ஓம்நமோநாராயணாய !
ஊரடங்கு வந்ததும் வந்தது
ஊர் ஊராய் சுற்றும்
எங்களுக்கும்
நெருக்கடி வந்தது
மாமி மெஸ் ,
லக்ஷ்மி மெஸ்
மாயவரம்
பவித்ரா மெஸ்
இப்படியாக போய்க்கொண்டு
இருந்தது ஒரு காலம்
சமீப நாட்களாக
வீட்டிலிருந்து ஒரு டிபன்பாக்ஸ்
ஒரு பாட்டில் நீர்
என்று ஓடிக் கொண்டிருக்கிறோம்.
நேற்று மதியம்
ஒரு ஊரிலிருந்து
இன்னொரு ஊருக்கு
செல்லும் வழியில்
ஒரு பிள்ளையார் கோயில்
வாசலில் போய் –
கையிலிருந்த உணவை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்தால்
எதிரிலே ஏகாந்தமாய்
ஒரு பெருமான்
நமக்கு சேவை சாதிக்கிறார்.
அட இது என்ன
ஆச்சர்யம் ?
உள்ளே கணபதி
மூலவராய் அமர்ந்திருக்க
வெளியே
கிழக்கு நோக்கியவாறு
அமர்ந்த நிலையில்
காட்சி தந்தார் – அந்த
ஆதிநாராயணன்
எந்த சிற்பி வடித்ததோ ?
எந்த மன்னன் ஆட்சியிலோ ?
எந்த கோயில் மூலவரோ ?
யார் படையெடுப்பில் பயந்து
இங்கே வைக்கப்பட்டதோ ?
எத்தனை ஆண்டுகள்,
எத்தனை ஆயிரம் பக்தர்களால்
கொண்டாடப்பட்டதோ ?
இங்கே
இன்று நாம் தரிசித்தோம்.
நாசி மட்டும் கொஞ்சம்
பின்னமாய் இருப்பினும்
அழகுக்கு ஒரு குறையும்
இல்லை – இந்த
#அச்சுதனுக்கு.
ஐந்தடி உயரத்தில்
கீழே பீடத்துடன்
சங்கும் சக்கரமும்
இரு கைகளில் ஏந்தி
சேவை சாதித்த வண்ணம்
இருக்கிறார் – இந்த
இருபத்தியோராம்
நூற்றாண்டிலும்…
நிற்க,
எழுத்துச்சித்தர்
ஐயன்_பாலகுமாரன்
ஒரு பெருமாள் கோயிலில்
ஆண்டாள் பாசுரத்தை
பாடுவார் ,
கேட்கவே
மெய்சிலிர்க்கும்
அந்த
ஆடியோவினை
மொபைலில் கேட்டுக்கொண்டே
அந்த நாராயணை
இந்த நரன் வணங்கி வந்தேன்.
” செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா உன்செல்வம் சால அழகியதே “
நெகிழ்வுடன்,
M. #Raja_Mahalingam
திருக்கோடிக்காவல்.
Leave a Comment
You must be logged in to post a comment.