” கடுமையாக உழைத்தல்
என்று அடிக்கடி சொல்கிறார்களே,
கடுமையாக உழைத்தல்
என்றால் என்ன ?
இதுபற்றி எந்தக் கட்டுரையும்
வந்ததில்லை, ஆனால் எனக்கு
எழுத எண்ணமிருக்கிறது.
இது என் வாழ்வின் அனுபவப் பதிவாக மட்டுமில்லாது,
உங்களுக்கு அந்த அனுபவத்தைப்
பகிர்வதாகவும் இருக்கும்.
எனது அனுபவம் உங்களுக்குள்ளே
செய்தியாய் வந்துசேர,
உங்களுக்கு அந்த அனுபவம்
ஏற்படும்போது
மிக எளிதாக உங்களால்
வாழ்வியலைக் கற்றுக்கொள்ள
முடியும்.
சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போது
பின்னால் சீட்டைப் பிடித்துக் கொண்டு
தன் முழு பலத்தோடு உங்களைவிட
சற்று வயதான ஒரு ஸ்நேகிதன்
ஓடிவருவான் இல்லையா ,
அதுபோலத்தான்.
நீங்கள் சைக்கிள் ஓட்டக்
கற்றுக் கொள்ளும்போது
நான் உங்கள் சீட்டைப் பிடித்துக்
கொண்டு ஓடி வருவேன். நீங்களாகவே
சைக்கிள் ஓட்டிவிடுவீர்கள்
என்று எனக்குத் தெரியும்.
அப்பொழுது மிகுந்த சந்தோஷத்தோடு
நான் உங்களைப் பார்த்துக்
கொண்டிருப்பேன்.
” கத்துக்கிட்டாண்டா
கத்துக்கிட்டாண்டா
அவனா ஓட்டுறான் பார் “
என்று ஆனந்தக் கூச்சலிடுவேன்.
இதுதான் – #எந்த
எதிர்பார்ப்புமில்லாத_காதல்…
ஐயன்_பாலகுமாரனின்
“என்னைச் சுற்றி சில நடனங்கள் “
எனும் நூலிலிருந்து
Leave a Comment
You must be logged in to post a comment.