Athigaram 3
Kural- 0026
அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
Kural in English Transliteration:
Seyarkariya Seyvaar Periyar Siriyar
Seyarkariya Seykalaa Thaar.
Couplet Explanation:
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.
மு.வ உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
கலைஞர் உரை:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும்,சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
Rev. Dr. G.U.Pope Translations:
Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew.
Yogi Shuddhananda Translations:
The small the paths of ease pursue
The great achieve things rare to do.
Easy reading Thirukurral by Parimelazhagar :
“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.”
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார்.
தொடரமைப்பு: செயற்கு அரிய செய்வர் பெரியர், செயற்கு அரிய செய்கலாதார் சிறியர்.
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) செயற்கரிய செய்வார் பெரியர் = (ஒத்த பிறப்பினாராய மக்களுள்) செய்தற்கு (எளியவற்றைச் செய்யாது) அரியவற்றைச் செய்வார் பெரியர்;
- செயற்கரிய செய்கலாதார் சிறியர் = (அவ்வெளியவற்றைச் செய்து) அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- செயற்கு எளியவாவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறிவழிகளால் புலன்களிற் செலுத்தலும், வெஃகலும், வெகுடலும் முதலாயின.
- செயற்கு அரியவாவன இயமம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள்♣.
நீரிற் பலகான் மூழ்கல் (புறப்பொருள் வெண்பா மாலை, வாகைத்திணை, 14) முதலாய “நாலிரு வழக்கிற் றாபத பக்கம்◯” என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.
Leave a Comment
You must be logged in to post a comment.