Tamil Language Thirukkural

Thirukkural -0027

Written by Thamizh Nadu .com

Athigaram 3

Kural- 0027

அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

Kural in English Transliteration:

Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku.

Couplet Explanation:

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

மு.வ உரை:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

கலைஞர் உரை:

ஐம்புலன்களின்   இயல்பை  உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன்
கொண்டவனையே உலகம் போற்றும்.

Rev. Dr. G.U.Pope Translations:

Taste, light, touch, sound , and smell: who knows the way
Of all the five, -the world submissive owns his sway.

Yogi Shuddhananda Translations:

They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

“சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு.” 

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்

வகை தெரிவான் கட்டே உலகு.

தொடரமைப்பு: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை, தெரிவான் கட்டு ஏ உலகு.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை = சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்று சொல்லப்பட்ட (தன்மாத்திரைகள்) ஐந்தனது கூறுபாட்டையும்;
தெரிவான் கட்டே உலகு = ஆராய்வான் கண்ணதே உலகம்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
அவற்றின் கூறுபாடாவன- பூதங்கட்கு முதலாகிய அவைதாம் ஐந்தும், அவற்றின் கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதுமாம்.
‘வகைதெரிவான் கட்டு’ என உடம்பொடுபுணர்ந்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவியாகிய மான் ஆங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றாம்.
தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதலாவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே யாவதல்லது விகுதியாகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன்மாத்திரைகளும் ஆகிய ஏழும் தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடையவெனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பூதங்களுமாகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியேயாவதல்லது பகுதியாகாவெனவும், புருடன் தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும், இரண்டும் அல்லன் எனவும் சாங்கிய நூலுள் ஓதியவற்றான் ஆராய்தல்.
இவ்விருபத்தைந்துமல்லது உலகெனப் பிறிது ஒன்று இல்லையென உலகினது உண்மையறிதலின் அவனறிவின் கண்ணதாயிற்று.
இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்தவித்தலும், யோகப்பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment