Athigaram 3
Kural- 0030
அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
Kural in English Transliteration:
Andhanar Enpor Aravormar Revvuyir Kkum
Sendhanmai Poontozhuka Laan.
Couplet Explanation:
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
மு.வ உரை:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
கலைஞர் உரை:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும்
சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
Rev. Dr. G.U.Pope Translations:
Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue’s son’s the name of ‘Anthanar’ men give.
Yogi Shuddhananda Translations:
With gentle mercy towards all,
The sage fulfils the vitue’s call.
Easy reading Thirukurral by Parimelazhagar :
“அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.”
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்.
தொடரமைப்பு:
எ உயிர்க்கும் செம் தண்மை பூண்டு ஒழுகலான் அந்தணர் என்போர் அறவோர்.
- பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்) எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் = எல்லா உயிர்கள்மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்;
- அந்தணர் என்போர் அறவோர் = அந்தணர் என்று சொல்லப்படுவார் துறவறத்தின் நின்றவர்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- ‘பூணுதல்’ விரதமாகக் கோடல். அந்தணர் என்பது, அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர்ஆகலின், அஃது அவ்வருளுடையார்க்கு அன்றிச் செல்லாது என்பது கருத்து.
- அவ்வாறு ஆணை உடையார் ஆயினும், உயிர்கள்மாட்டு அருளுடையார் என்பது இதனால் கூறப்பட்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.