சென்றார். கோயிலில், அர்ச்சகர் ஜம்புநாதன் என்னும் பதினெட்டு வயது இளைஞர் இருந்தார்.
நேற்று யார் தரிசனத்துக்கு வந்து எட்டணா கொடுத்தார்? என்று கேட்டார் செட்டியார்.
காங்கேய நல்லூரிலிருந்து மல்லையதாஸ் பாகவதர் குமாரர் கிருபானந்தவாரி என்பவர் எட்டணா கொடுத்தார். வெள்ளி கவசம் சாத்தி தரிசனம் செய்து வைத்தேன். இதோ பதிவுப் புத்தகத்தில் அவருடைய விலாசம் உள்ளது என்றார் அர்ச்சகர்.
அந்த எட்டணாவை என்னிடம் கொடு என்றார் செட்டியார். மணியார்டர் கூப்பனில் ஆண்டவன் கட்டளைப்படி தாங்கள் செலுத்திய எட்டணாவை திரும்ப அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள் என்று எழுதி வாரியார் முகவரிக்கு மணியார்டர் செய்து விட்டார். திருப்பணி செய்யும் பொறுப்பையே ஏற்று முடிக்கத் தக்கவரிடம் இந்த எட்டணாவை வாங்கிக்கொண்டு திருப்தி அடையலாமா? என்ற குறிப்பை வயலூர் முருகன் தெரிவித்ததாக செட்டியார் எண்ணினார்.
தல யாத்திரை முடித்துக்கொண்டு காங்கேயநல்லூர் திரும்பிய வாரியாருக்கு மணியார்டர் காத்திருந்தது. அதனைப் பெற்றுக் கொண்டு கூப்பனைப் படித்தார். ஒன்றும் புரியவில்லை. பின்னர், திருச்சியில் உபன்யாசத்துக்குச் சென்ற வாரியாரை செட்டியார் சந்தித்தார். கனவில் நடந்ததைச் சொல்லி, வயலூர் ராஜகோபுரத் திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து திருச்சியில் சொற்பொழிவு ஆரம்பித்து, அதன் மூலம் பணம் வசூல் செய்து ராஜ கோபுரத் திருப்பணியை 1935ஆம் ஆண்டு தொடங்கினார்.
இந்த நிலையில் ஒரு நாள் இரவு வாரியாரின் கனவில், காங்கேயநல்லூர் முருகன் கோயில் காட்சி தெரிகிறது. அங்கு கோயிலில் முருகப் பெருமான் உலா வந்துகொண்டிருந்தார். வாரியார், அருணகிரிநாதர் சன்னதி முன்பு நின்று தொழுது நிற்கிறார். அருணகிரியாரது சிலை சற்றே சாய்ந்திருக்கிறது. அண்மையில்தானே அஷ்டபந்தனம் சாத்தி எழுந்தருளச் செய்திருந்தோம். இத்தனை விரைவில் சிலை சாய்ந்து விட்டதே என்று வருந்தினார்.
அப்போது காவியணிந்த சந்நியாசி கோலத்தில் காட்சி அளித்த ஒருவர், அன்பனே! எனக்கு மிகவும் பசி. ஏதேனும் உணவு கிடைக்குமா? என்கிறார். மாலை மூன்று மணியாகிவிட்டதே! அதனால் எதுவும் ஆயத்தமாக இல்லை என்று இவர் பதில் சொல்ல, ஏதாவது செய்து கொடு என்கிறார் சந்நியாசி. சரி சுவாமி, அரிசி நொய்யில் உப்புமா செய்து தரட்டுமா? என்று இவர் கேட்க, அப்படியே ஏதாவது கொடு என்று கூறிய வண்ணம் சந்நியாசி கோலத்தில் வந்தவர் மறைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, சாய்ந்திருந்த அருணகிரியாரது சிலை நிமிர்ந்திருக்கக் கண்டார் வாரியார்.
உடனே, கண் விழிப்புற்றார் வாரியார். காங்கேயநல்லூரில் எழுந்தருளியிருக்கும் குருநாதருக்கு அறக்கட்டளை நிறுவ அடியேனுக்கு இட்ட கட்டளை இதுபோலும் என முடிவு செய்து தந்தைக்குக் கடிதம் எழுதினார். தினமும் ஒர் படி அரிசி சமைத்து நிவேதனம் செய்து, அதை தேசாந்திரிகளாக வரும் ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். இக்கட்டளை நிரந்தரமாக நிகழ்ந்து வர வேண்டி, அதற்கான நிலத்தையும் வாங்கினார். இன்றளவும் தினமும் ஏழைகள் உண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
வயலூர் திருப்பணிக்கு முப்பதாயிரம் வசூலித்து கும்பாபிஷேகமும் நன்கு நடத்தினார். இந்தச் செய்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்தது. ஆனால், வயலூர் என்பதற்குப் பதிலாக வடலூர் என்று அச்சிட்டுவிட்டனர். ஒரே எழுத்துதான் மாறுதல். அதுவே, இன்னொரு திருப்பணிக்கு அச்சாரமாகிவிட்டது. வயலூர் திருப்பணிக்குப் பிறகு வடலூர் சித்திவளாகத் திருப்பணிக்கு உத்தரவாகிறது என்றனர் அன்பர்கள்.
வடலூர் திருப்பணியை வாரியார் மிகவும் கஷ்டப்பட்டே செய்தார். திருப்பணி செலவுக்குப் பணமில்லாதபோது, தமது தங்க ருத்ராட்ச கண்டிகையை அடகு வைத்துப் பணம் வாங்கிச் செலவு செய்தார். இப்படி வயலூர், வடலூர், வள்ளிமலை ஆகிய தலங்களின் திருப்பணிகள் வாரியார் வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. இன்னும் எத்தனையோ பலநூறு கோயில்கள்.. அவர் செய்த திருப்பணி செலவுத் தொகையை கூட்டினால் பல கோடிக்கு மேல் ஆகும். கோடி ரூபாய் சேர்த்தவர் கோடீஸ்வரர் அல்லர்; கோடி ரூபாய் தர்மம் செய்தவர், திருப்பணி செய்தவரே கோடீஸ்வரர். அந்நிலையில் வாரியார் பலகோடி புண்ணியத்தைச் சேர்த்தவர்.
1933-ல் கதிர்காமக் கந்தன் கோயிலில் ஆடி வேல்விழாவில் கலந்துகொண்டார்

About the author

Palakarai Sakthivel

Leave a Comment