Thirukkural

Thirukkural-0036

Written by Thamizh Nadu .com

Athigaram 4

Kural- 0036

அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal

இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1

பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

Kural in English Transliteration:

Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu

Pondrungaal Pondraath Thunai.

Couplet Explanation:

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

மு. வரதராசன் உரை: இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

கலைஞர் உரை: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை: முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

Rev. Dr. G.U.Pope Translations:

Do deeds of virtue now Say not, ‘To-morrow we’ll be wise’; Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Yogi Shuddhananda Translations:

Do good enow; defer it not A deathless aid in death if sought.

 

Easy reading Thirukurral  by Parimelazhagar :

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது பொன்றும் கால் பொன்றாத் துணை. தொடரமைப்பு: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க, அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்): அன்று அறிவாம் என்னாது அறம் செய்க = (யாம் இதுபொழுது இளையம் ஆகலின்) இறக்குஞான்று செய்தும்எனக் கருதாது, அறத்தினை (நாள் தோறுஞ்) செய்க;
அது பொன்றுங்கால் பொன்றாத் துணை = அவ்வாறு செய்த அறம், (இவ்வுடம்பினின்றும் உயிர்) போங்காலத்து (அதற்கு) அழிவில்லாத துணையாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
‘மற்று’ என்பது, அசைநிலை.
‘பொன்றாத்துணை’ என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.
இதனான், இவ்வியல்பிற்றாய அறத்தினை, நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

 

About the author

Thamizh Nadu .com

Leave a Comment