Tamil Language Unknown Author

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.
க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18

(உயிர்மெய் எழுத்துக்கள்: 216. இவற்றை மற்ற எந்த மொழியிலும் எழுத்துக்களாக சேர்ப்பதில்லை. எனவே நாமும் இவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டாம் )

ஆய்த எழுத்து: 1

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 31

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.
க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி ‘த’ வாகவும், ம்+இ கூடி ‘மி’ யாகவும், ழ்+உ கூடி “ழு” வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தைத் நீக்கித் தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!…

S. Krishnasamy

About the author

Srinivas Parthasarathy

Leave a Comment