Tamil Language

அருளின் குரல் வரிகள்-04

Written by Dr. Avvai N Arul

மாங்குயிலுக்கு தீங்குரல் தந்த மாமணி!

இசை வாணர் சூர்ய பிரகாஷின் இசை மழை மிக உன்னதமான மாமழையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக பாரதியாரி..ன் உயிர்ப் பாட்டான குயில் பாட்டை ஊன் உருக அவர் இசைத்துக் காட்டியிருக்கிறார். அலைபுரளக் கரை புரள இராகங்கள் அவர் குரலில், வழிந்தன. இது குறித்து, உலகிலிருந்து பல்வேறு பெருமக்கள் எல்லாம் என்னை அழைத்து குயில் பாட்டை இப்படி உருக்கமாக பாடுகிறாரே, கலைமாமணி சூர்ய பிரகாஷ், அவரை என்னென்று புகழ்வது? என்னென்று புகழ்வது? என்றுதான் என்னிடம் நண்பர்கள் பலர் தொலைபேசியில் அழைத்துச் சொல்கிறார்கள்.
நண்பர்களே,
பாரதியாரின் குயில் பாட்டின் கதை மிக அழகாக தொடங்கியுள்ளது. இந்த இடத்தில் ஒரு கருத்தைச் சொல்கிறேன். ஆங்கிலப் பேரறிஞர் கால்ட்ரிஜ் ஒரு முறை சொன்னார்.
“All Arts aspire the status of music” என்று சொல்லிக் காட்டுகிறார்.
உலகில் உள்ள கலைகள் யாவும் இசையின் உயர்ந்த நிலையை அடையவே தாமும் ஆசைப்பட்டு அதனை அவாவி நிற்கும் நிலையில் இசைக்கு என்ன குறை கூற முடியும் என்றார் கோல்ரிட்ஜ்
எந்தவொரு படைப்பையும் இசையாக மாற்றிக் காட்டுகிற அந்த விதம் , அந்த இசைக்கும், அந்த பாட்டுக்கும், அந்த கருத்துக்கும் ஒரு மாபெரும் சிறப்பு என்று கூறினார். அந்த சிறப்பு, இந்த குயில் பாட்டில் பொதிந்து கிடக்கிறது. குயில்பாட்டை இசைப் பாட்டாகவே, பாடிக் காட்டிய பெருமை சூர்ய பிரகாஷை சாரும்.
பாரதியார், மிக நுட்பமாக, குயிலுடன் தன்னுடைய தோழருடன் பேசுவதைப் போலவே பேசிக் காட்டுகிறார். குயிலே, என்னுடைய திரவியமே என்றெல்லாம் ஒரு குயிலைப் பார்த்து எவ்வளவு பெருமையாக ஒரு கவிஞராம், ஒரே தமிழ்க் கவிஞராம் பாரதியாரால் மட்டும்தான் பேசிக் காட்டி வென்றுக் காட்ட முடிந்தது.
குயில் பாட்டு ஆழங்காண முடியாத கடலாக பல்வேறு விளக்கங்களைக் கொண்ட விடுகதையாக புதிர்க்கதையாக பொற்குவியலாக அமைந்திருக்கிறது.
குயிலின் காதல் கதை


பாரதியார் தன் குயில் பாட்டில் குயிலை அறிமுகப்படுத்தி, அதன் குரலிசையை வழிமொழிந்த பின் குயிலின் காதல் கதையை எடுத்துரைக்கத் தொடங்குகிறார்.
குயிலின் இனிமையான குரல் வழி வந்த காதல் போயின் சாதல் என்ற மோகனப் பாட்டு முடிந்ததும் எங்கும் ஓர் அமைதி. மாஞ்சோலை முழுவதும் ஒரு மெளனம். இன்பமும் துன்பமும் இணைந்து நிரம்பியது அக்கணம்.
சோகமே வடிவாக ஒரு பெண் குயில் மட்டும் தனித்திருக்க, மற்றொரு பறவை மகிழ்ந்து எங்கோ பறந்து சென்று விட்டதால் அது சோகமாக தலை குனிந்து வாட்டத்துடன் வலிவிழந்து வாடியிருப்பதாக பாரதியார் காண்கிறார்.
மரத்தருகே சென்று கேட்கிறார். “ஏய் பெண்ணே, கலைச் செல்வமே! காதில் இன்ப ஊற்றாகப் பாடலைப் பாடும் பறவையே, இவ்வுலக மனைத்தும் உன் இசை கேட்டு மகிழுமே. ஆனால், நீ மட்டும் ஏன் சோகமாக அவலமுற்றது போல் அமர்ந்துள்ளாய்? என்ன காரணம்? என்று கூறமாட்டாயா? என்று கேட்கிறார்.
அக்குயிலும் மனிதர் பேசும் மொழியிலேயே கேட்பவர் மனம் கணம் கூடுமாறு, வேதனைத் தீ மூளுமாறு சொல்கிறது. ” என் காதலுக்காக குரல் எழுப்புகிறேன்; அழுது புலம்புகிறேன்; இல்லையேல் நான் இறந்து விட வேண்டும் என மனமுறுகும் வார்த்தைகளாக கொட்டியது அக் குயில். பாரதியின் உள்ளம் துணுக்குற்றது. குயிலே நீ இப்படி கூறலாமா? பிற பறவைகள் மனம் மகிழும்படி பாடக் கூடிய வல்லமை படைத்தவள் நீ. உனக்கு காதலன் கிடைக்கவில்லை என்பது அதிசயமாக உள்ளதே என்ன காரணம் என கேட்கிறார்.
அதற்கு அந்த சோலைக்குயில்,
மெதுவாக வெட்கமும் வேதனையும் கலந்த குரலில் தன் கதையை சொல்லத் தொடங்குகிறது.
The Koel ended her song of love and soft.
A quiet spread. Mad love and sorrow swift
Now weighed me down. The birds had taken flight
But the koel all along in a piteous flight
Sat pining for love. Nearing the tree, O Bird,
My treasure, sweetest singer of songs which could
The seven world’s set on fiery love,
What sorrow deep afflicts thee here now?
Tell me! I asked. O thrilled to hear her speak
The tongue of man! O novelty! all meek
I stood. I pine for love, if not for death!
She said. Thou song – bird of the blue enchanted
In wisdom all the bird excelled! in vain
How could you seek a lover meet? with pain
And shame full rampant in her voice she went
To tell her tale of love, O sweet! and thus the story ran.

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment