அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை’
இளம் பிள்ளைகளாக நாங்கள் இருந்த பொழுதே நாங்கள் அணிந்த சட்டைகளும் பேண்டுகளும் வித்தியாசமாக அமைந்ததற்குக் காரணம் இராயப்பேட்டை கவுடியா மடத்திலுள்ள ‘ஜூவல் டெய்லர்ஸ்’தான். அதேபோல அருகிலுள்ள பைலட் திரையரங்கத்தில் நாங்கள் பல திரைப்படங்களைப் பார்த்துள்ளோம். குறிப்பாக, ‘காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தை அங்கு தான் நாங்கள் பார்த்தோம்.
அண்ணாநகரில் எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே, பெரிய விளம்பர நிறுவனத்தை நடத்திய திரு.இ.பி.ஜி. நம்பியார், சென்னையின் ஆட்சியராக இருந்த திரு.எம்.ஏ. ஷெரீப் இ.ஆ.ப., தலைசிறந்த குழந்தை நல மருத்துவர் திருஞானசம்பந்தம், திரு. சீதாராம்தாஸ், இ.ஆ.ப., திரு. ஏ.பி. முத்துசாமி, இ.ஆ.ப., முன்னாள் தலைமைச் செயலாளர் திரு.ஜெ.ஆர். இராமநாதன், இ.ஆ.ப., திரு.சி.என். இராமதாசு, இ.ஆ.ப., திரு.ஷெனாய், இ.கா.ப. ஆகியோர் இல்லங்களும் அமைந்திருந்தன. எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த ஃபோர்டீன் ஷாப்ஸில் (14 Shops) இல்டா (HILDA) ஸ்டோர்ஸ் என்ற கடையும் இருந்தது. என்னுடைய அப்பா தொலைபேசியில் யார் பேசினாலும், “இல்டா ஸ்டோர்சுக்குப் பின்புறம் வாருங்கள் அங்குதான் என்னுடைய இல்லம் உள்ளது” என்று பேசுவார்கள்.
அதேபோல முன்னாள் சட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.பொன்னையன் இல்லமும், எங்களுடைய ஆசிரியர் திருமதி. சாவித்திரி அம்மையார் இல்லமும் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. குடும்ப நண்பர் என்கிற வகையில், அவர்களுடைய இல்லத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் பலமுறை வந்து செல்வார்.
தீபாவளியை முன்னிட்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் வந்த பொழுது எனக்கு எப்படி பட்டாசு வெடிப்பது என்று கற்றுக் கொடுத்தார். ஒரு வத்திப்பெட்டி அளவுக்கு உள்ள ஒரு ரயில் பெட்டி, கயிற்றிலே வேகமாகப் போவது போல வெடி வெடிக்கும் ஓர் அற்புதமான நிகழ்வையும், எப்படியெல்லாம் பட்டாசுகள் வெடிக்கலாம் என்பதையெல்லாம் அவர் எனக்கு பொறுமையாகக் கற்றுக்கொடுத்தது இன்றைக்கும் நினைவில் உள்ளது.
அண்ணாநகர் இல்லம் அருகில்தான் பாரதரத்னா எம். விஸ்வேஸ்வரய்யா கோபுரம் உள்ளது. கல்லூரிக் காலங்களில் என் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்குள்ள படகுக் குழாத்தில் படகிலேயே சென்ற நினைவுகள் எல்லாம் எனக்கு நினைவில் உள்ளது. சென்னை கிறித்துவப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நாட்டு நலப்பணித்திட்டத்தில் நான் சேர்ந்து அங்கும் சமூகத் தொண்டில் ஈடுபட்டேன். அதேபோல புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியிலும் நாட்டு நலப்பணித்திட்டத்தில் கலந்து கொண்டேன். தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின் அணிவகுப்பின் பள்ளியின் சார்பாக கலந்து கொண்டேன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கட்டிடத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு எதிரிலுள்ள மொழித்துறையில் முதுகலைத் தமிழிலக்கியம் ஈராண்டுகள் பயின்றேன். என்னைத் துறையில் இணைத்து எனக்கு எல்லாமாக இருந்து வழிநடத்தியவர் பேராசிரியப் பெருந்தகை முனைவர் சி. பாலசுப்பிரமணியம் அவர்களாவார். அவர் எந்தையாரின் வகுப்புத் தோழர்; பெரும்பேராசிரியர்; அங்குலம் அங்குலமாக என்னை வளர்த்துப் பல பேச்சுப் போட்டிகளுக்கெல்லாம் அனுப்பி செதுக்கியவர் ஆவார். நான் முழுமையாக தமிழிலக்கியத்தில் ஈடுபட்டு கல்லூரிப் பேராசிரியராக வளரவேண்டுமென்று பெரிதும் விரும்பினார். களங்கமில்லாத நெஞ்சத்தோடு என்னை வளர்த்த பெருந்தகைக்கு நான் எப்பொழுதும் கடன்பட்டவனாவேன்.
அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை
கவின்பொருள்:-
1 அம்பர் அரபு
2 அத்தர் அரபு
3 உக்கா அரபு
4 ஊதுபத்தி அரபு
5 சவ்வாது அரபு
6 சலாமிசிரி அரபு
7 அபின் பாரசீகம்
8 கசகசா பாரசீகம்
9 ரவேஸ் பாரசீகம்
10 ரெக்கு பாரசீகம்
11 கஞ்சா இந்தி
12 சோப்பு ஆங்கிலம்
13 சிகரெட்டு ஆங்கிலம்
14 சாம்பிராணி மலேயம்
போக்குவரவு:-
1 ஏரோப்ளேன் ஆங்கிலம்
2 கார் ஆங்கிலம்
3 கோச்சு ஆங்கிலம்
4 சாரட்டு ஆங்கிலம்
5 சைக்கிள் ஆங்கிலம்
6 டக்கு ஆங்கிலம்
7 டிராம் ஆங்கிலம்
8 மோட்டார் ஆங்கிலம்
9 பஸ் ஆங்கிலம்
10 பீட்டன் ஆங்கிலம்
11 லாரி ஆங்கிலம்
12 ரயில் ஆங்கிலம்
தகவல் தொடர்பு:-
1 இன்சூர் ஆங்கிலம்
2 கவர் ஆங்கிலம்
3 கார்டு ஆங்கிலம்
4 போஸ்டாபீசு ஆங்கிலம்
5 மணியார்டர் ஆங்கிலம்
6 ரிஜிஸ்தர் ஆங்கிலம்
7 லேபில் ஆங்கிலம்
8 லெட்டர் ஆங்கிலம்
9 ஜட்கா இந்தி
10 சப்பரம் இந்தி
11 டோலி இந்தி
12 ரேக்ளா இந்தி
13 தபால் இந்தி
14 லக்கோடா இந்தி
15 மேனா பாரசீகம்
16 கடுதாசி அரபு
17 ரிக்ஷா ஜப்பான்
வாணிகம்:-
1 அட்வான்சு ஆங்கிலம்
2 ஆண்டிமாண்டு ஆங்கிலம்
3 காண்டிராக்டு ஆங்கிலம்
4 டெண்டர் ஆங்கிலம்
5 டிப்பாசிட்டு ஆங்கிலம்
6 பண்டு ஆங்கிலம்
7 மார்க்கட்டு ஆங்கிலம்
8 வங்கி ஆங்கிலம்
9 அட்டவணை மராட்டியம்
10 உண்டியல் இந்தி
11 சவுக்கார் இந்தி
12 செலாவணி இந்தி
13 சிட்டை இந்தி
14 துபாஷ் இந்தி
15 பட்டியல் இந்தி
16 வட்டம் இந்தி
17 லாலா இந்தி
18 லேவாதேவி இந்தி
19 கசர் அரபு
20 கசாப்பு அரபு
21 கரார் அரபு
22 குசில் அரபு
23 சிராப்பு அரபு
24 தினுசு அரபு
25 தினுசுவாரி அரபு, பாரசீகம்
26 மகமை அரபு
27 மெளசு அரபு
28 ரகம் அரபு
29 கிட்டங்கி மலேயம்
30 சந்தா பாரசீகம்
31 தராசு பாரசீகம்
32 பசார் பாரசீகம்
33 மேஸ்திரி போர்த்து
34 நிரக்கு போர்த்து
எடை அளவு:-
1 அந்தர் ஆங்கிலம்
2 டன் ஆங்கிலம்
3 அஞ்சு ஆங்கிலம்
4 பர்லாங்கு ஆங்கிலம்
5 மைல் ஆங்கிலம்
6 ஏக்கர் ஆங்கிலம்
7 செண்டு ஆங்கிலம்
8 டசன் ஆங்கிலம்
9 கொயர் ஆங்கிலம்
10 ரீம் ஆங்கிலம்
11 கண்டி மராட்டியம்
12 ராத்தல் அரபு
13 தோலா இந்தி
14 கஜம் பாரசீகம்
15 தஸ்தா பாரசீகம்
ஆட்சியியல்:-
1 அசல் அரபு
2 அத்து அரபு
3 அமுல் அரபு
4 அகேர் அரபு
5 அனாமத்து அரபு
6 அயன் அரபு
7 ஆசாமி அரபு
8 ஆசில் அரபு
9 இனாம் அரபு
10 இருசால் அரபு
11 உசூர் அரபு
12 ஐவேசு அரபு
13 கஜானா அரபு
14 கவுல் அரபு
15 காயம் அரபு
16 சிபாயத்து அரபு
17 கிஸ்து அரபு
18 கைது அரபு
19 ஷரத்து அரபு
20 தணிக்கை அரபு
21 தபசில் அரபு
22 தஸ்தி அரபு
23 தாக்கீத் அரபு
24 தாக்கல் அரபு
25 தாசில் அரபு
26 பசலி அரபு
27 பாக்கி அரபு
28 நகது அரபு
29 மசரா அரபு
30 மராமத்து அரபு
31 மாசூல் அரபு
32 மாமூல் அரபு
33 மிராசு அரபு
34 முகாம் அரபு
35 ரயத்து அரபு
36 ரொக்கம் அரபு
37 வசூல் அரபு
38 வஜா அரபு
39 வாரிசு அரபு
40 வாய்தா அரபு
41 ஜப்தி அரபு
42 ஜமாபந்தி அரபு
43 பாரசீகம் அரபு
44 ஜாரி அரபு
45 ஜாமீன் அரபு
46 ஜாஸ்தி அரபு
47 ஷரா அரபு
48 அமீனா அரபு
49 ஆஜர் அரபு
50 இஸ்தியார் அரபு
51 கைதி அரபு
52 தகராறு அரபு
53 தகதா அரபு
54 தரப்பு அரபு
55 தாணா அரபு
56 பைசல் அரபு
57 நாசர் அரபு
58 முனிசிப்பு அரபு
59 ரத்து அரபு
60 ராசி அரபு
61 ருஜூ அரபு
62 ரோக்கா அரபு
63 வக்காலத்து அரபு
64 வக்கீல் அரபு
65 இலாக்கா அரபு
66 கஸ்பா அரபு
67 சன்னது அரபு
68 தாக்கீது அரபு
69 தாலுக்கா அரபு
70 பிதிஷி அரபு
71 பிர்க்கா அரபு
72 மசோதா அரபு
73 மாகாணம் அரபு
74 மாசர் அரபு
75 மாப்பு அரபு
76 மாஜி அரபு
77 ரஜா அரபு
78 அம்பாரி அரபு
79 லாயம் அரபு
80 கசரத்து அரபு
81 அம்பாரம் பாரசீகம்
82 அர்ஜி பாரசீகம்
83 ஆப்காரி பாரசீகம்
84 ஜமாசு பாரசீகம்
85 கம்மி பாரசீகம்
86 கார்வார் பாரசீகம்
87 கானுகோ பாரசீகம்
88 குமாஸ்தா பாரசீகம்
89 கொத்துவால் பாரசீகம்
90 கோஸ்பாரா பாரசீகம்
91 சரகம் பாரசீகம்
92 சராசரி பாரசீகம்
93 சிரஸ்தார் பாரசீகம்
94 தர்க்காஸ்து பாரசீகம்
95 பந்தோபஸ்து பாரசீகம்
96 பாவத்து பாரசீகம்
97 பினாமி பாரசீகம்
98 நவுக்கர் பாரசீகம்
99 ரசீது பாரசீகம்
100 வாபீசு பாரசீகம்
101 ஜமீன் பாரசீகம்
102 டபேதார் பாரசீகம்
103 டவாலி பாரசீகம்
104 தஸ்தாவேஜு பாரசீகம்
105 பிராது பாரசீகம்
106 சர்க்கார் பாரசீகம்
107 பிப்பந்தி பாரசீகம்
108 தர்பார் பாரசீகம்
109 திவான் பாரசீகம்
110 மொகர் பாரசீகம்
111 யதாஸ்து பாரசீகம்
112 ரோந்து, லோந்து பாரசீகம்
113 சிப்பாய் பாரசீகம்
114 துப்பாக்கி பாரசீகம்
115 பாரா பாரசீகம்
116 பீரங்கி பாரசீகம்
117 சர்தார் பாரசீகம்
118 சவாரி பாரசீகம்
119 சவுக்கு பாரசீகம்
120 சுபேதார் பாரசீகம்
121 சேணம் பாரசீகம்
122 லகான் பாரசீகம்
123 பட்டா இந்தி
124 மிட்டா இந்தி
125 கேது இந்தி
126 சுருதி இந்தி
127 கலான் இந்தி
128 டேரா இந்தி
129 கொட்டடி இந்தி
130 டலாய்த்து இந்தி
131 கச்சேரி இந்தி
132 தண்டோரா இந்தி
133 தமுக்கு இந்தி
134 பிசானம் தெலுங்கு
135 சம்பிரதி தெலுங்கு
136 கலெக்டர் ஆங்கிலம்
137 செட்டில்மெண்டு ஆங்கிலம்
138 டே ஆங்கிலம்
139 வாரண்டு ஆங்கிலம்
140 ஜவாப் ஆங்கிலம்
141 அசெசர் ஆங்கிலம்
142 அபிடவிட்டு ஆங்கிலம்
143 அப்பீல் ஆங்கிலம்
144 இன்லெண்டு ஆங்கிலம்
145 ஈரங்கி ஆங்கிலம்
146 உயில் ஆங்கிலம்
147 கிரிமினல் ஆங்கிலம்
148 கேசு ஆங்கிலம்
149 கோர்ட்டு ஆங்கிலம்
150 சம்மன் ஆங்கிலம்
151 சிவில் ஆங்கிலம்
152 டிக்கிரி ஆங்கிலம்
153 புரோநோட்டு ஆங்கிலம்
154 பீசு ஆங்கிலம்
155 பெட்டிஷன் ஆங்கிலம்
156 பென்ஷன் ஆங்கிலம்
157 நோட்டீசு ஆங்கிலம்
158 மவுண்டு ஆங்கிலம்
159 மேயர் ஆங்கிலம்
160 மேடோவர் ஆங்கிலம்
161 மைனர் ஆங்கிலம்
162 ரிக்கார்டு ஆங்கிலம்
163 ரூல் ஆங்கிலம்
164 லாயர் ஆங்கிலம்
165 ஜட்ஜ் ஆங்கிலம்
166 ஜெயில் ஆங்கிலம்
167 ஆபீசு ஆங்கிலம்
168 எலெக்ஷன் ஆங்கிலம்
169 எஸ்டேட் ஆங்கிலம்
170 ஏஜண்டு ஆங்கிலம்
171 ஓட்டு ஆங்கிலம்
172 கவர்னர் ஆங்கிலம்
173 சர்க்கிள் ஆங்கிலம்
174 சப்போர்ட் ஆங்கிலம்
175 சீல் ஆங்கிலம்
176 சூப்பிரண்டு ஆங்கிலம்
177 பவுண்டு ஆங்கிலம்
178 பியூன் ஆங்கிலம்
179 போலீசு ஆங்கிலம்
180 மேஜிஸ்டிரேட் ஆங்கிலம்
181 கிளிப்பு ஆங்கிலம்
182 கம் ஆங்கிலம்
183 பென்சில் ஆங்கிலம்
184 பேப்பர் ஆங்கிலம்
185 பேனா ஆங்கிலம்
186 பின் ஆங்கிலம்
187 பிளாட்டிங்கு ஆங்கிலம்
188 நிப்பு ஆங்கிலம்
189 ஸ்டீல் ஆங்கிலம்
190 துப்பு ஆங்கிலம்
191 ஏட்டு ஆங்கிலம்
192 ரிவால்வர் ஆங்கிலம்
193 படாலியன் ஆங்கிலம்
வளரும்…
முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.