21.8.2021 ஆவணி மாதம் 5 ஆம் நாள் சனி கிழமை சிம்ம மாஸ்ய திருவோணம் நட்சத்திரம் நாள் வருகிறது.
இன்று ஶ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆகும். மாணவ மாணவிகளுக்கு படிப்பு நன்றாக இருக்க, ஞாபக சக்தி பெருக ஶ்ரீ ஹயக்ரீவர் சுவாமிக்கு தேன் திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்யலாம். அல்லது அவர் பெயர் சொல்லி ஒரு சொட்டு தேன் உங்கள் நாக்கில் சேர்த்து கொள்ளலாம்.
மேலும் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
ஶ்ரீ மகாபலி என்னும் அரசன் உலகளந்த பெருமாள் ஶ்ரீ மஹா விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்று உலகம் அளக்க மூன்றாவது அடியை இவர் சிரசில் வைத்து கீழே அழுத்தியவுடன் வருடம் ஒருமுறை இந்த நாளில் தான் ராஜபரிபாலனம் செய்கிறார். அனைவரையும் பார்த்து ஆசி புரிவதாக ஐதீகம். இன்றைய நாளில் ரிக் வேத உபாகர்மா ,
பூணூல் அணிந்தவர்கள் , மந்திரங்கள் சொல்லி புது பூணல் அணியும் நாள்.
திருவோணம் நட்சத்திரம் நவகிரகங்களில்
சந்திரனுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். இந்த திருவோனத்தில் ஶ்ரீ நரசிம்மர் சுவாமியை வழிபட்டு வருதல் அனைவருக்கும் நல்லது. ஶ்ரீ நரசிம்ம சுவாமி சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர், பின்னர் எதற்காக திருவோணம் நட்சத்திரத்தில் அவரை வழிபட வேண்டும் என்றால், இந்த மாதம் ஆவணி மாதம் ஆகும். ஜோதிடத்தில் சித்திரை மாதம் மேஷம் ராசியை குறிக்கும், ஆவணி மாதம் சிம்மம் ராசியை குறிக்கும். இந்த மாதத்தில் ஶ்ரீ நரசிம்மர் சுவாமி வழிபாடு சிறந்தது. உங்கள் வீட்டில் சுவாமி படத்துக்கு பானகம் ஹம்சி செய்து (நைவேத்தியம் செய்து) அக்கம்பக்கத்து வீட்டு பக்தர்களுக்கு கொடுத்து நீங்களும் பருக, அனைத்து தீவினைகளும் அகளும். திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்யம் வேண்டி இருப்பவர்கள் இன்றைய நாளில் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சுவாமியை தரிசனம் செய்வது நல்லது.
திருவோணம் நட்சத்திரம்
21.8.2021 சனி கிழமை இரவு 8.21 மணி வரை.
ஆதாரம்: ஶ்ரீநிவாசன் பஞ்சாங்கம்.
நன்றி
Leave a Comment
You must be logged in to post a comment.