Tamil Language

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 09

Written by Dr. Avvai N Arul


பெருமக்களே…
கரைபுரள அலைபுரள நம்முடைய நண்பர் கலைமாமணி சூரிய பிரகாஷ் பாடிக் காட்டுகின்ற குயில் பாட்டு மகோன்னதமான வரவேற்பை உலகெங்கும் பெற்றுவருகிறது.
பார்க்கும் நண்பர்களெல்லாம் யூடியூபில் குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புறுவதும் லண்டன் மாநகரத்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், சுவிட்சர்லாந்திலிருந்தும் கனடாவிலிருந்தும் பெரிய ஆர்வலர்கள் கூட்டம் எங்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. குயில்பாட்டு பாரதியாருடைய சிறந்த இலக்கியப் படைப்பாகும். பாரதியாருடைய தலைசிறந்த மூன்று படைப்புகள் எது என்று கேட்டபொழுது சொன்னார்களாம் தேசிய உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது பாஞ்சாலி சபதம் என்றும், தெய்வீக உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது கண்ணன் பாட்டு என்றும், தத்துவ நோக்கத்திற்காகப் பாடப்பட்டது குயில்பாட்டு என்றும் தான் சொல்லியிருக்கின்றார்கள் நண்பர்களே. இந்தக் குயில் பாட்டு, சரியாக 744 அடிகளில் இந்த பாடல்களை யாப்பு வடிவத்தில் புனைந்திருந்திருக்கிறார்கள்.
நண்பர்களே, பாரதியார் சென்ற வாரம் வரை அந்தக் குயில் செய்கின்ற கோலாகல அமளிதுமளிகளைப் பற்றி நம்மிடம் அடுக்கிக் கொண்டு வந்தார். என்ன சொன்னோம் சென்ற வாரம்? குயிலையும் குரங்கையும் ஒருங்கிணைத்துப் பார்த்தபொழுது கவிஞர் எப்படிப் பொங்கினார்? எப்படிக் கனன்றார்? என்று சொல்லிக் காட்டி அவ்வளவு அழகாகப் பாடிக்காட்டினார் கலைமாமணி சூரியபிரகாஷ். இந்த வாரம் கவிஞர் எப்படியெல்லாம் தன்னை இன்னும் எடுத்துப் பார்க்கிறார் பாருங்கள் நண்பர்களே.
இந்த முறை காளையைப் பார்த்து, குயிலும் காளையும் பேசிக்கொண்டு இருக்கின்றதாம். ஒகோ… காளை மீதும் இந்தக் குயிலுக்குக் காதல் வந்து விட்டதே என்ற ஏக்கத்தில், தவிப்பில், தத்தளிப்பில் அவர் எகிறிக்குதிக்கிறார். ஆகா… காளையுடன் என்ன காதல் உணக்குக் குயிலே? என்று சொல்லிக்காட்டுகின்ற விதமாக இந்த முறை மிக நுட்பமாகப் பாடிக்காட்டி இந்த ஐந்தாவது பகுதியை மிக அற்புதமாக வழிநடத்திச் செல்லுகிற சூரியபிரகாஷ் அவர்களை என்னாலும் நாம் வாழ்த்துவோம்.
குயில் பாட்டு
காலை நேரம் தூங்கி எழுந்தேன். சொல்லாமலேயே கால்கள் வழக்கம்போல் என்னை சோலைக்கு இழுத்துச் சென்றன. சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கேயும் பறவைகளைப் பார்க்க முடியவில்லை. ஓரத்தில் ஒரு மாமரம், அதன் மேல் அந்த அதிசயம் பாருங்கள். அதன் கிளையில் நம் நாயகி குயில் அமர்ந்துகொண்டு கீழே நிற்கும் காளையுடன் காதல் கதை பேசிக் கொண்டிருக்கிறது. மாடும் தலையாட்டிக் கொண்டிருக்கிறது. பார்த்ததுதான் தாமதம் படபடவென வந்தது; நெஞ்சு குமுறியது. கோபக்கனல் கொப்பளித்தது; கலக்கமுற்றேன். உடல் வியர்த்தேன்; குமுறினேன்; துடிதுடித்தேன்; காளையைக் கொல்ல வேண்டும் எனும் அளவுக்குக் கோபம் வந்தது. குத்துவாள் எடுத்துக்குறி பார்த்தேன். இந்தக் குயில் ஒரு பொய் பேசும் பேய். அது இந்தக் காளையுடன் பேசியதைப் பார்த்தபின் கொல்லாமல் விடக்கூடாது என மறைந்து நின்றேன். அந்தக் குயிலோ காதல் மயக்கத்திலிருந்தது. மோகக் கதை காளையிடம் பேசிக் கொண்டே இருந்தது. பொன் போன்ற குரலில் மின் போன்ற வார்த்தைகளால் “காளையே! பெண்டிரைச் சொக்கி இழுக்கும் காந்தமே! மன்மதன் எனும் மந்திரமூர்த்தியே! பூமியிலே உன்போல் இனமுண்டோ? மனிதருள்ளும் வலிமையுடையாரைக் காளை என்றே புகழ்கின்றாரே!” எனப் புகழ் வார்த்தைகளைக் கூறிக் கொண்டே அந்தக்குயில் காளையிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு நான் மனம் நொந்தேன்.

At break of day as if by magic drawn

I spend to the grove and searched.

All birds had flown away but the koel atop on the topmost

bough sat making love to an aged ox below I flew to a passion,grieved .

with burning heart I smarted,growled,.

Sweated.itched to dart my sword at them.

but cooling down my ire I thought it best to hide and overhear

the faithless koels tale are I would kill in her

sweet melodious voice and words that fill began to speak

O bull that maids pine for O Manmath in this guide,

lives there on earth such lovely breed

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment