Athigaram 4
Kural- 0031
அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
Kural in English Transliteration:
Sirappu Eenum Selvamum Eenum Araththinooungu
Aakkam Evano Uyirkku.
Couplet Explanation:
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?.
மு.வ உரை:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.
சாலமன் பாப்பையா உரை:
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.
கலைஞர் உரை:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர
ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
Rev. Dr. G.U.Pope Translations:
It yields distinction, yields prosperity: what gain
Greater than virtue can a living man obtain?
Yogi Shuddhananda Translations:
From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?
Easy reading Thirukurral by Parimelazhagar :
சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு.
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
தொடரமைப்பு:
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் ஓ.
பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) சிறப்பு ஈனும் = வீடு பேற்றையும் தரும்;
- செல்வமும் ஈனும் = (துறக்கம் முதலிய) செல்வத்தையும் தரும்:
- உயிர்க்கு அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவன்ஓ = ஆதலான் உயிர்கட்கு அறத்தின்மிக்க ஆக்கம் யாது?
பரிமேலழகர் உரை விளக்கம்:
- எல்லாப்பேற்றினும் சிறந்தமையின் வீடு ‘சிறப்பு’ எனப்பட்டது. ‘சிறப்பென்னும் செம்பொருள்’ (358) என்ற திருக்குறளிலும், சிறப்பு என்பது வீடு என்னும் பொருளில் வந்தது. ‘சிறந்தது பயிற்றல்’ (கற்பியல்,51.) எனத் தொல்காப்பியத்து வருதலுங் காண்க.
- ஆக்கந் தருவதனை ‘ஆக்கம்’ என்றார்.
- ஆக்கம் ‘மேன்மேலுயர்தல்’.
- ஈண்டு ‘உயிர்’ என்றது மக்கள்உயிரை, சிறப்பம் செல்வமும் எய்தற்குரியது அதுவேயாகலின்.
- இதனால் அறத்தின்மிக்க உறுதி இல்லையென்பது கூறப்பட்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.