Athigaram 4
Kural- 0032
அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
Kural in English Transliteration:
Araththinooungu Aakkamum Illai Adhanai
Maraththalin Oongillai Ketu.
Couplet Explanation:
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it’.
மு.வ உரை:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.
கலைஞர் உரை:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
Rev. Dr. G.U.Pope Translations:
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.
Yogi Shuddhananda Translations:
Virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.
Easy reading Thirukurral by Parimelazhagar :
அறத்தினூஉங் காக்க முமில்லை யதனை
மறத்திலி னூங்கில்லை கேடு.
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.
தொடரமைப்பு:
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை, அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.
பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்) அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை = (ஒருவனுக்கு) அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;
- அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு = அதனை (மயக்கத்தான்) மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்:
- “அறத்தினூஉங் காக்கமு மில்லை” என மேற்சொல்லியதனையே அனுவதித்தார்¶, அதனாற் கேடுவருதல் கூறுதற் பயன் நோக்கி.
- இதனால் அது செய்யாவழிக் கேடுவருதல் கூறப்பட்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.