Tamil Language Thirukkural

Thirukkural -0025

Written by Thamizh Nadu .com

Athigaram 3

Kural- 0025

அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

Kural in English Transliteration:

Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan
Indhirane Saalung Kari.

Couplet Explanation:

Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.

மு.வ உரை:

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:

அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

கலைஞர் உரை:

புலன்களை   அடக்க  முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச்
சான்றாக   இந்திரன்   விளங்கி, ஐம்புலன்களால்  ஏற்படும்  ஆசைகளைக்
கட்டுப்படுத்தியதால் வான்புகழ்  கொண்டவர்களின்  ஆற்றலை   எடுத்துக்
காட்டுகிறான்.

Rev. Dr. G.U.Pope Translations:

Their might who have destroyed ‘the five,’ shall soothly tell
Indra, the lord of those in heaven’s wide realms that dwell.

Yogi Shuddhananda Translations:

Indra himself has cause to say
How great the power ascetics’ sway.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா

னிந்திரனே சாலுங் கரி.

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்

இந்திரனே சாலும் கரி.

தொடரமைப்பு: ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) ஐந்து அவித்தான் ஆற்றல் = (புலன்களிற் செல்கின்ற) அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு;
அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி = அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையுஞ் சான்று.
பரிமேலழகர் உரை விளக்கம்:
‘ஐந்தும்’ என்னும் முற்றும்மையும், ‘ஆற்றற்கு’ என்னும் நான்கன் உருபும் விகாரத்தால் தொக்கன.
தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று, அவித்தானது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின் ‘இந்திரனே சாலுங்கரி’ என்றார்.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment