Personal Blogging Spiritual

ஆலமரமாம் பாரததேசமும்

அதன்
ஆணிவேராய் #இந்துமதமும்..
சரித்திர நிகழ்வுகள் ஆயிரங்கொண்ட
இந்த திருநாட்டின்
ஆன்மீகமும், பாரம்பர்யமும்
தழைத்திட,
சனாதனமாம்
இந்து தர்மம்
காலங்காலமாக
எத்துனையோ யோகப்புருஷர்களை
தந்த வண்ணமே இருந்துள்ளது.
அது இந்த தேசத்தின்
சுதந்திர போராட்டத்திற்கும்
தனது பங்காக
தலைவர்களை மட்டுமல்ல,
நிறைய
சாதுக்களையும்
பிரம்மச்சாரிகளையும்
சத்தியசீலர்களையும்
வழங்கியிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகவோ
என்னவோ
பல நூற்றாண்டுகளாக
தமிழ் வளர்த்த
தமிழ் திருமுறைகள் காத்துவந்த
சிவநெறி பரப்பி வந்த

திருவாவடுதுறை

ஆதீனத்திருமடம்

அதன் முத்தாய்ப்பாக

இந்தியநாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நன்னாளில்
அந்த விழாக்கொண்டாட்டத்தில்
பங்கேற்று
பாரதப் பிரதமர்
ஜவஹர்லால் நேரு அவர்கள் வசம்

செங்கோல்

ஒன்றினை தந்து
சுதந்திர இந்தியாவின் முதல் தலைவனை நமது தென்னகத்து
சார்பாக வாழ்த்தி
அருளாசி வழங்கி வந்ததும்
திருவாவடுதுறை ஆதீனமே.
மேலும், தன்னுடைய
குருபரம்பரையின் மூலமாக,
சுதந்திர போராட்டத் தியாகிகளை
போஷித்து,
தலைவர்களை கௌரவித்து
இந்தியா நடத்திய தேசப்பாதுகாப்பு
யுத்தங்களுக்கு தன்னுடைய
உதவிகளையும் செவ்வனே
செய்துவந்தது.
நிற்க,
இங்கே
மேலும் அதன் உச்சமாக
அடியேன் கருதுவது
திருவாவடுதுறை ஆதீன
திருமடத்திலே
பல ஆண்டுகளாக
பூஜைத் தம்பிரான் ஸ்வாமிகளாக
இருந்து
குருமகாசந்நிதானங்களுக்கு
பணிவிடை செய்தும்
எத்துனையோ சிவாலயத்
தொண்டுகளுக்கும் அடிகோலிய
அத்திருப்பணிகளுக்கு
தன்னை அர்ப்பணித்த
ஒரு தபஸ்வி,
கடந்த சில ஆண்டுகளுக்கு
முன்பாக , தென்தமிழகத்தில்
தூத்துக்குடி மாவட்டம்

செங்கோல்_மடத்து

ஆதீனகர்த்தராக
பொறுப்பேற்று,
தன் இறைத்தொண்டு ஆற்றியும்
அந்த மடத்து வாயிலாக
சைவசித்தாந்த நெறிகளைப் பரப்பியும் வருகிறார்.
கனிவான முகம்,
களையான கண்கள்,
அன்பே சிவமென
அருள்மழை பொழியும்
அந்த மகோன்னதர்
பிறந்ததும்
இந்திய சுதந்திர தினமான
ஆகஸ்ட் 15 அன்றே..
சுதந்திர தினத்தன்றே
பிறந்த தினம் எனும்
பெருமை கொண்ட
எங்கள்
செங்கோல் ஆதீன குருமகாசந்நிதானம்
அவர்களின் பொற்பாதம்
பணிகின்றோம் மானசீகமாக.
ஆம் , அன்பர்களே..
#சிவமின்றி
#சக்தியில்லை !
#தேசமும்
#தெய்வீகமும்_வேறில்லை !!
M. #Raja_Mahalingam
திருக்கோடிக்காவல்.

About the author

Raja Mahalingam

Leave a Comment