பாரதியின் குயில் பாட்டு
=====================
கற்பனையும், கதையுமாக எழுதப்பட்ட கவிதைப் பகுதி இது. கதையின் துவக்கமாக அதன் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், முதலில் இக்கதையின் கதாநாயகியான குயிலி, குயிலைப் பற்றிக் கூறுகிறாள்.
அவர் காட்டும் முதல் காட்சி, ஒரு மாஞ்சோலை என்றும், வேடர்கள் வந்து பறவைகளைச் சுடும் ஒரு சோலை என்றும், வேடர் வராத ஒரு நாள் என ஒரு திகல் கதையைப் போல தொடங்குகிறார்.
பெண் குயிலொன்று, கிளையில் அமர்ந்துள்ளது. அதைப்பார்த்து, பரவசமுற்று பல ஆண் குயில்கள் அதனருகில் வருகின்றன. பெண் குயிலின் குரலில், ஆண் குயில்கள் அறிவிழந்து அமர்ந்துள்ளன. காலைக் கடன்களை மறந்து மயங்கியுள்ளன. குயிலின் குரல், காற்றில் கலந்த அமுதம் எளிதான மின்னலை குரலில் சேர்த்து கூவும் குயிலின் குழலிசையில் தம்மை இழந்துள்ளன.
வானத்து தேவதைப்பெண்தான் இந்தக் குயிலுருவில் வந்து இருக்கிறாளோ என வியந்து திகைத்துள்ளன. பூவுலகம் வந்து, தேனாய் தன் குரலில் இசைக்கும் விந்தை இதுவோ என வியக்கவைக்கும் குயிலின் குரல். இதில், ஆண் குயில்கள் மட்டுமின்றி, பாரதியார் தன்னையும் ஒரு ஆண் குயிலாக எண்ணுகிறார். பட்டப்பகலிலேயே கவிதை வெறி உண்டாகி, நினைவிழந்து நீண்ட கனவு ஒன்றைக் காண்பதாக கவி பாடுகிறார்.
தன் மனித உருவம் நீங்க வேண்டும். தன் முன்னுள்ள பெண் குயிலுடன் காதலித்து களிக்க வேண்டும். தானும் ஒரு ஆண் குயிலாக மாற வேண்டும். பாட்டின் தீயிலே பொசுங்கிவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணுகிறார். இப்படி அந்த தேவர்கள்கூட வினவுவார்களோ என ஐயமுறுகிறார். ‘குக்கூ’ என்று குயில் பாடும் இந்தப் பாட்டில் என் சிந்தை பறிகொடுத்தேன். பல கற்பனை எண்ணங்கள் எனக்குள் தோன்றுவதை இந்த உலகிற்கு உரைக்கப்போகிறேன். குயிலின் குரல் இன்பத்தேன் வந்து காதில் விழுந்ததால், வந்த போதையில் செய்வதறியாது இனி என் எண்ணங்களை வடிக்கப்போகிறேன் என முதல் அத்தியாத்தை முடிக்கிறார்.
The winds that blew or sweets of lightning hid
In clouds all softly thinly spreading over
Or like a beauteous maiden from the bower
Of heaven, singing in this guise her tale
Such heavenly symphony and song did spell
My ears and I began to dream outright
Of glorious visions with a poets might
O bliss that I were changed into a koel
To woo her and enjoy her bosom still
And lose myself in her fiery flood of song
Such pining thoughts the shady trees among
She with her song inspired, O rarely heard
By Devas even,At the Ku Ku song of the bird
A world of thoughts uprose which I would fain
Lay bare,but a heavenly voice I seek in vain…
Leave a Comment
You must be logged in to post a comment.