Athigaram 3
Kural- 0029
அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
Kural in English Transliteration:
Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu.
Couplet Explanation:
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
மு.வ உரை:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.
கலைஞர் உரை:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம்
அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
Rev. Dr. G.U.Pope Translations:
The wrath ‘tis hard e’en for an instant to endure,
Of those who virtue’s hill have scaled, and stand secure.
Yogi Shuddhananda Translations:
Their wrath, who’ve climb’d the mount of good,
Though transient, cannot be withstood.
Easy reading Thirukurral by Parimelazhagar :
“குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.”
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
தொடரமைப்பு:
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி, கணம் ஏ உம் காத்தல் அரிது.
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி = (துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய) நற்குணங்களாகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி;
- கணமேயும் காத்தல் அரிது = (தான் உள்ளவளவு) கணமேயாயினும், (வெகுளப்பட்டாரால்) தடுத்தல் அரிது.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- சலியாமையும் பெருமையும்பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். ‘குணம்’ சாதியொருமை♣.
- அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோவழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின் ‘கணமேயும்’ என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின் ‘காத்தலரிது’ என்றும் கூறினார்.
- இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.