Athigaram 4
Kural- 0038
அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
Kural in English Transliteration:
Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan
Vaazhnaal Vazhiyataikkum Kal.
Couplet Explanation:
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.
மு. வரதராசன் உரை:
ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
கலைஞர் உரை:
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
Rev. Dr. G.U.Pope Translations:
If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moil.
Yogi Shuddhananda Translations:
Like stones that block rebirth and pain Are doing good and good again.
Easy reading Thirukurral by Parimelazhagar :
- வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
- வாழ்நாள் வழியடைக்குங் கல்.
தொடரமைப்பு: வீழ் நாள் படாமை நன்று ஆற்றின், அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல்.
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) வீழ் நாள் படாமை நன்று ஆற்றின் = (செய்யாது) கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;
- அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் = அச்செயல் (அவன் யாக்கையோடு) கூடுநாள் வரும் வழியை (வாராமல்) அடைக்கும் கல்லாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
- ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ளதுணையும், உயிர் யாக்கையோடுங்கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நுகருமாகலான், அந்நாள் முழுவதும் ‘வாழ்நாள்’ எனப்பட்டது.
- குற்றங்கள் ஐந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன; இவற்றை வடநூ்லார் ‘பஞ்சக்கிலேசம்’ என்பர்.
- வினை இரண்டாவன, நல்வினை தீவினை என்பன.
- பயன் இரண்டாவன, இன்பந் துன்பம் என்பன.
- இதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.